For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

A வகை இரத்தப்பிரிவினரை அதிகம் குறி வைக்கும் கொரோனா வைரஸ்... O பிரிவினரை நெருங்காதாம்.. உண்மை என்ன?

சீனாவில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு சிறிய ஆய்வில், டைப் ஏ இரத்தப்பிரிவினர் கொரோனா வைரஸால் அதிகம் தாக்கப்படுவதாகவும், டைப் O இரத்த பிரிவினரின் உடல் கொரோனா வைரஸை எதிர்ப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

|

உலகெங்கிலும் அனைத்து நாடுகளிலும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் வழக்குகள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த கொரோனா வைரஸை அழிக்கும் தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.

Coronavirus: People With Blood Type A May Be More Vulnerable To COVID-19, Study Claims

இந்நிலையில் சீனாவில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு சிறிய ஆய்வில், டைப் ஏ இரத்தப்பிரிவினர் கொரோனா வைரஸால் அதிகம் தாக்கப்படுவதாகவும், டைப் O இரத்த பிரிவினரின் உடல் கொரோனா வைரஸை நன்கு எதிர்ப்பதாகவும் தெரிய வந்துள்ளது. உலகம் முழுவதும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு அவஸ்தைப்பட்டு வரும் இந்நேரத்தில், இந்த வைரஸ் குறித்த சிறு சிறு கண்டுபிடிப்புக்களும் மிகவும் முக்கியமானவை.

MOST READ: 40 வயதிற்கு மேலானவர்களை அதிகம் குறி வைக்கும் கொரோனா வைரஸ்.. ஏன்?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
2,173 நோயாளிகள்

2,173 நோயாளிகள்

சீனாவின் வுஹான் மற்றும் ஷென்சென் ஆகிய மூன்று மருத்துவமனைகளில் இருந்து உறுதிப்படுத்தப்பட்ட SARS-CoV-2 பரிசோதனையுடன், COVID-19 உள்ள 2,173 நோயாளிகளின் இரத்தக் பிரிவுகளை இந்த ஆய்வு ஆராய்ந்தது.

இந்த ஆய்வு சீனாவின் வுஹான் ஜின்யின்டன் மருத்துவமனையில் இருந்து 206 இறந்த வழக்குகள் உட்பட, மொத்தம் 1,775 கொரோனா வைரஸ் நோயாளிகளையும், வுஹான் பல்கலைகழகத்தின் ரென்மின் மருத்துவமனை மற்றும் ஷென்சென் மருத்துவமனையில் இருந்த 113 மற்றும் 285 கொரோனா நோயாளிகளையும் கொண்டு கூறுகிறது.

MOST READ: வரலாற்றில் 200 மில்லியன் மக்களை கொன்று குவித்த உலகின் மிகவும் கொடூரமான தொற்றுநோய் எது தெரியுமா?

இரத்தப் பிரிவுகள்

இரத்தப் பிரிவுகள்

மேலும் இந்த ஆய்வு, வுஹானில் 3694 சாதாரண மக்களில் ABO இரத்தப்பிரிவு முறையே A, B, AB மற்றும் O ஆகியவற்றுக்கு 32.16%, 24.90%, 9.10% மற்றும் 33.84% விநியோகத்தைக் காட்டியது. வுஹான் ஜின்யின்டன் மருத்துவமனையைச் சேர்ந்த 1775 COVID-19 நோயாளிகளில் உள்ள A, B, AB மற்றும் O இரத்தப்பிரிவுகளில் 37.75%, 26.42%, 10.03% மற்றும் 25.80% இருப்பதாக கூறுகிறது. இந்த கணக்கெடுப்பைப் பார்க்கும் போது, அதில் A வகை இரத்தப்பிரிவைச் சேர்ந்தவர்கள் கொரோனா வைரஸால் அதிகம் தாக்கப்பட்டிருப்பதும், O வகை இரத்தப்பிரிவினருக்கு குறைவாக இருப்பதும் தெரிய வந்தது.

MOST READ: கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க சாப்பிடக்கூடாத உணவுகள் என கூறப்படுபவைகள்!

ஆய்வு முடிவு

ஆய்வு முடிவு

இந்த ஆய்வின் முடிவில், A வகை இரத்த பிரிவினருக்கு கொரோனா வைரஸ் தாக்கத்தின் அபாயம் அதிகம் இருப்பதும், O வகை இரத்த பிரிவினருக்கு இந்த தொற்றின் அபாயம் குறைவாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.

MOST READ: இந்த பழக்கம் இருப்பவர்களை கொரோனா வைரஸ் வேகமா தாக்க வாய்ப்பிருக்காம்.. எச்சரிக்கையா இருங்க...

இரத்த வகைகளும்... தொற்றுக்களும்...

இரத்த வகைகளும்... தொற்றுக்களும்...

இரத்த வகைகளில் உள்ள ஆன்டிஜென் வெளிப்பாட்டில் உள்ள வேறுபாடுகள் தான் பல நோய்த்தொற்றுகளை அதிகரிக்கவோ அல்லது அதன் அபாயத்தை குறைக்கவோ காரணமாக உள்ளது. நுண்ணுயிரிகள், வைரஸ்கள் மற்றும் ஒட்டுண்ணிகள் ஆகியவற்றிற்கான ஏற்பிகளாக அல்லது மைய ஏற்பிகளாக செயல்படுவதன் மூலம் இரத்தப்பிரிவுகள் தொற்று நோய்களில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

MOST READ: கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்கணுமா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...

ஆய்வு தேவை

ஆய்வு தேவை

சீனாவின் ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான ஆய்வு இன்னும் மதிப்பாய்வு செய்யப்படவில்லை மற்றும் இது ஒரு ஆரம்ப ஆராய்ச்சி என்பதால், இதற்கு மேலும் ஆய்வு தேவையாக உள்ளது. அதோடு இந்த ஆய்வைக் கொண்டு, O வகை இரத்தப்பிரிவினர் முற்றிலும் பாதுகாப்பானவர்கள் என்று உறுதியாக கூற முடியாது. எனவே உலக சுகாதார அமைப்பு மற்றும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் பரிந்துரைத்தப்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

MOST READ: உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Coronavirus: People With Blood Type A May Be More Vulnerable To COVID-19, Study Claims

A recent preliminary study from China has revealed that people with type A blood group are more vulnerable to coronavirus and type O blood group people are said to be more resistant to coronavirus.
Desktop Bottom Promotion