For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டிசம்பர் மாதத்தில் கொரோனா தீவிரமாக இருக்கும் - எச்சரிக்கும் நிபுணர்கள்

2020 குளிர்காலத்தில் கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலைகளைத் தூண்டக்கூடும் என்று உலக சுகாதார வல்லுநர்கள் நம்புகின்றனர். மேலும் இது முந்தைய காலத்தை விட மிகவும் மோசமானதாக இருக்கும்.

|

கடந்த வருடம் டிசம்பர் 31, 2019 அன்று சீனாவின் வுஹான் மாகாணத்தில் ஒரு மர்மமான நிமோனியா போன்ற ஒரு நோயாக வெளிவந்த கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இன்று வரை கொரோனா வைரஸ் சுமார் 213 நாடுகளுக்கு பரவியுள்ளது. இது உலகெங்கிலும் சுமார் 23 மில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதித்து, 8,12,537 இறப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஒரு கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், SARS-CoV-2 வைரஸ் கணிசமாக மாறவில்லை என்றாலும், இது இன்னும் ஆபத்தான விகிதத்தில் பரவி வருகிறது.

Coronavirus Will Get WORSE In Winters: Health Experts Warn

எனவே கொரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கும் பணியில் உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு வருகிறார்கள் என்றாலும், அவ்வளவு விரைவில் கண்டுபிடிக்க முடியாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குளிர்காலத்தில் மற்றொரு அலை

குளிர்காலத்தில் மற்றொரு அலை

கொரோனா வைரஸ் முதலில் 2019 ஆம் ஆண்டின் குளிர்காலத்தில் தான் பரவ ஆரம்பித்தது. தற்போது 2020 ஆம் ஆண்டின் குளிர்காலமே வரப் போகிறது. இந்த காலத்தில் கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலைகளைத் தூண்டக்கூடும் என்று உலக சுகாதார வல்லுநர்கள் நம்புகின்றனர். மேலும் இது முந்தைய காலத்தை விட மிகவும் மோசமானதாக இருக்கும்.

குளிர்ச்சியான வெப்பநிலையில் உயிர் வாழும்

குளிர்ச்சியான வெப்பநிலையில் உயிர் வாழும்

கொரோனா வைரஸ் குளிர்ந்த வெப்பநிலையில் நீண்ட காலம் உயிர்வாழக்கூடும் என்று ஆரம்ப கால அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தி பிரிண்டில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின் படி, முன்பு உலக சுகாதார அமைப்புடன் பணிபுரிந்த தொற்றுநோய் நிபுணர் கிளாஸ் ஸ்டோஹர், "கொரோனா வைரஸிந் நடத்தை மற்ற சுவாசநோய்களில் இருந்து மிகவும் வேறுபட்டதில்லை. குளிர்காலத்தில், இந்த தொற்றுநோய் மீண்டும் தீவிரமாக பரவ ஆரம்பிக்கும்."

டிசம்பரில் இறப்பு விகிதம் அதிகரிக்கும்

டிசம்பரில் இறப்பு விகிதம் அதிகரிக்கும்

கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலையை சமாளிப்பதற்கு உலகம் தயாராக இருக்க வேண்டும். ஏனெனில் தற்போது நாம் போராடிக் கொண்டிருப்பதை விட மிகவும் மோசமாக டிசம்பர் மாதத்தில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருக்கலாம். இங்கிலாந்தின் அகாடமி ஆஃப் மெடிக்கல் சயின்ஸால் செய்யப்பட்ட மாடலிங் படி, 2020 ஆம் ஆண்டு வரக்கூடிய குளிர்காலம் நமக்கு மிகவும் சவாலானதாக இருக்கலாம். முக்கியமாக 2021 ஜனவரி/பிப்ரவரி மாதங்களில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் மற்றும் இறப்புக்களின் எண்ணிக்கை உச்சத்தில் இருக்கும்.

தடுப்பூசியை நம்பி திட்டமிடாமல் இருப்பது முட்டாள்தனம்

தடுப்பூசியை நம்பி திட்டமிடாமல் இருப்பது முட்டாள்தனம்

இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி கிறிஸ் விட்டி, "கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்து தடுப்பூசியை உருவாக்க ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் விரைவான விகிதத்தில் பணியாற்றி வந்தாலும், பரவலைக் கட்டுப்படுத்த ஒரு தடுப்பூசியை மட்டும் நாம் நம்ப முடியாது. அதுவும் குளிர்காலம் வருவதற்கு முன் கிடைப்பது என்பது கடினம். "

மேலும் நியூஸ் ஸ்கையிடம் பேசிய அவர், "அடுத்த குளிர்காலத்திற்குள் தடுப்பூசி கிடைத்துவிடும் என்று நம்பி இருப்பது என்பது முட்டாள்தனமான ஒன்று. ஒரு கொடிய தொற்றுநோய்க்கு சிறப்பான மற்றும் பாதுகாப்பான தடுப்பூசியை குறைந்த காலத்திற்குள் கண்டறிவது என்பது இயலாத ஒன்று. என்ன தான் தடுப்பூசியை கண்டறிந்தாலும், அது எவ்வாறு வேலை செய்கிறது என்பதை சோதனை செய்வதற்கும், பாதுகாப்பானது என்பதை உறுதி செய்வதற்கும் நிச்சயம் காலம் எடுக்கும். "

தற்போதைய வளங்களைக் கொண்டு திட்டமிடவும்

தற்போதைய வளங்களைக் கொண்டு திட்டமிடவும்

"தற்போதைய சூழ்நிலையில் நம்மிடம் தடுப்பூசி இல்லை என்ற அடிப்படையில் நாம் திட்டமிட வேண்டும். ஒருவேளை பயனுள்ள மற்றும் பாதுகாப்பான தடுப்பூசி என்று நிரூபிக்கப்பட்டு, ஒரு வலுவான நிலையில் இருந்தால் பிரச்சனை இல்லை. ஆனால் எப்போதுமே நம்மிடம் உள்ள வளங்களைக் கொண்டு தான் திட்டம் தீட்ட வேண்டும்" என்று கூறி பேராசிரியர் கிறிஸ் விட்டி முடித்தார்.

குளிர்காலத்திற்கு நாம் எவ்வாறு தயாராகலாம்?

குளிர்காலத்திற்கு நாம் எவ்வாறு தயாராகலாம்?

உலகெங்கிலும் உள்ள சுகாதார வல்லுநர்களும் இதேப் போன்ற உணர்வுகளை வெளியிடுவதால், வரக்கூடிய குளிர்கால மாதங்களில் கோவிட்-19 வெடிப்பு மோசமாக இருக்கக்கூடும் என்பது தெரிகிறது. ஒவ்வொரு நாடும் தங்களிடம் உள்ள வளங்கைக் கொண்டு வலிமையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

முடிவு

முடிவு

நமக்கு தடுப்பூசி கிடைப்பதற்கு முன்பே குளிர்காலம் வருவதால், கொரோனா வைரஸ் மக்களிடையே மோசமாக பரவுவதைத் தவிர்க்க, அதற்கேற்ப மூலோபாயம் செய்ய வேண்டும். குளிர்ந்த காலநிலை மற்றும் அதிக ஈரப்பதம் தொற்றுநோயின் பரவலை அதிகரிக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுவதால், கொரோனா வைரஸிற்கான பரிசோதனையை அதிகப்படுத்துதல், சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்றுதல் மற்றும் தனிமனித சுகாதார நடவடிக்கைகளை எவ்வித குறைபாடும் இல்லாமல் பின்பற்றுதல் போன்றவை குளிர்காலங்களில் முக்கியமான ஒன்றாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Coronavirus Will Get Worse In Winters: Health Experts Warn

2020 winter season is fast approaching and global health experts believe that it could trigger a second wave of the pandemic--possibly much worse than the first one.
Desktop Bottom Promotion