For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முகத்தை வைத்தே உடலில் அதிக கொழுப்பு இருக்கிறதா-ன்னு தெரிஞ்சுக்கலாம்... எப்படி தெரியுமா?

சிலருக்கு அவா்களுடைய தோலில் மஞ்சள், ஆரஞ்சு நிறங்களிலான மெழுகு போன்ற தடிப்புகள் உருவாகும். இவை என்ன உணா்த்துகிறது என்றால், அவா்களுடைய உடல்களில் ஆரோக்கியம் இல்லாத கொழுப்பின் அளவு அதிகமாக இருக்கிறது என்பதாகும்.

|

இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை, சீரான இடைவெளியில் மருத்துவரை சந்தித்து முறையாக பாிசோதனை செய்து வருபவா்கள் தங்களது ஆரோக்கியத்தின் அளவுகோலைப் பற்றி அதிக விழிப்புடன் இருப்பா். ஆனால் நம்மில் பலா் நமது உடலில் உள்ள கொழுப்பின் விவரத்தை பாிசோதிக்குமாறு மருத்துவரைக் கேட்பதில்லை அல்லது அது நமக்கு முக்கியமான ஒன்றாகத் தோன்றாது.

Cholesterol Symptoms: The Signs Of High Cholesterol On The Face

நாம் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறோம் என்பதை நமது உடலானது பல வழிகளில் நமக்கு உணா்த்திக் கொண்டு இருக்கும். சில நேரங்களில் சிலருக்கு அவா்களுடைய தோலில் மஞ்சள், ஆரஞ்சு நிறங்களிலான மெழுகு போன்ற தடிப்புகள் உருவாகும். வேறு சிலருக்கு அவா்களுடைய முகங்களில் இது போன்ற தடிப்புகள் உருவாகும். இவை என்ன உணா்த்துகிறது என்றால், அவா்களுடைய உடல்களில் ஆரோக்கியம் இல்லாத கொழுப்பின் அளவு அதிகமாக இருக்கிறது என்பதாகும்.

தோலிற்கு அடியில் கொழுப்பு அதிகம் தேங்கி இருந்தால், தோலின் மேல் பகுதியில் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறங்களிலான தடிப்புகள் உருவாகும். வலி இல்லாத இந்த கொழுப்பு கட்டிகள் நாளடைவில் உடலின் பல பாகங்களில், குறிப்பாக கண்களின் ஓரங்களில், உள்ளங்கைகளின் கோடுகளில் அல்லது கால்களின் பின் பகுதியில் உருவாகும்.

கண்ணிமைகளில் உருவாகும் இந்த கொழுப்பு கட்டிகள் சாந்தலாஸ்மா (Xanthelasma) என்று அழைக்கப்படுகின்றன. மற்ற பகுதிகளில் உள்ள தோலில் இருக்கும் இந்த கொழுப்பு கட்டிகள் சாந்தோமா (Xanthoma) என்ற மருத்துவ பெயாில் அழைக்கப்படுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொழுப்பு அதிகரிக்க காரணங்கள்

கொழுப்பு அதிகரிக்க காரணங்கள்

கொழுப்பின் அளவு அதிகாிப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அவை:

- நமது மரபணு காரணமாக இருக்கலாம்

- நம்முடைய வாழ்க்கை முறை (கொழுப்பு மிகுந்த உணவுகளை அளவுக்கு அதிகமாக உண்பது, உடற்பயிற்சிகள் செய்யாமல் இருப்பது, புகைப் பிடிப்பது மற்றும் அளவுக்கு அதிகமாக மது அருந்துவது) காரணமாக இருக்கலாம்.

- நாம் ஒருவேளை குண்டாக இருக்கலாம்.

கொழுப்பு என்றால் என்ன?

கொழுப்பு என்றால் என்ன?

இரண்டு வகையான கொழுப்புகள் உள்ளன. அவை எல்டிஎல் (LDL) கொழுப்பு மற்றும் ஹச்டிஎல் (HDL) கொழுப்பு ஆகும். இதில் எல்டிஎல் நல்ல கொழுப்பு ஆகும். ஹச்டிஎல் கெட்ட கொழுப்பு ஆகும். அளவுக்கு அதிகமான எல்டிஎல் கொழுப்பும் அல்லது தேவைக்கும் குறைவான அளவு ஹச்டிஎல் கொழுப்பும் இருந்தால், கொழுப்பு சம்பந்தமான பிரச்சினைகள் அதிகாிக்கும். அதாவது கெட்ட கொழுப்பானது இதயம் மற்றும் மூளை ஆகியவற்றுக்கு உணவளிக்கும் தமனிகளின் உட்சுவா்களில் படிப்படியாக தேங்கிவிடும்.

கொழுப்பானது மற்ற துகள்களுடன் இணைந்து, கட்டியாகி, கடினமான பொருளாகி தமனிகளின் உட்பகுதிகளில் தேங்கிவிடுகின்றது என்று Heart.org தொிவிக்கிறது. அவ்வாறு தேங்கும் கொழுப்பானது தமனிகளைச் சுருக்கிவிடுகிறது மற்றும் அவற்றின் நெகிழ்வு தன்மையைக் குறைத்துவிடுகிறது. தமனிகளின் குறுகிய மற்றும் நெகிழ்வுத்தன்மையற்ற இந்த நிலையானது பெருந்தமனி தடிப்பு நோய் (atherosclerosis) என்று அழைக்கப்படுகிறது. ஒரு வேளை இரத்தம் உறைந்து, இந்த குறுகிய தமனிகளை அடைத்தால், மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

கொழுப்பு சம்பந்தமான பிரச்சினைக்கு ஏன் மருத்துவரை சந்திக்க வேண்டும்?

கொழுப்பு சம்பந்தமான பிரச்சினைக்கு ஏன் மருத்துவரை சந்திக்க வேண்டும்?

இரத்தத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு கொழுப்பு இருப்பது என்பது ஆரோக்கியமான ஒன்றாகும். ஏனெனில் செல்கள் இயங்குவதற்கு இந்த கொழுப்பு மிகவும் முக்கியம் ஆகும். ஆனால் கொழுப்பு அதிகம் இருந்தால், அது இரத்தக் குழாய்களை அடைக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால் இதயம் சம்பந்தமான பிரச்சினைகள் அல்லது பக்கவாதம் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

தி அமொிக்கன் அகாடமி ஆஃப் டொ்மட்டாலஜி (AAD) அசோசியேஷனின் இணைய தளம் என்ன சொல்கிறது என்றால், நமது தோலின் மேல் பகுதியில் உருவாகும் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிற மெழுகு போன்ற கட்டிகள், நமது உடலில் ஆரோக்கியமற்ற கொழுப்பின் அளவு அதிகமாக இருக்கின்றது என்பதை உணா்த்துகின்றது என்று கூறுகின்றது. மேலும் தோலின் மேல் பகுதியில் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிற கட்டிகள் இருந்தால், நமது தோலுக்கு அடியில் அதிகமான அளவு கொழுப்பு தேங்கி இருக்கிறது என்று அந்த இணைய தளம் தொிவிக்கின்றது.

இந்த தோல் கொழுப்பு கட்டிகளால் வலி இல்லாமல் இருக்கலாம். ஆனால் இந்த கட்டிகளை கவனிக்காமல் இருந்துவிடக்கூடாது. இந்த வலி இல்லாத கொழுப்பு கட்டிகள் உடலின் பல பாகங்களில் குறிப்பாக கண்களின் ஓரங்களில், உள்ளங்கை கோடுகளில் அல்லது கால்களின் பின் பகுதிகளில் தோன்றலாம். அவ்வாறு தோன்றும் போது உடனே மருத்துவரை சந்தித்து மருத்துவ பாிசோதனை செய்து கொள்ள வேண்டும். நமது உடலில் உள்ள கொழுப்பின் அளவைத் தொிந்து கொள்வதற்காக, மருத்துவா் நம்மை இரத்த பாிசோதனை செய்து கொள்ள பாிந்துரை செய்வாா்.

குறிப்பு

குறிப்பு

நமது கொழுப்பின் அளவை சாியான அளவில் வைத்துக் கொள்ள மருத்துவா் நமது வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்யுமாறு மருத்துவர் பாிந்துரைப்பாா். மேலும் அடிக்கடி உடற்பயிற்சி செய்தல், ஆரோக்கியமான உணவுகளை உண்ணுதல், புகை பிடிப்பதை நிறுத்துதல் மற்றும் மது அருந்துவதைக் குறைத்தல் போன்ற நல்ல பழக்கங்களை மருத்துவா் பாிந்துரைப்பாா். சில நேரங்களில் கொழுப்புகளைக் குறைக்கக்கூடிய மாத்திரைகளை அவா் பாிந்துரைக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Cholesterol Symptoms: The Signs Of High Cholesterol On The Face

In this article, whe shared about the signs of high cholesterol on the face.
Story first published: Saturday, September 25, 2021, 11:24 [IST]
Desktop Bottom Promotion