For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லேசான கொரோனா அறிகுறிகள் திடீரென கடுமையாவதற்கு இந்த 4 விஷயம் தான் காரணமாம்... உஷாரா இருங்க...

இயற்கையாக 80%-க்கும் மேற்பட்ட கொரோனா வழக்குகள் லேசானவை என்றாலும், கடுமையான கொரோனா வழக்குகள் மருத்துவ நிபுணர்களை திணற வைத்துக் கொண்டிருக்கின்றன.

|

உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றின் மூன்றாம் அலை டெல்லி மற்றும் என்.சி.ஆர் போன்ற நகரங்களை மூழ்கடித்துள்ளது. அதிக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையுடன் படுக்கைகள் இல்லாமல் மருத்துவமனைகள் திணறிக் கொண்டிருக்கின்றன. இந்த தொற்றுநோயின் எழுச்சியால், பல உலகளாவிய நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் லேசான மற்றும் மிதமான அறிகுறிகளைக் கொண்ட பலருக்கு நிலைமையானது மிகவும் கடுமையாக மாறி வருகின்றன.

Coronavirus: 4 Reasons A Mild COVID-19 Can Turn Severe Quickly

இயற்கையாக 80%-க்கும் மேற்பட்ட கொரோனா வழக்குகள் லேசானவை என்றாலும், கடுமையான கொரோனா வழக்குகள் மருத்துவ நிபுணர்களை திணற வைத்துக் கொண்டிருக்கின்றன. இதை விட ஆச்சரியம் என்னவென்றால், மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட வழக்குகளில் பல ஆரோக்கியமான வயதினரான 20-40 வயதுக்குட்பட்டவர்கள் தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அறிகுறிகளை தீவிரமாக கண்காணிக்கவும்

அறிகுறிகளை தீவிரமாக கண்காணிக்கவும்

உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் பிற ஆரோக்கிய பிரச்சனைகள் இல்லாதவர்கள் கூட கொரோனாவின் தீவிர அறிகுறிகளை சந்திக்கிறார்கள். இதை வைத்தே கொரோனா தொற்றைப் பற்றி நமக்கு எவ்வளவு குறைவாக தெரிந்துள்ளது என்பது புரிகிறது. இருப்பினும், இது புதிதல்ல. ஆராய்ச்சியாளர்கள் கொரோனா தொற்றை லேசாக எடத்துக் கொள்ளும் நபர்கள் பெருமளவில் கடுமையான துன்பங்களை அனுபவிக்கக்கூடும் என்று பல மாதங்களாக விவாதித்து வருகின்றனர். மேலும் இந்த தொற்றுநோயின் அறிகுறிகள் கூட லேசானது முதல் கடுமையானது வரை மோசமடைவதற்கு நீண்ட நாட்கள் எடுக்காது. எனவே தான் ஒவ்வொரு கொரோனா நோயாளியும், அவர் எவ்வளவு ஆரோக்கியமாக இருந்தாலும், அறிகுறிகளை மிகவும் தீவிரமாக கண்காணித்து போதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது முக்கியம்.

கீழே கொரோனா தொற்று மிதமானது முதல் கடுமையானது வரை முன்னேறுவதற்கான நான்கு முக்கிய காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.

சைட்டோகைன் புயல்

சைட்டோகைன் புயல்

கோவிட்-19 நோய்த்தொற்றின் மிகவும் அச்சுறுத்தலான விளைவுகளில் ஒன்றாக சைட்டோகைன் புயல் உள்ளது. உங்களைத் தொற்றியுள்ள கொரோனா வைரஸ் லேசானது முதல் கடுமையானது வரை முன்னேறுவதற்கு ஒரு அமைதியான காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.

இது எப்படி உடலை பாதிக்கிறது?

இது எப்படி உடலை பாதிக்கிறது?

ஒரு வலுவான நோயெதிர்ப்பு மண்டலத்தை அமைப்பதற்கு உடலானது அதிகப்படியாக செயல்படும் போது, சில நேரங்களில் அது தன்னுடல் தாக்க கோளாறுக்கு வழிவகுத்து, நமது உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு ஆரோக்கியமான செல்களை தவறாக தாக்க ஆரம்பிக்கும். இதனால் உடலின் முக்கிய உறுப்புக்கள் சிதைவடைய ஆரம்பித்து, ஒரு நபர் உள் வீக்கம், நுரையீரல் தொற்று, நிமோனியா, கடுமையான தசை வலி மற்றும் டிஸ்ப்னியா போன்ற கடுமையான எதிர்விளைவுகளை அனுபவிக்க வாய்ப்புள்ளது. இதன் விளைவாக அவசரமான மருத்துவ கவனிப்பு மற்றும் தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில், இது உறுப்பு செயலிழப்பு மற்றும் மரணத்திற்கும் வழிவகுத்துவிடுகிறது. எனவே நீங்கள் சந்திக்கும் கொரோனா அறிகுறிகளில் ஏதேனும் மாற்றங்களைக் கண்டால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள். குறிப்பாக இம்மாதிரியான பிரச்சனைகள் தொற்று ஏற்பட்ட 5-10 நாட்களில் சந்திக்கக்கூடும்.

மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, சைட்டோகைன் புயலை சந்திக்கும் கொரோனா நோயாளிகள் காய்ச்சல், கடுமையான தலைவலி மற்றும் வலிப்புத்தாக்கம் போன்றவற்றை சந்திக்கக்கூடும். அதோடு முன்பை விட மோசமாகவும் நோய்வாய்ப்பட்டிருக்கலாம்.

ஆக்ஸிஜன் அளவு கடுமையாக குறைவது

ஆக்ஸிஜன் அளவு கடுமையாக குறைவது

SARS-COV-2 வைரஸால் மிகவும் கடுமையாக பாதிக்கப்படும் உறுப்புக்களில் ஒன்று நமது சுவாச அமைப்பு. இது நுரையீரலுக்கு ஆக்ஸிஜன் வழங்கலை இழக்க வழிவகுத்து, மூச்சுத்திணறல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகளைத் தூண்டும். ஒருவருக்கு ஆக்ஸிஜன் அளவு 90-க்கு குறைவானால், அது எச்சரிக்கை அறிகுறியாக கருதப்படுகிறது.

ஹேப்பி ஹைபோக்ஸியா

ஹேப்பி ஹைபோக்ஸியா

இருப்பினும், பல நேரங்களில், ஆக்ஸிஜன் அளவு மிகவும் குறைந்துவிட்டாலும், உடல் தெளிவான அறிகுறிகளைக் காட்டாது. இதனால் நோயாளிகள் இதைக் கண்டறிவதில் சிரமத்தை ஏற்படுத்தி, உடலில் பெரும் சேதத்தை உண்டாக்கிவிடும். இதையே மருத்துவர்கள் 'ஹேப்பி ஹைபோக்ஸியா' என்று அழைக்கிறார்கள். எனவே லேசான கொரோனா அறிகுறி கடுமையாவதற்கு இதுவும் ஒரு காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

வெளிப்புற காரணிகள் அறிகுறிகளை மோசமாக்கும்

வெளிப்புற காரணிகள் அறிகுறிகளை மோசமாக்கும்

பல சந்தர்ப்பங்களில், வெறிப்புற சுற்றுச்சூழல் காரணிகளும் கோவிட்-19 நோயறிதலை அச்சுறுத்துகின்றன. ஏனெனில் பொதுவாக காற்று மாசுபாடு, குளிர்ச்சியாக வெப்பநிலை போன்றவை சுவாச கோளாறுகளை உண்டாக்கக்கூடியவை. அதிலும் நாள்பட்ட சுவாச கோளாறுகளைக் கொண்டவர்களுக்கு, லேசான கொரோனா தொற்றும் ஒரு சிக்கலானதாக மாறும்.

அதே சமயம், காற்று மாசுபாடு நுரையீரலுக்கு சேதத்தை ஏற்படுத்துவதுடன், நோயெதிர்ப்பு சக்தியை குறைக்கிறது மற்றும் வீக்கத்தையும் அதிகரிக்கிறது. சொல்லப்போனால் கொரோனாவுடன் தொடர்புடைய இறப்பு விகிதம் அதிகரிப்பதற்கு மாசடைந்த காற்றும் ஓர் காரணமாக உள்ளது.

தாமதமான சோதனை

தாமதமான சோதனை

கொரோனா தொற்றுநோய் பரவ ஆரம்பித்து 11 மாதங்களுக்கு மேலாகியும், இதன் அறிகுறிகளின் பட்டியலானது ஆரம்ப காலத்தை விட தற்போது நீண்டுள்ளதால், குழப்பமானதாக உள்ளது. அதோடு கொரோனாவின் அறிகுறிகள் அனைத்தும் வழக்கமாக சந்திக்கும் பிரச்சனைகளைப் போல் இருப்பதால், மக்கள் இதை சாதாரணமாக எடுத்து, சரியான நேரத்தில் சிகிச்சை மேற்கொள்ள தவறுகின்றனர். இப்படி கொரோனா தொற்றிற்கு தாமதமான சிகிச்சைளை மேற்கொள்வதால், பல சந்தர்ப்பங்களில் இது சிக்கலாகி வருகிறது. சொல்லப்போனால் ஆரோக்கியமானவர்களுக்கும் கொரோனா தொற்று கடுமையாக மாறுவதற்கு தாமதமான சோதனை மற்றும் சிகிச்சை ஓர் முக்கிய காரணமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Coronavirus: 4 Reasons A Mild COVID-19 Can Turn Severe Quickly

Coronavirus: Here are 4 reasons a mild COVID-19 can turn severe quickly. Read on to know more...
Desktop Bottom Promotion