For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நற்செய்தி! இந்த 3 உணவுப் பொருட்களும் கொரோனாவில் இருந்து பாதுகாக்குமாம் - ஆய்வில் தகவல்

வட கரோலினா மாநில பல்கலைக்கழகம், சமீபத்தில் நடத்திய ஆய்வானது, டார்க் சாக்லேட் மற்றும் க்ரீன் டீ உள்ளிட்ட சில உணவுகள் மக்கள் மத்தியில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க உதவுவதாக கூறுகிறது.

|

கொடிய கொரோனா வைரஸிற்கு எதிராக மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் அனைத்து விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களும் தீவிரமாக இறங்கியுள்ளனர். சொல்லப்போனால், இது தான் பலரது முதன்மை குறிக்கோளாக உள்ளது. மேலும் இந்த வைரஸிற்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிக்க அனைத்து மருத்துவ முறைகளிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Dark Chocolate, Green Tea And Grapes Can Protect You From COVID-19, Claims Study

அதில் பல ஆராய்ச்சிகள் இயற்கை மற்றும் தாவர அடிப்படையிலான சிகிச்சையை வளர்ப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்றன. அதில் வட கரோலினா மாநில பல்கலைக்கழகம், சமீபத்தில் நடத்திய ஆய்வானது, டார்க் சாக்லேட் மற்றும் க்ரீன் டீ உள்ளிட்ட சில உணவுகள் மக்கள் மத்தியில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க உதவுவதாக கூறுகிறது.

MOST READ: கொரோனாவின் புதிய அறிகுறியை வெளியிட்ட விஞ்ஞானிகள் - அது என்ன அறிகுறி?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டார்க் சாக்லேட், க்ரீன் டீ மற்றும் திராட்சை எப்படி கொரோனா தொற்றை தடுக்கிறது?

டார்க் சாக்லேட், க்ரீன் டீ மற்றும் திராட்சை எப்படி கொரோனா தொற்றை தடுக்கிறது?

டார்க் சாக்லேட், க்ரீன் டீ மற்றும் திராட்சை போன்ற சில உணவுகள் மற்றும் பானங்கள் வேதியியல் சேர்மங்களைக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக வைரஸில் உள்ள குறிப்பிட்ட நொதி அல்லது புரோட்டீஸின் செயல்பாட்டைத் தடுக்கும் ஃபைட்டோநியூட்ரியண்ட்டுகள் அதிகம் நிறைந்துள்ளன. இது மனித உடலை வைரஸ் கடுமையாக பாதிக்காதவாறும், ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுவதையும் தடுக்கும்.

MOST READ: கொரோனா வந்தா 5 மற்றும் 10 ஆவது நாள் தான் ரொம்ப முக்கியமானதாம் - ஏன் தெரியுமா?

ஃப்ளேவோனால்கள் மற்றும் புரோஅந்தோசயனிடின்கள் என்றால் என்ன?

ஃப்ளேவோனால்கள் மற்றும் புரோஅந்தோசயனிடின்கள் என்றால் என்ன?

வட கரோலினா மாநில பல்கலைக்கழகத்தை அடிப்படையாகக் கொண்ட தாவர உயிரியலாளர்களால் நடத்தப்பட்ட ஆய்வின் படி, ஃபைட்ரோ நியூட்ரியன்ட்டுகளின் பல துணை வகைகளான ஃப்ளேவோனால்கள் மற்றும் புரோஅந்தோசயனிடின்கள் டார்க் சாக்லேட், க்ரீன் டீ மற்றும் திராட்சைகளில் உள்ளன. இந்த ஃப்ளேவோனால்கள் மற்றும் புரோஅந்தோசயனிடின்கள் கொரோனா வைரல் உள்ள Mpro-வின் செயல்பாட்டை வெற்றிகரமாக தடுக்கிறது. மேலும் இந்த பைட்டோநியூட்ரியன்களில் உள்ள ஆன்டி-வைரல், அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் போன்றவை உயர் இரத்த அழுத்த அபாயங்களைக் குறைப்பதிலும், பெருமூளை மற்றும் அறிவாற்றல் செயல்பாடுகளை மேம்படுத்துவதிலும் திறமையானவை என்பதை நிரூபித்துள்ளன.

MOST READ: கொரோனா வரக்கூடாதா? அப்ப இந்த 3 பொருளை தினமும் மறக்காம சுத்தம் செய்யுங்க...

ஆய்வு

ஆய்வு

இந்த ஆராய்ச்சிக்காக, ஆய்வாளர்கள் ஃப்ளேவோனால்கள் மற்றும் புரோஅந்தோசயனிடின்களின் பல்வேறு துணை வகைகளை ஒரு கணினியில் உள்ள MPro-வுக்கு அறிமுகப்படுத்தினர். இதற்காக கொக்கோ விதை பவுடர், டார்க் சாக்லேட், இரண்டு வகையான மஸ்கடின் திராட்சை மற்றும் க்ரீன் டீ போன்ற 5 வெவ்வேறு தாவரங்களில் இருந்து வெவ்வேறு பைட்டோநியூட்ரியன்கள் எடுக்கப்பட்டன. அதில் அவர்கள் கண்டுபிடித்தது என்னவென்றால், இந்த வேதியியல் சேர்மங்களால் MPro-வின் வெவ்வேறு பகுதிகளுடன் பிணைக்க முடிந்தது.

MOST READ: கொரோனா இருமல் எப்படி இருக்கும்-ன்னு தெரியுமா? இத படிங்க தெளிவாயிடுவீங்க...

ஆய்வு ஆசிரியரின் கூற்று...

ஆய்வு ஆசிரியரின் கூற்று...

என்.சி. மாநிலத்தில் உள்ள தாவர மற்றும் நுண்ணுயிர் உயிரியலின் பேராசிரியரும், ஆய்வுடன் தொடர்புடைய ஆசிரியருமான டி-யூ ஸீயின் கூற்றுப்படி, "SARS-CoV-2 வைரஸ் தன்னைப் பிரதிபலிக்கவும் ஒன்றுசேரவும் வைரஸில் உள்ள MPro தேவைப்படுகிறது." "இந்த MPro-வை நாம் தடுக்க அல்லது செயலிழக்கச் செய்தால், வைரஸ் இறந்துவிடும்," என்று அவர் கூறினார்.

MOST READ: கொரோனா இருந்தா இருமல், காய்ச்சலுக்கு முன்னாடி இந்த அறிகுறிலாம் இருக்குமாம்... உஷாராகிகோங்க...

கொரோனாவைத் தடுக்கக்கூடிய பிற உணவுகள்

கொரோனாவைத் தடுக்கக்கூடிய பிற உணவுகள்

மேற்கூறிய ஆய்வில் குறிப்பிட்டுள்ள உணவுகள் மற்றும் பானங்களைத் தவிர, கொரோனாவைத் தடுக்கக்கூடிய பிற உணவுகளும் உள்ளன. இன்ஸ்டிடியூட் ஆப் மூலக்கூறு வைராலஜி, உல்ம் பல்கலைக்கழக மருத்துவ மையம், டெக்னிச் யுனிவர்சிட்டட் டிரெஸ்டன் மற்றும் காக்னிவெர்டே ஜிஎம்பிஹெச் ஆகியோரால் நடத்தப்பட்ட மற்றொரு சுவாரஸ்யமான ஆராய்ச்சியில், கிரான்பெர்ரி ஜூஸ் மற்றும் மாதுளை சாறு ஆகியவை SARS-CoV-2 வைரஸைக் கொல்லும் ஆற்றலைக் கொண்டுள்ளன என்பது கண்டறியப்பட்டது. சோக் பெர்ரி பழச்சாறுகள் வைரஸின் தொற்றுநோயை கிட்டத்தட்ட 3,000 மடங்கு குறைக்கின்றன, அதேப் போல் எல்டர்பெர்ரி சாறு சுமார் 10 மடங்கும் குறைக்கின்றன என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Dark Chocolate, Green Tea And Grapes Can Protect You From COVID-19, Claims Study

Coronavirus: Dark chocolate, green tea and grapes can protect you from COVID-19, claims study. Read on to know more..
Desktop Bottom Promotion