For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எச்சரிக்கை! இருமல், தும்மலால் மட்டும் கொரோனா வைரஸ் பரவாதாம்... இப்படியும் பரவுமாம்..

சமீபத்தில் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டவர்களின் மூச்சுக்காற்றை சுவாசித்தால் மற்றும் அவர்களுடன் பேசினால் கூட தொற்று ஏற்படக்கூடும் என்று அமெரிக்க விஞ்ஞானி ஒருவர் கூறியுள்ளார்.

|

உலகெங்கிலும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் கோரத்தாண்டவத்தால் ஏராளமான உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றன. இன்று வரை உலகில் கொரோனா வைரஸால் 11 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 2 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

Coronavirus May Spread Through Normal Breathing, Speaking: US Scientists

இத்தகைய கொடிய வைரஸ் குறித்து ஒவ்வொரு நாளும் விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். அதில் ஒருபக்கம் இந்த வைரஸ் குறித்தும், மறுபக்கம் இந்த வைரஸிற்கான தடுப்பு மருந்துகள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

MOST READ: உலகை கதற வைக்கும் கொரோனா மற்ற வைரஸ்களை விட ஏன் மிகவும் கொடியது தெரியுமா?

அந்த வகையில் சமீபத்தில் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டவர்களின் மூச்சுக்காற்றை சுவாசித்தால் மற்றும் அவர்களுடன் பேசினால் கூட தொற்று ஏற்படக்கூடும் என்று அமெரிக்க விஞ்ஞானி ஒருவர் கூறியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அறிகுறிகள்

அறிகுறிகள்

சீனாவின் வுஹான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒருவரைத் தாக்கினால், அது பின்வரும் அறிகுறிகளை வெளிக்காட்டும். அவை சளி, இருமல், காய்ச்சல், வறண்ட இருமல், தொண்டை வறட்சி, லேசான நெஞ்சு வலி, மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை. சிலருக்கு இந்த வைரஸ் தொற்றால், வயிற்று பிரச்சனைகளான வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, செரிமான பிரச்சனைகள் போன்றவற்றை சந்திக்க நேரிடும்.

MOST READ: மே 29-ல் கொரோனா வைரஸ் முடிவுக்கு வரும் - இது நிஜம் தானா? உண்மை என்ன?

புதிய அறிகுறிகள்

புதிய அறிகுறிகள்

இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சளி, இருமல், காய்ச்சல், வயிற்று பிரச்சனைகள் போன்றவற்றால் அவஸ்தைப்படக்கூடும் என்று தான் பலரும் நினைத்தோம். ஆனால் இந்த வைரஸ் தாக்கப்பட்ட நோயாளிகளுள் சிலர் நாவில் சுவை தெரியாமல் இருந்ததாவும், அதே சமயம் வாசனை எதுவும் தெரியாமல் இருந்ததாகவும் கூறியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பரவல் முறை

பரவல் முறை

கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு தும்மல், இருமல் வழியாக பரவக்கூடியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன் பின் இந்த கொரோனா வைரஸ் வேறு எவ்வாறெல்லாம் பரவக்கூடும் என்று ஆராய்ந்தனர். அதில் கொரோனா வைரஸ் வெளியிடத்தில் ஒவ்வொரு பொருளின் மீதும் எவ்வளவு காலம் வாழும் என்ற ஒரு பட்டியலை ஆய்வாளர்கள் வெளியிட்டனர்.

கொடிய கொரோனா வைரஸ் தூசுப்படலங்களில் மூன்று மணி நேரம் வரையும், தாமிரம்/காப்பரில் நான்கு மணி நேரம் வரையும், அட்டைப்பெட்டியில் 24 மணி நேரம் வரையும், பிளாஸ்டிக் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்/எஃகு பொருட்களின் மீது இரண்டு முதல் மூன்று நாட்கள் வரையும் உயிருடன் இருக்கக்கூடியது என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

MOST READ: கொரோனா வைரஸிற்கு முடிவு கட்ட ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவர்கள் கூறுவது என்ன தெரியுமா?

சமீபத்திய ஆய்வு

சமீபத்திய ஆய்வு

புதிய கொரோனா வைரஸ் சாதாரண சுவாசம் மற்றும் பேசுவதன் மூலம் காற்று வழியாக பரவக்கூடும் என்று அமெரிக்காவின் உயர்மட்ட விஞ்ஞானி ஒருவர் கூறினார். எனவே அனைவரும் கட்டாயம் மாஸ்க்குகளைப் பயன்படுத்த பரிந்துரைத்தார்.

தேசிய சுகாதார நிறுவனங்களின் தொற்று நோய்களின் தலைவரான அந்தோனி ஃபாசி, "இருமல் மற்றும் தும்மலுக்கு மாறாக, மக்கள் பேசும்போது கூட வைரஸ் உண்மையில் பரவக்கூடும் என்ற சில சமீபத்திய தகவல்கள் காரணமாக மாஸ்க்குகள் குறித்த வழிகாட்டுதல் மாற்றப்படும்" என்று கூறினார்.

கவனம் தேவை

கவனம் தேவை

கொரோனா வைரஸால் நோய்வாய்ப்பட்டவர்கள் தங்கள் முகங்களை அவசியம் மறைக்க வேண்டும், அதே போல் அவர்களை வீட்டில் பராமரிப்பவர்களும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு ஏப்ரல் 1 ம் தேதி தேசிய அறிவியல் அகாடமி (என்ஏஎஸ்) வெள்ளை மாளிகைக்கு ஒரு கடிதத்தை அனுப்பிய பின்னர் ஃபாசியின் கருத்துக்கள் வெளிவந்துள்ளன.

MOST READ: இந்த பழக்கத்தை உடனே கைவிடுங்க.. இல்ல கொரோனா உங்களே தேடி சீக்கிரம் வரும்...

இன்னும் முடிவுக்கு வரவில்லை

இன்னும் முடிவுக்கு வரவில்லை

இந்த ஆராய்ச்சி இன்னும் முடிவாக இல்லை என்றாலும், "கிடைக்கக்கூடிய ஆய்வுகளின் முடிவுகளைப் பார்க்கும் போது, அது சாதாரண சுவாசத்திலிருந்து வைரஸின் ஏரோசோலைசேஷனுடன் ஒத்துப்போகின்றன". இப்போது வரை, அமெரிக்க சுகாதார நிறுவனங்கள் கொரோனா வைரஸ் பரவுவதற்கான முதன்மையான வழி சுவாச துளிகளாகும். சுமார் ஒரு மில்லிமீட்டர் விட்டத்தில் தும்மும் போது அல்லது இருமும்போது நோயுற்றவர்களால் வெளியேற்றப்படுகின்றன. அதோடு இவை விரைவாக ஒரு மீட்டர் தொலைவில் தரையில் விழுகின்றன.

இவ்வாறு வெளியே விழும் வைரஸ் வெளிப்புறங்களில், அது விழும் பொருளைப் பொறுத்து உயிருடன் இருக்கும் காலமும் வேறுபடும் என்பதால், ஒவ்வொருவரும் சீரான இடைவெளியைப் பின்பற்றுவதோடு, போதிய சுகாதார செயல்களான முகத்தை மாஸ்க்கால் மூடுவது, அடிக்கடி கைகளைக் கழுவுவது போன்றவற்றை அவசியம் பின்பற்ற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

MOST READ: கொரோனா பரவலில் உள்ள 4 ஸ்டேஜ்கள் என்ன? அதில் இந்தியா எந்த ஸ்டேஜில் உள்ளது?

மற்றொரு ஆய்வு

மற்றொரு ஆய்வு

சமீபத்தில் நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட என்ஐஎச் நிதியுதவி ஆய்வில், SARS-CoV-2 என்னும் கொரோனா வைரஸ் ஒரு ஏரோசோலாக மாறி மூன்று மணி நேரம் வரை காற்றில் இருக்கக்கூடும் என்று கண்டறியப்பட்டது.

எதுவாக இருந்தாலும், நாம் முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பான சுகாதார செயல்களைப் பின்பற்றினால், நிச்சயம் கொரோனா வைரஸ் நம் உடலினுள் நுழைவதைத் தடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Coronavirus May Spread Through Normal Breathing, Speaking: US Scientists

US scientists reveals coronavirus may spread through normal breathing and speaking. Read on to know more...
Desktop Bottom Promotion