For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இப்ப கொரோனா அதிகரிக்க இந்த 4 விஷயம் தான் முக்கிய காரணமாம்... ஜாக்கிரதையா இருங்க...

|

தற்போது செயலில் உள்ள கோவிட்-19 வழக்குகளின் எண்ணிக்கை இந்தியாவின் பல மாநிலங்களில் அதிகரித்து வருகின்றன. 2020 ஆம் ஆண்டில் பல மாதங்களாக கோவிட்-19 வழக்குகளின் எண்ணிக்கையில் கணிசமான வீழ்ச்சிக் காணப்பட்டது. ஆனால் தற்போது கடந்த இரண்டு மாதங்களில் சில இந்திய மாநிலங்களில் கொரோனா தொற்றுநோயாளிகளின் எண்ணிக்கையில் சீரான வளர்ச்சி தெரிகிறது. இதைப் பார்க்கும் போது, பலருக்கும் அச்சம் அதிகரித்துள்ளது எனலாம்.

கோவிட்-19 இன்னும் பலரது வாழ்க்கையில் அழிவை உருவாக்கி வருகிறது. இது ஒருவரது வாழ்க்கையை சீர்குலைத்தது மட்டுமல்லாமல் மன அமைதியையும் கெடுத்து வருகிறது, கோவிட்-19 ஒருவரை அண்டாமல் இருக்க வேண்டுமானால், முகமூடி அணிவது, சமூக விலகல் மற்றும் கை கழுவுவது போன்ற கோவிட்-19 நெறிமுறையை தவறாமல் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். ஆனால் பலர் அதை தவறான வழியில் பின்பற்றி வருகின்றனர்.

இப்போது சமீப காலமாக கொரோனா அதிகம் பரவுவதற்கு மக்கள் செய்யும் பொதுவான தவறுகள் என்னவென்பதை அறிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தவறான முறையில் முகமூடியை அணிவது

தவறான முறையில் முகமூடியை அணிவது

தற்போது கொரோனா வழக்குகளில் கணிசமான உயர்வு ஏற்படுவதற்கு முக்கியமான ஒரு காரணம் மக்கள் முகமூடியை தவறான முறையில் அணிவது தா. சிலர் முகமூடியை பாதியாக அணிய முனைகிறார்கள். இது மிகவும் சிக்கலானது. இதுவரை கொரோனாவைக் முற்றிலும் கட்டுபடுத்தும் வழி கண்டுபிடிக்கப்படாததால், வெளியே செல்லும் போது முகமூடியை அணிவது என்பது மிகவும் கட்டாயமாகும். அதுவும் மூக்கு, வாய் இரண்டையும் சரியாக மறைக்க வேண்டும். ஆனால் தற்போது மக்களுள் பெரும்பாலனோர் முகமூடியை தாடையின் மேல் வைத்துக் கொள்கிறார்கள். இன்னும் சிலர் மூக்கை மூடிக் கொண்டு வாயை வெளிப்படுத்துகிறார்கள். மூக்கு, வாய் இரண்டுமே கொரோனா வைரஸ் எளிதில் நுழையும் பகுதி என்பதால் இந்த பகுதிகளை சரியாக மூடாமல் இருந்தால், அது நோய்த்தொற்றின் அபாயத்தை அதிகரிக்கும். மேலும் முகமூடி வியர்வை காரணமாக ஈரமாகும் போது அதை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.

லாக்டவுன் தளர்த்தப்பட்டதால், பலரும் பாதுகாப்பு நடவடிக்கைகளைக் குறைத்திருப்பது

லாக்டவுன் தளர்த்தப்பட்டதால், பலரும் பாதுகாப்பு நடவடிக்கைகளைக் குறைத்திருப்பது

பல மாதங்களுக்குப் பிறகு லாக்டவுன் தளர்த்தப்பட்டதோடு, பயணக் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன. இதனால் பலர் மால்கள், தியேட்டர்கள், ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலா என செல்ல ஆரம்பித்துவிட்டனர். லாக்டவுன் தளர்த்தப்பட்டதால், கொரோனா தொற்று பரவல் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது என்று அர்த்தமல்ல. எவ்வளவு தான் தளர்வுகள் இருந்தாலும், எப்போதும் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள முயல வேண்டும். தேவையில்லாத கூட்டம் நிறைந்த இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும். அடிக்கடி வெளியே சுற்றுவதைத் தவிர்க்க வேண்டும். என்ன தான் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 16 முதல் தடுப்பூசி பொது மக்களுக்கு போடப்பட்டு வந்தாலும், தடுப்பூசியைப் பெற்ற பின்னர் முகமூடி அணிய வேண்டிய அவசியம் இல்லை என்ற தவறான எண்ணம் மக்களிடையே உள்ளது. ஆனால், இச்செயல் மற்றும் எண்ணம் முற்றிலும் தவறானது மற்றும் அவ்வாறு செய்யக்கூடாது.

நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று நினைப்பது

நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று நினைப்பது

என்ன தான் நமது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களாக இருந்தாலும், அவர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை தவறாமல் மேற்கொள்வார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கக்கூடாது. எந்த ஒரு உத்தரவாதமும் இல்லாமல், அனுமானங்களின் அடிப்படையில் நம்மை அறியாமல் தொற்று நபருடன் தொடர்பு கொள்ள வாய்ப்புள்ளது. எனவே யாருடன் பழகும் போதும் விழிப்போடு இருங்கள். முடிந்தளவு அவர்களுடன் குறைந்தபட்ச இடைவெளியில் தொடர்பு கொள்வதைத் தவிர்த்திடுங்கள்.

பாதுகாப்பாக இருப்பதாக நினைத்துக் கொள்வது

பாதுகாப்பாக இருப்பதாக நினைத்துக் கொள்வது

நீண்ட காலமாக பலரால் நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்திக்க முடியவில்லை. ஆகவே ஊரடங்கு தளர்விற்கு பின், வெளியே செல்லாமல் பலர் வீட்டில் பார்ட்டி போன்று ஏற்பாடு செய்தனர். ஆனால் இம்மாதிரியான செயல் உண்மையிலேயே இந்த சூழ்நிலையில் அவசியமா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

கோவிட்-19 நெருங்காமல் இருக்க எடுக்க வேண்டிய அத்தியாவசிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

கோவிட்-19 நெருங்காமல் இருக்க எடுக்க வேண்டிய அத்தியாவசிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

#1

மூகமூடி அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது மற்றும் கையை சுத்தப்படுத்துவது போன்ற செயல்களை தினமும் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

#2

#2

நீங்கள் அதிகம் தொடும் இடங்கள் மற்றும் பொருட்களை அவ்வப்போது கிருமிநீக்கம் செய்ய வேண்டும். குறிப்பாக கதவு கைப்பிடிகள், சாவிகள், தரை மற்றும் பிற கைப்பிடிகள் போன்றவற்றை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும்.

#3

#3

கூட்டம் நிறைந்த இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்கவும் அல்லது தேவையற்ற பார்ட்டிகளை வீட்டில் நடத்துவதைத் தவிர்க்கவும். உங்கள் நண்பர்கள் மற்றும் அன்பானவர்களுடன் வீடியோ அழைப்புகள் மூலம் தொடர்பில் இருக்க முயற்சிக்கவும்.

#4

#4

வீட்டிலேயே உடற்பயிற்சி செய்யவும் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பழங்கள், காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் மற்றும் பயறு வகைகளை சாப்பிடவும். பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் ஜங்க் உணவுகளைத் தவிர்க்கவும்.

#5

#5

சர்க்கரை நோய், இதய நோய், இரத்த அழுத்தம் போன்ற நாள்பட்ட ஆரோக்கிய பிரச்சனை உள்ளவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவதற்கான அதிக ஆபத்து உள்ளது. எனவே, அவர்கள் மருந்துகளைத் தவிர்ப்பதைத் தவிர்க்க வேண்டும் மற்றும் அவர்களின் ஆரோக்கியத்தை கண்காணிக்க வேண்டும். முக்கியமாக நோய்வாய்ப்பட்டவர்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்கவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Deadly Mistakes Behind the Rise in Number Of Covid-19 Cases

Here are the common mistakes we commit everyday and unintentionally send the Covid-19 case numbers soaring.
Story first published: Friday, April 16, 2021, 16:33 [IST]