For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்க தினமும் சாப்பிடுற 'இந்த' உணவு பொருளால உங்க பாலியல் வாழ்க்கை பாதிக்கப்படுமா? உண்மை என்ன?

புளியில் வைட்டமின் சி நிரம்பியுள்ளது. இது ஆண்களின் விந்தணுக்களின் தரம் மற்றும் ஆயுட்காலம் ஆகியவற்றை மேம்படுத்த உதவுகிறது. பல ஆய்வுகளின்படி, உணவில் வைட்டமின் சி சேர்ப்பது விந்தணுக்களில் உள்ள விந்தணு இறப்புகளைத் தடுக்க உதவ

|

பொதுவாக சில உணவுகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இனப்பெருக்க ஆரோக்கியத்தையும் பாலியல் வாழ்க்கையையும் பாதிக்கும் என்று நம்பப்படுகிறது. இது வினோதமாகத் தோன்றலாம். ஆனால் நீங்கள் உண்ணும் உணவு பாலியல் தூண்டுதல் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் தம்பதிகளின் பாலியல் வாழ்க்கை முற்றிலும் மோசமாக போகலாம். ஆரோக்கியமான உடலுறவு வாழ்க்கைக்கு தம்பதிகள் உண்ணும் உணவுகளை கண்காணிக்க வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள வல்லுநர்கள் கூறுகின்றனர். ஏனெனில் உணவுகள் நம் உடல் ஆரோக்கியத்தில் மட்டுமல்லாது பாலியல் வாழ்க்கையிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

Can eating tamarind seeds boost libido in tamil

பழங்கால நம்பிக்கைகளின்படி, புளி மற்றும் அதன் விதைகளை உண்ணுவது ஒரு மனிதனின் பாலியல் வாழ்க்கை மற்றும் விந்தணு எண்ணிக்கையில் எதிர்மறையான விளைவைக் கொண்டிருப்பதாக நம்பப்பட்டது. இதன் பின்னணியில் உள்ள உண்மையையும் கட்டுக்கதையையும் தெரிந்துகொள்ள இக்கட்டுரையை முழுவதுமாக படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கட்டுக்கதை அல்லது உண்மையா

கட்டுக்கதை அல்லது உண்மையா

ஒவ்வொரு உணவும் உடலில் வெவ்வேறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சில உணவுகள் ஆண்களில் சுறுசுறுப்பு மற்றும் உயிர்ச்சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. மற்ற சில உணவுகள் ஆண்களின் லிபிடோவைக் குறைக்கும் என்று நம்பப்படுகிறது. புளி மற்றும் அதன் விதைகளை சாப்பிடுவது பாலியல் தூண்டுதலை குறைக்கும் என்று நம்பப்படுவது கட்டுக்கதையா? இல்லை உண்மையா? என்பதை இங்கு காணலாம்.

நிபுணர்கள் கூறுவது

நிபுணர்கள் கூறுவது

புளி அல்லது அதன் விதைகளை சாப்பிடுவது பாலியல் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மாறாக புளியில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிட்னேட்டுகள் இருப்பதால், இது ஆண்மையை அதிகரிக்க உதவுவதாக கூறப்படுகிறது.

லிபிடோவை எவ்வாறு பாதிக்கின்றன?

லிபிடோவை எவ்வாறு பாதிக்கின்றன?

புளி மற்றும் அதன் விதைகள் இயற்கையாகவே ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன. அவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் சுறுசுறுப்பையும் அதிகரிக்க உதவுகிறது. ஆண்களுக்கும், பெண்களுக்கும் இனப்பெருக்க ஆரோக்கியத்தில் அதன் தாக்கத்தின் பின்னணியில், பழங்கால நம்பிக்கைகளுக்கு மாறாக, புளி மற்றும் அதன் விதைகளில் வைட்டமின்கள் மற்றும் மெக்னீசியம் மற்றும் வைட்டமின் பி6 போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. அவை பெண் கருவுறுதல் மற்றும் ஆண்மைக்கு சிறந்தவை.

விந்தணுக்களின் தரத்தை அதிகரிக்கிறது

விந்தணுக்களின் தரத்தை அதிகரிக்கிறது

புளியில் வைட்டமின் சி நிரம்பியுள்ளது. இது ஆண்களின் விந்தணுக்களின் தரம் மற்றும் ஆயுட்காலம் ஆகியவற்றை மேம்படுத்த உதவுகிறது. பல ஆய்வுகளின்படி, உணவில் வைட்டமின் சி சேர்ப்பது விந்தணுக்களில் உள்ள விந்தணு இறப்புகளைத் தடுக்க உதவுகிறது மற்றும் ஆண்களின் விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்கவும் உதவுகிறது.

புளி விதையை சாப்பிட்டால் என்ன ஆகும்?

புளி விதையை சாப்பிட்டால் என்ன ஆகும்?

புளி விதைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளுடன் நிரம்பியுள்ளது. இது ஹீமோகுளோபின், வெள்ளை இரத்த அணுக்கள், சிவப்பு ரத்த அணுக்கள் மற்றும் பிளேட்லெட்டுகள் உற்பத்திக்கு உதவுகிறது. இது நோயெதிர்ப்பு உயிரணுக்களின் அளவை அதிகரிக்க உதவுகிறது, CD8+, CD4+, இவை அனைத்தும் பல நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகின்றன. புளி விதைகளில் பொட்டாசியம் உள்ளது, இது உயர் இரத்த அழுத்தம் மற்றும் பிற இருதய நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆரோக்கியமாக இருக்க புளி விதைகளை பயன்படுத்தவும்.

மற்ற ஆரோக்கிய நன்மைகள்

மற்ற ஆரோக்கிய நன்மைகள்

ஆக்ஸிஜனேற்றத்தின் வளமான ஆதாரம்

புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் உள்ளன

இதய ஆரோக்கியம் மற்றும் கொலஸ்ட்ராலை மேம்படுத்த உதவுகிறது

கல்லீரல் பாதுகாப்பு நன்மைகளை வழங்குகிறது

இயற்கையான ஆண்டிமைக்ரோபியல் நன்மைகளை வழங்குகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Can eating tamarind seeds boost libido in tamil

Here we are talking about the Can eating tamarind seeds boost libido in tamil?
Story first published: Tuesday, April 19, 2022, 13:05 [IST]
Desktop Bottom Promotion