Latest Updates
-
செவ்வாய் பெயர்ச்சியால் ஜூன் 21 முதல் இந்த 5 ராசிக்கு பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது.. -
ஜூன் 22-ல் சூரியன் ராகுவின் நட்சத்திரம் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் இவங்கதான் -
இதுல ஒரு புறாவை தேர்ந்தெடுங்க.. அடுத்த 3 நாட்களில் உங்களுக்கு என்ன நடக்கும்-ன்னு சொல்றோம்.. -
மாங்காயுடன் வேர்க்கடலை சேர்த்து இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைச்சு பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த 5 ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
உலகின் டாப் 10 பணக்கார குட்டி நாடுகள் என்னென்ன தெரியுமா? இந்த நாடுகளில் சில ஆயிரம் பேரே வாழ்கிறார்களாம் -
இந்த 4 ராசிக்காரங்க எல்லோருக்கும் பிரச்சினைகளை கொடுப்பதற்காகவே பிறந்த ஆபத்தான ஆன்மாக்களாம் -
2 மாம்பழமும் 6 பிரட்டும் இருந்தா.. ஸ்கூல் விட்டு வர பிள்ளைகளுக்கு 10 நிமிஷத்துல இந்த ஸ்வீட் செஞ்சு குடுங்க... -
International Yoga Day 2026: சர்வதேச யோகா தினத்தின் வரலாறு என்ன தெரியுமா? இந்த வருட யோகா தினத்தின் சிறப்பு என் -
சனி பகவான் நிலையால் இனி 2027 வரை இந்த 3 ராசிக்காரங்க நல்ல வளர்ச்சியை காண்பார்களாம்!
ஆண்களே! உடம்புல 'இது' அதிகமா இருந்தா விறைப்புத்தன்மை பிரச்சனை ஏற்படுமாம்.. கவனமா இருங்க..
விறைப்புத்தன்மை பிரச்சனை ஒரு ஆணுக்கு வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் உயர் கொலஸ்ட்ரால்.
இன்று பெரும்பாலான ஆண்கள் சந்திக்கும் ஒரு பொதுவான பாலியல் பிரச்சனை தான் விறைப்புத்தன்மை கோளாறு. இந்த பிரச்சனையால் உலகில் மில்லியன் கணக்கான ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளன. விறைப்புத்தன்மை கோளாறு என்பது உடலுறவின் போது ஆணுறுப்பு விறைப்பதில் ஏற்படும் சிரமம் ஆகும். இந்த பிரச்சனையைக் கொண்ட ஆண்களால் தங்கள் துணையை உடலுறவின் போது திருப்திப்படுத்த முடியாது.

விறைப்புத்தன்மை பிரச்சனை ஒரு ஆணுக்கு வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் உயர் கொலஸ்ட்ரால். தற்போது நாம் சாப்பிடும் பெரும்பாலான உணவுகளில் கொழுப்புக்கள் அதிகளவில் நிறைந்துள்ளன. மேலும் ஆண்கள் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்தால், அடிக்கடி பார்ட்டி என்ற பெயரில் அளவில்லாமல் கண்டதை சாப்பிடுகிறார்கள். இப்படி தொடர்ந்து சாப்பிடும் போது, அந்த ஆணின் உடலில் கொழுப்புக்கள் தேங்க ஆரம்பித்து, கொலஸ்ட்ரால் பிரச்சனை ஏற்படுகிறது.

உயர் கொலஸ்ட்ரால் எப்படி விறைப்புத்தன்மை பிரச்சனையை உண்டாக்குகிறது?
உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் போது, இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலானது நரம்புகளை சேதப்படுத்துவதோடு, இரத்த குழாய்களின் சுவர்களில் படிய ஆரம்பித்து, இரத்த குழாய்களை குறுக செய்து, இரத்த ஓட்டத்தில் இடையூறை ஏற்படுத்துகிறது. இதனால் உடலுறுப்புகளுக்கு செல்ல வேண்டிய இரத்தத்தில் இடையூறு ஏற்படுகிறது. குறிப்பாக ஆணுறுப்பிற்கு செல்ல வேண்டிய இரத்த ஓட்டத்தில் இடையூறு ஏற்பட்டு, விறைப்புத்தன்மை பிரச்சனையை உண்டாக்குகிறது. எனவே திடீரென்று உங்களால் உங்கள் துணையைத் திருப்திபடுத்த முடியாமல் போனால், உடனே மருத்துவரை அணுகி, உங்களின் இரத்த கொலஸ்ட்ரால் அளவை சோதித்துப் பாருங்கள்.

எப்படி சரிசெய்வது?
நிபுணர்களின் கூற்றுப்படி, உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனையால் ஒரு ஆணுக்கு விறைப்புத்தன்மை பிரச்சனை ஏற்பட்டால், அந்த ஆண் தனது கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும் உணவுகளை உண்பதன் மூலம் மற்றும் பிற விஷயங்களை பின்பற்றுவதன் மூலமும், ஆணுறுப்பில் உள்ள இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகள் மேலும் சேதமடைவது தடுக்கப்பட்டு, நாளடைவில் விறைப்புத்தன்மை பிரச்சனை தானாக சரியாக வாய்ப்புள்ளது.

கொலஸ்ட்ராலைக் குறைப்பது எப்படி?
பெரும்பாலும் உயர் கொலஸ்ட்ரால் அளவை ஒருசில உணவுகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களின் மூலம் கட்டுப்படுத்தலாம். அதில் தினமும் உடற்பயிற்சி செய்வது, புகைப்பிடிப்பது மற்றும் மது அருந்துவது போன்ற போதைப்பொருட்களின் பழக்கத்தைக் கைவிடுவது போன்றவை குறிப்பிடத்தக்கவை. இது தவிர உடலில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்கும் உணவுகளான பூண்டு, வெந்தயம், நட்ஸ், கொத்தமல்லி, பீன்ஸ், சால்மன் மீன், விதைகள், பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும். மேலும் கொழுப்பு நிறைந்த இறைச்சி, வெண்ணெய், நெய், க்ரீம், கேக், பிஸ்கட் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

விறைப்புத்தன்மைக்கான மருந்துகள்
நிபுணர்களின் கூற்றுப்படி, வயாகரா போன்ற வாய்வழி மருந்துகள் விறைப்புத்தன்மை பிரச்சனைக்கான பொதுவான சிகிச்சையாகும். இந்த மருந்தானது ஆணுறுப்பில் உள்ள விறைப்பு திசுக்கள் மற்றும் இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடையச் செய்து, ஆணுறுப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, விறைப்பை பராமரிக்க உதவுகிறது. இருப்பினும், இந்த சிகிச்சைக்கு 30-34 சதவீத ஆண்களும் ஒத்துழைப்பதில்லை.

விறைப்புத்தன்மையை ஏற்படுத்தும் பிற ஆரோக்கிய பிரச்சனைகள்
உயர் கொலஸ்ட்ராலைத் தவிர, வேறு சில ஆரோக்கிய பிரச்சனைகளும் விறைப்புத்தன்மை பிரச்சனையை ஏற்படுத்தும். அவை பின்வருமாறு:
* இதய நோய்
* இரத்த குழாய் அடைப்பு
* உயர் இரத்த அழுத்தம்
* சர்க்கரை நோய்
* உடல் பருமன்
* பர்கின்சன் நோய்
* தூக்க கோளாறுகள்
* குறைவான டெஸ்டோஸ்டிரோன்
இவைகளைத் தவிர, புரோஸ்டேட் புற்றுநோய் அல்லது விரை வீக்கமும் விறைப்புத்தன்மை பிரச்சனையை உண்டாக்கும். எனவே விறைப்புத்தன்மை பிரச்சனையை சந்தித்தால் உடனே மனதை தளரவிடாமல், உடனே மருத்துவரை அணுகி, அதற்கான சரியான காரணத்தை கண்டறிந்து, அதற்கேற்ப சிகிச்சைகளை மேற்கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications