For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

28 நாட்கள் ரூபாய் நோட்டுகளில் உயிருடன் இருக்கும் கொரோனா வைரஸை எப்படி அழிக்கலாம்? இத படிங்க...

ரூபாய் நோட்டுக்கள் மற்றும் மொபைல் போன்கள் போன்ற பொருட்களின் மேற்பரப்பில் கொரோனா வைரஸ் 28 நாட்கள் வரை உயிர்வாழ முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

|

ரூபாய் நோட்டுக்கள் மற்றும் மொபைல் போன்கள் போன்றவை நாம் அன்றாடம் பயன்படுத்தும் மற்றும் எப்போதும் எங்கும் எடுத்துச் செல்பவைகள். ஆனால் இத்தகைய முக்கியமான பொருட்களின் மேற்பரப்பில் கொரோனா வைரஸ் 28 நாட்கள் வரை உயிர்வாழ முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Coronavirus Can Survive On Banknotes, Phone Screens For 28 Days

ஆஸ்திரேலியாவின் தேசிய அறிவியல் நிறுவனமான காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி அமைப்பின் (சி.எஸ்.ஐ.ஆர்.ஓ) ஆராய்ச்சியாளர்கள், SARS-CoV-2 குறைந்த வெப்பநிலையில் நீண்ட காலம் உயிர் வாழ்வதைக் கண்டறிந்துள்ளனர்.

MOST READ: கொரோனா வந்து சரியாயிடுச்சா? அப்ப இனிமே தான் நீங்க கவனமா இருக்கணும்.. ஏன்னு இத படிச்சா புரியும்..

ஜீலாங்கில் உள்ள ஏசிடிபி-யில் தான் இதுக்குறித்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது மற்றும் இந்த ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட விஷயங்கள் வைராலஜி ஜர்னலில் வெளியிடப்பட்டன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கோவிட்-19 வைரஸ் மென்மையான மேற்பரப்பில் நீண்ட காலம் வாழக்கூடியது

கோவிட்-19 வைரஸ் மென்மையான மேற்பரப்பில் நீண்ட காலம் வாழக்கூடியது

கொரோனா வைரஸின் வாழ்நாள் குறித்து இருட்டு அறையில் வெவ்வேறு மேற்பரப்புக்களில் மற்றும் மூன்று வெப்பநிலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் கொரோனா வைரஸ் பருத்தி போன்ற நுண்ணிய சிக்கலான மேற்பரப்புகளுடன் ஒப்பிடும் போது, மென்மையான மேற்பரப்புக்களான கண்ணாடி, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் ரூபாய் நோட்டுக்களில் நீண்ட காலம் உயிர் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டது.

எதில் எவ்வளவு காலம் கொரோனா வைரஸ் உயிர் வாழும்?

எதில் எவ்வளவு காலம் கொரோனா வைரஸ் உயிர் வாழும்?

* 20 டிகிரி செல்சியல் வெப்பநிலையில் (அறை வெப்பநிலையில்), SARS-CoV-2 வைரஸ் கண்ணாடி (மொபைல் போன் திரை), ஸ்டீல் மற்றும் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்கள் போன்றவற்றில் 28 நாட்கள் வரை உயிர் வாழ்ந்தன.

* 30 டிகிரி செல்சியல் வெப்பநிலையில், கொரோனா வைரஸின் வீரியம் குறைந்து, அவற்றின் உயிர்வாழும் விகிதம் ஏழு நாட்களாக குறைந்தது.

* 40 டிகிரி செல்சியல் வெப்பநிலையில், வைரஸின் வீரியம் குறைந்து அதன் உயிர் வாழும் வீதம் வெறும் 24 மணிநேரமாக சரிந்தது.

பருத்தி போன்ற நுண்ணிய சிக்கலான மேற்பரப்பில், வைரஸ் மிகக்குறைந்த வெப்பநிலையில் 14 நாட்கள் வரை மற்றும் அதிகபட்சமாக 16 மணி நேரத்திற்கும் குறைவாகவே உயிருடன் இருந்தது.

முந்தைய ஆய்வுகள், கோவிட்- 19 வைரஸ் நுண்ணிய மேற்பரப்புகளில் நான்கு நாட்கள் வரை உயிருடன் இருக்கக்கூடும் என்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

இன்ஃப்ளூயன்சா ஏ சோதனை

இன்ஃப்ளூயன்சா ஏ சோதனை

ஆய்வாளர்கள் இன்ஃப்ளூயன்சா ஏ-க்கும் இதேபோன்ற சோதனைகளை மேற்கொண்டனர். அதில் இது 17 நாட்கள் மேற்பரப்பில் உயிர் பிழைத்திருப்பதைக் கண்டறிந்தனர். காய்ச்சல் வைரஸ்களைக் காட்டிலும் SARS-CoV-2 அதிக நெகிழ்திறன் கொண்டது என்பதற்கான வளர்ந்து வரும் ஆதாரங்களை இது சேர்க்கிறது.

கொரோனா வைரஸ் எவ்வளவு காலம் இயங்கக்கூடியது என்பதை புரிந்து கொள்வது அதன் பரவலைக் குறிக்க உதவும் என்று சி.எஸ்.ஐ.ஆர்.ஓ தலைமை நிர்வாகி லாரி மார்ஷல் கூறினார்.

இந்த கண்டுபிடிப்புகள் வழக்கமான கை கழுவுடன் மற்றும் மேற்பரப்புக்களை சுத்தம் செய்வது போன்ற நல்ல செயல்களின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன என்று ஏசிடிபி-யின் துணை இயக்குநரும் ஆய்வு ஆசிரியர்களில் ஒருவருமான டெபி ஈகிள்ஸ் கூறினார்.

ரூபாய் நோட்டுகளை எவ்வாறு கிருமி நீக்கம் செய்வது?

ரூபாய் நோட்டுகளை எவ்வாறு கிருமி நீக்கம் செய்வது?

உங்கள் பணம் மற்றும் நாணயங்களை கிருமி நீக்கம் செய்ய குறைந்தது 60-70 சதவீத ஆல்கஹால் கொண்டுள்ள சானிடைசர் ஸ்ப்ரேக்களைப் பயன்படுத்துங்கள். அதுவும் பணம் முழுவதும் சுத்திகரிப்பதை உறுதி செய்து கொண்டு, பின் அவற்றை பையில் வையுங்கள். அல்லது சோப்பு நீரில் நனைத்த துணியால் பணத்தை மென்மையாக துடைத்து எடுக்கலாம். நாணயங்களை சோப்பு நீரில் சுத்தம் செய்யலாம்.

மற்றொரு சிறப்பான மற்றும் பாதுகாப்பான வழி

மற்றொரு சிறப்பான மற்றும் பாதுகாப்பான வழி

கிருமிநாசினி துடைப்பான்கள் ரூபாய் நோட்டுக்களை சுத்தப்படுத்த மற்றொரு வசதியான மற்றம் பயனுள்ள வழியாகும். இருப்பினும், தொற்றுநோய் காலத்தில் முடிந்தவரை பணத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது மற்றும் பணமில்லா கட்டணத்தை தேர்வு செய்வது நல்லது. நீங்கள் பணம் மற்றும் நாணயங்களைப் பெறும் போது, அவற்றை உங்கள் பணப்பையில் நேரடியாக வைப்பதற்கு பதிலாக, அவற்றை ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்துக் கொள்ளுங்கள்.

மொபைலை எவ்வாறு கிருமி நீக்கம் செய்வது?

மொபைலை எவ்வாறு கிருமி நீக்கம் செய்வது?

மொபைல் போனை கிருமி நீக்கம் செய்ய குறைந்தது 70 சதவீதம் ஆல்கஹால் கொண்ட கிருமிநாசினிகளைப் பயன்படுத்த அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் பரிந்துரைக்கிறது. ஆல்கஹால் அடிப்படையிலான கிருமிநாசினி துடைப்பான்கள் ஸ்ப்ரேக்களை விட சிறந்த மாற்றாக இருக்கலாம். ஏனெனில் இவை மொபைல் போனின் உட்பகுதியை சேதப்படுத்தக்கூடும்.

மொபைலை சுத்தம் செய்ய பயன்படுத்தக்கூடாதவை

மொபைலை சுத்தம் செய்ய பயன்படுத்தக்கூடாதவை

மொபைலை கிருமி நீக்கம் செய்வதற்கு வீட்டை சுத்தம் செய்ய பயன்படுத்தும் க்ளீனர்கள், மேக்கப் ரிமூவர், காயத்தை சுத்தம் செய்யும் பொருட்கள், சோப்பு மற்றும் வினிகர் போன்றவற்றைப் பயன்படுத்தக்கூடாது. எப்போதும் மொபைலை சேதப்படுத்தும் அபாயத்தைக் குறைக்க தொலைபேசி உற்பத்தியாளரின் அறிவுறுத்தல்கள் மற்றும் கிருமிநாசினி வழிகாட்டிகளை எப்போதும் பின்பற்றவும்.

நினைவில் கொள்க

நினைவில் கொள்க

ரூபாய் நோட்டுகள், மொபைல் போன்கள் மற்றும் அடிக்கடி தொடும் இடங்களை கிருமி நீக்கம் செய்வதோடு மட்டுமின்றி, கைகளையும் சோப்பு மற்றும் நீரில் கழுவுவதன் மூலமோ அல்லது ஆல்கஹால் சார்ந்த சானிடைசரைப் பயன்படுத்துவதன் மூலமோ கைகளை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Coronavirus Can Survive On Banknotes, Phone Screens For 28 Days

The virus can survive longer on non-porous surfaces such as glass, steel and plastic banknotes, compared to porous complex surfaces such as cotton.
Desktop Bottom Promotion