Just In
- 7 hrs ago
மகா சிவராத்திரி அன்னைக்கு நீங்க நினைச்சது நடக்க இந்த விஷயங்கள மட்டும் செய்யுங்க...!
- 8 hrs ago
தக்காளி வேர்க்கடலை சட்னி
- 9 hrs ago
24 மணி நேரம் நீங்க சாப்பிடாம இருந்தா... உங்க உடல் எடை குறையுமா?
- 9 hrs ago
தமிழ்நாட்டில் எந்தெந்த மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது? எந்த தடுப்பூசி சிறந்தது தெரியுமா?
Don't Miss
- News
பிரதமரின் மோடியின் தாயாருக்கு எதிராக... தரக்குறைவான கருத்து... ட்விட்டரில் டிரெண்டாகும் #BoycottBBC
- Automobiles
ஒரே ஆண்டில் க்ரெட்டாவின் விற்பனையில் இவ்வளவு பெரிய மாற்றமா!! ஹூண்டாயின் விற்பனை 26% அதிகரிப்பு!!
- Movies
உங்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.. ரொம்ப நன்றி சார் கமலை சந்தித்த ரியோ.. டிவிட்டரில் உருக்கம்
- Finance
1 பில்லியன் டாலர் ஐபிஓ.. மாபெரும் திட்டத்துடன் களமிறங்கும் சோமேட்டோ..!
- Sports
இந்த விஷயங்களை செய்தால் போதும்... பல்வேறு சாதனைகளை படைக்கலாம்.நாளை கோலிக்கு காத்திருக்கும் வாய்ப்பு
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் NTPC நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப தினமும் இந்த விஷயங்களை மறக்காம செய்யுங்க...
ஒருவது அன்றாட வாழ்க்கை முறை தான் அவரது ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. தினசரி உணவு, குடிக்கும் நீரின் அளவு மற்றும் வேலைபாடு இவை அனைத்தும் தான் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது. ஆரோக்கியமான பழக்கவழக்கம் தான் ஒருவரை சிறியது முதல் பெரிய அளவிலான நோயில் இருந்து உடலை பாதுகாக்கிறது. இப்போது நாம் தெரிந்தக் கொள்ளப் போவது, உடலை பாதுகாக்க உதவும் தினசரி பழக்கவழக்கங்கள்.
இவற்றை தொடர்ந்து செய்து வந்தாலே போதும், மிகவும் பயங்கர நோயான, புற்றுநோய் ஏற்படாமல் சுலபமாக தப்பித்துவிடலாம். உலக சுகாதார மையம் கூறியுள்ளதின் அடிப்படையில், 5 மிக முக்கிய பழக்கவழக்கங்களில் ஏற்படும் மாற்றத்தால் தான், 3ல் ஒருவர் புற்றுநோயால் உயிரிழக்க காரணம் என தெரிய வருகிறது.
MOST READ: ஒருவருக்கு பைல்ஸ் வருவதற்கு இந்த பழக்கங்கள் தான் முக்கிய காரணம் என்பது தெரியுமா?
இவற்றில், உயர் உடல்நிறை குறியீடு, குறைந்த அளவிலான பழங்கள் மற்றும் காய்கறிகள் உட்கொள்வது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, புகை மற்றும் குடிப்பழக்கம் போன்றவையும் அடங்கும். இப்போது, புற்றுநோயில் இருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்று தெரிந்து கொள்வோம்...

பளு தூக்குதல்
மெடிசன் & சயின்ஸ் இன் ஸ்போர்ட்ஸ் & எக்ஸர்சயிஸ் வெளியிட்டுள்ள புதிய ஆய்வின் முடிவில், பளு தூக்குவதன் மூலம் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவது குறைந்துள்ளது என தெரியவந்துள்ளது. ஆய்வின் முடியில், பளு தூக்குபவர்களுக்கு, பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு 25% குறைந்துள்ளதாக தெரிய வருகிறது. பளு தூக்குவதன் மூலம், உடலில் சுரக்கும் இன்சுலின் மற்றும் குளுக்கோஸ் அளவை சமன் செய்து, இரத்த சர்க்கரை அளவை சீராக வைப்பதன் மூலமே பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவது குறைகிறது. அதுமட்டுமல்லாமல், சிறுநீரக புற்றுநோய் ஏற்படுவதையும் தடுக்கவும் உதவுமாம்.

வெங்காயம் மற்றும் பூண்டு
பெரும்பாலானோர், உணவில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்க்காமல் இருக்கவே முடியாது. உண்மையில், இது ஒரு சிறந்த குணம் என்றே சொல்லலாம். வெங்காயம் மற்றும் பூண்டில் புற்றுநோயை தடுப்பதற்கான காரணிகள் இருப்பதோடு, இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும். பஃபல்லோ பல்கலைக்கழகம் மற்றும் புவேர்ட்டோ ரிக்கோ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், 'வெங்காயம் மற்றும் பூண்டு இரண்டையும் உட்கொள்வதன் மூலம் மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தை 67 சதவீதம் வரை குறைக்கும் என்று கண்டறிந்துள்ளது.

அதிக அளவில் நீர் குடிப்பது
உடலுக்கு நீர் என்பது மிகவும் அவசியமான ஒன்று. இதனை குடிப்பதன் மூலம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படும். குடிக்கும் நீர் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதோடு மட்டுமின்றி, புற்றுநோய் ஆபத்தையும் குறைக்கிறது. அதிக அளவிலான நீரை நீங்கள் குடிக்கும் போது, உடலில் ஆங்காங்கே தேங்கியிருக்கும், நச்சுப் பொருட்கள் அனைத்தும் சிறுநீர் வழியாக வெளியேறி உடலை சுத்தப்படுத்திவிடும். இதன் மூலம், சிறுநீர்ப்பை புற்றுநோய்க்கான வாய்ப்பு குறைகிறது.

நேரத்தில் இரவு உணவு
நல்ல உணவு மற்றும் முறையான தூக்கம் சிறந்த ஆரோக்கியத்தை கொடுக்கும். சில ஆய்வுகளின் முடிவுகளின் படி, இரவு உணவிற்கும், தூக்கத்திற்கும் இடையே குறைந்தபட்சம் 2 மணிநேரம் இடைவெளி விடுபவர்களுக்கு, மார்பக புற்றுநோய் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு 20% குறைவு என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஏனென்றால், செரிக்கப்படாத உணவு சர்காடியன் செயல்பாட்டை கெடுப்பது தான் காரணம் என கூறப்படுகிறது. எனவே, சீக்கிரம் இரவு உணவு உண்டு, செரித்த பின்பு தூங்கி உடலை பாதுகாக்கலாமே.

சூரிய ஒளியில் இருந்து சருமத்தை பாதுகாப்பது
சூரியனின் கதிர்கள் உடலில் வைட்டமின் டி குறைபாட்டை பூர்த்தி செய்ய உதவும் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்று தான். அதே சமயத்தில் சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்கள் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பதை மறக்க வேண்டாம். எனவே, சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்கள் நேரடியாக உடலில் படும்படி வெளியே செல்வதை தவிர்க்கவும். அதற்காக வெளியே போகாமலேயே இருக்க வேண்டுமென கூறவில்லை. சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள் என்று தான் கூறுகிறோம். இருப்பினும், இந்தியாவில் தோல் புற்றுநோய் என்பது மிக குறைந்த அளவிலேயே உள்ளது. இதற்கு காரணம் நமது சருமத்தில் உள்ள மெலனின் தான். இருந்தாலும், நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது மிகவும் அவசியம் என்பதை மட்டும் மறக்க வேண்டாம்.