For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா சோதனையில் நெகட்டிவ் வந்துச்சா? இருந்தாலும் அறிகுறிகள் தென்படுதா? அப்ப அதுக்கு இதான் காரணம்...

கொரோனா சோதனையில் நெகட்டிவ் என்று காட்டிய பின்னரும் சில நோயாளிகள் கொரோனா அறிகுறிகளால் போராடுகிறார்கள். மருத்துவ நிபுணர்கள் இந்த நிலையை "நீண்ட கால கோவிட்" என்று அழைக்கின்றனர்.

|

கொரோனா வைரஸ் சீனாவின் வூஹான் மாகாணத்தில் தோன்றி, உலகெங்கிலும் பரவ ஆரம்பித்து 10 மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. ஆனால் இன்னும் இந்த கொடிய நோய்க்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கவில்லை. கொரோனா வைரஸ் குறித்து ஆராய்ச்சியாளர்களும், மருத்துவ நிபுணர்களும் தொடர்ந்து கற்றுக் கொண்டு வந்தாலும், கொரோனா வைரஸின் பல அம்சங்கள் மற்றும் அது உண்டாக்கும் நோய் இன்னும் அறியப்படாத ஒன்றாக உள்ளது.

Coronavirus: What Is Long Covid? Common Symptoms That Indicate You Have It

கோவிட்-19 வழக்குகளில் பெரும்பாலானவை லேசானவை என்றாலும், கொரோனா சோதனையில் நெகட்டிவ் என்று காட்டிய பின்னரும் சில நோயாளிகள் கொரோனா அறிகுறிகளால் போராடுகிறார்கள். மருத்துவ நிபுணர்கள் இந்த நிலையை "நீண்ட கால கோவிட்" என்று அழைக்கின்றனர். மேலும் இது கோவிட்-19 இல் தப்பிய மக்களின் வாழ்க்கையை பலவீனப்படுத்தும் விளைவைக் கொண்டிருக்கிறது. அதோடு ஏன் சிலருக்கு நீண்ட கால கோவிட் ஏற்படுகிறது மற்றும் எப்போது அவர்கள் இந்த வைரஸ் தொற்றில் இருந்து முழுமையாக மீள்வார்கள் என்பது குறித்து மருத்துவ சமூகத்திற்கு தெளிவாக தெரியவில்லை.

MOST READ: கொரோனா இருந்தா இருமல், காய்ச்சலுக்கு முன்னாடி இந்த அறிகுறிலாம் இருக்குமாம்... உஷாராகிகோங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நீண்ட கால கோவிட் நோயாளிகள் சந்திக்கும் பொதுவான அறிகுறிகள்

நீண்ட கால கோவிட் நோயாளிகள் சந்திக்கும் பொதுவான அறிகுறிகள்

நாவல் கொரோனா வைரஸ் ஒவ்வொருவரிடமும் வித்தியாசமாக வெளிப்படுகிறது. நீண்ட கால கோவிட்டால் பாதிக்கப்பட்ட இரண்டு நோயாளிகள் வெவ்வேறு அறிகுறிகளை அனுபவிக்கலாம். இருப்பினும் கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டவர்கள் இடையே மிகவும் பொதுவான அம்சமாக உடல் சோர்வு உள்ளது.

பிற அறிகுறிகள்

பிற அறிகுறிகள்

கோவிட்-19 இன் நீடித்த அறிகுறிகளான பல மாதங்களாக மூச்சுத்திணறல், நீங்காத இருமல், தொடர்ச்சியான மூட்டு வலி, தசை வலி, காது மற்றும் கண் பிரச்சனைகள், தலை வலி, வாசனை மற்றும் சுவை இழப்பு, நுரையீரல் பாதிப்பு, மாரடைப்பு, உயிருக்கு ஆபத்தான கட்டிகள், பக்கவாதம் மற்றும் சிறுநீரகங்கள் மற்றும் குடலில் சேதங்கள் போன்றவற்றால் அவஸ்தைப்படுகின்றனர்.

ஆய்வு

ஆய்வு

பிரிஸ்டலை தளமாகக் கொண்ட சவுத்மீட் மருத்துவமனையின் ஒரு அறிக்கையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோவிட்-19 நோயாளிகளில் சுமார் 75 சதவீதம் பேருக்கு கோவிட் இல்லை என்று அறிவிக்கப்பட்ட பிறகும், அந்த நோயாளிகள் சில அறிகுறிகளுடன் தொடர்ந்து போராடி வருகின்றனர். சராசரியாக, இத்தகைய அறிகுறிகளானது மூன்று மாதங்கள் வரை நீடித்திருந்தன.

மற்றொரு ஆய்வு

மற்றொரு ஆய்வு

மற்றொரு ஆரம்ப கால ஆய்வில், கொரோனா வைரஸில் இருந்து தப்பி உயிர் பிழைத்தவர்களிடையே இதய அழற்சி மற்றும் இதய செயலிழப்பு பிரச்சனை இருப்பது தெரிய வந்துள்ளது.

143 கோவிட் நோயாளிகள்

143 கோவிட் நோயாளிகள்

அமெரிக்க மருத்துவ சங்கத்தின் பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், ரோமின் மிகப்பெரிய மருத்துவமனையில் இருந்து வெளியேறிய 143 கோவிட்-19 நோயாளிகளை பின் தொடர்ந்தது. ஏறக்குறைய 2 மாதங்களுக்குப் பிறகு, 87 சதவீத நோயாளிகளுக்கு குறைந்தது ஒரு கொரோனா அறிகுறி இருந்தது மற்றும் பாதி-க்கும் மேற்பட்டவர்கள் உடல் சோர்வால் போராடி வருவது தெரிய வந்தது.

இங்கிலாந்தில் சுமார் 4 மில்லியன் மக்கள் பயன்படுத்தும் கோவிட் சிம்ப்டம் டிராக்கர் ஆப்பில் இருந்து எடுக்கப்பட்ட சமீபத்திய தரவில், கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டவர்களில் 50 பேருக்கு 90 நாட்களுக்குப் பிறகு அறிகுறிகள் இருப்பது தெரிய வந்தது. மேலும் கொரோனா தொற்றில் இருந்து மீண்ட பலர் மனச்சோர்வு மற்றும் பதட்டம் உள்ளிட்ட மனநல பிரச்சனைகளால் போராடி வருகின்றனர்.

கோவிட் நோயாளிகள் எவ்வளவு காலம் தங்களை கவனித்துக் கொள்ள முடியும்?

கோவிட் நோயாளிகள் எவ்வளவு காலம் தங்களை கவனித்துக் கொள்ள முடியும்?

நீண்ட கால கோவிட் ஏற்படுவதற்கு என்ன காரணம்? இந்த கேள்விக்கான பதில்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்க இன்னும் முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். இருப்பினும், உடலின் சில சிறிய பைகளில் வைரஸ் தங்கி நீடிக்கக்கூடும் என்று சிலர் பரிந்துரைக்கின்றனர். உதாரணமாக, குடலில் வைரஸ் இருந்தால், நீண்ட காலம் வயிற்றுப்போக்கு ஏற்படக்கூடும். அதுவே நரம்புகளில் இருக்கும் போது, வாசனையை இழக்கக்கூடும்.

மருத்துவ நிபுணர்கள் உண்மையான காரணத்தைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், நீண்ட கால கோவிட் நோயாளிகள் போதுமான ஓய்வைப் பெறுவதன் மூலமும், நிறைய நீரைக் குடிப்பதன் மூலமும், பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்ப்பதன் மூலமும் தங்களை காத்துக் கொள்ளலாம்.

கோவிட் மீட்பு திட்டம்

கோவிட் மீட்பு திட்டம்

இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையில் (NHS) "கோவிட் மீட்பு திட்டம்" உள்ளது. இது ஒருவரின் ஆற்றலைப் பாதுகாப்பதற்கு மூன்று விஷயங்களைப் பரிந்துரைக்கிறது. அவையாவன:

* போதுமான ஓய்வு எடுக்கவும்

* திட்டமிட்டு நாட்களை கடத்தவும்.

* முன்னுரிமை அளித்தல் - அதாவது நீங்கள் என்ன செய்ய வேண்டும் மற்றும் எதை செய்யலாம் என்பதை தீர்மானிப்பது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Is Long COVID and Why Some Patients Who Have Recovered Continue to Feel Ill for Months

If you’re still struggling with symptoms of COVID-19 months after you have clinically tested negative for the disease. Then you have long Covid.
Desktop Bottom Promotion