ஆண்கள் தினமும் வேக வைத்த முட்டையை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் குறித்து தெரியுமா?

இன்று பெண்களைப் போன்றே ஆண்களும் பல பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகின்றனர். இப்பிரச்சனைகளில் இருந்து விடுபட வேண்டுமானால் ஆண்கள் வேக வைத்த முட்டையை சாப்பிட வேண்டும்.

இன்றைய பரபரப்பான மற்றும் மனஅழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையினால், பலரும் மோசமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதுவும் பெரும்பாலான மக்கள் பல ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இதைத் தவிர்க்க வேண்டுமானால், ஆரோக்கியமான உணவுப்பழக்கம் மற்றும் உடற்பயிற்சிகளை தினமும் தவறாமல் பின்பற்ற வேண்டும். சொல்லப்போனால் இவற்றின் அவசியத்தை ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

Boiled Egg Benefits For Men In Tamil

இன்று பெண்களைப் போன்றே ஆண்களும் பல பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகின்றனர். இப்பிரச்சனைகளில் இருந்து விடுபட வேண்டுமானால் ஆண்கள் வேக வைத்த முட்டையை சாப்பிட வேண்டும். முட்டையில் ஏராளமான உடலுக்கு வேண்டிய முக்கிய சத்துக்கள் உள்ளன. அதோடு இந்த முட்டையை பல வழிகளில் சாப்பிடலாம். ஆனால் முட்டையை வேக வைத்து சாப்பிடுவதன் மூலம், அதில் உள்ள சத்துக்களை முழுமையாக பெறுவதோடு, உடலுக்கு ஆற்றலும் உடனடியாக கிடைக்கும். இப்போது ஆண்கள் வேக வைத்த முட்டையை தினமும் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் என்னவென்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாலுணர்ச்சியை அதிகரிக்கும்

பாலுணர்ச்சியை அதிகரிக்கும்

ஒருவரின் பாலுணர்ச்சி அதிகரித்தால் தான் படுக்கையில் நன்கு சிறப்பாக இன்பத்தை அனுபவிக்க முடியும். ஆனால் இன்றைய ஆண்கள் பலர் இந்த பாலுணர்வு குறைபாட்டைக் கொண்டுள்ளனர். இக்குறைபாட்டினைப் போக்க, வேக வைத்த முட்டையை தினமும் உட்கொள்வது சிறந்த வழி. பலர் பாலுணர்ச்சியை அதிகரிக்க மருந்துகளை எடுக்கிறார்கள். ஆனால் மருந்துகளுக்கு பதிலாக தினமும் 1-2 வேக வைத்த முட்டைகளை சாப்பிட்டாலே பாலுணர்ச்சியை அதிகரிக்க முடியும்.

உடல் பலவீனத்தை நீக்கும்

உடல் பலவீனத்தை நீக்கும்

வேக வைத்த முட்டையை ஆண்கள் தினமும் சாப்பிட்டு வந்தால், உடல் பலவீனம் நீங்குவதாக கருதப்படுகிறது. வேக வைத்த முட்டைகளான உடலுக்கு ஆற்றலை அளிக்கின்றன. உடலில் இரும்புச்சத்து குறைவாக இருந்தால் தான் உடல் பலவீனமாக இருக்கும். ஆனால் முட்டையின் மஞ்சள் கருவில் இரும்புச்சத்து வளமான அளவில் உள்ளது. ஆகவே வேக வைத்த முட்டைகளை தினமும் 1-2 சாப்பிட்டு வந்தால், இரும்புச்சத்து குறைபாடு நீங்குவதோடு, உடல் பலவீனமும் நீங்கும்.

ஸ்டாமினாவை அதிகரிக்கும்

ஸ்டாமினாவை அதிகரிக்கும்

வேக வைத்த முட்டைகளை உண்பது ஸ்டாமினாவை அதிகரிக்க உதவுகிறது மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கும் நல்லது. ஏனெனில் முட்டையில் வைட்டமின் பி5 மற்றும் வைட்டமின் பி6 உள்ளன. மேலும் முட்டையில் புரோட்டீனும் காணப்படுகிறது. இது உடலின் ஸ்டாமினாவை அதிகரித்து, உடல் பலவீனத்தை நீக்குகிறது. இன்று பல ஆண்கள் உடல் ஸ்டாமினாவை அதிகரிக்க பல மருந்துகளை எடுக்கிறார்கள். ஆனால் எவ்வித பக்கவிளைவும் இல்லாமல் ஸ்டாமினாவை அதிகரிக்க ஒரே சிறந்த வழி வேக வைத்த முட்டைகளை உண்பது தான்.

கருவுறாமை பிரச்சனையை நீக்கும்

கருவுறாமை பிரச்சனையை நீக்கும்

வேக வைத்த முட்டைகளை உண்பதன் மூலம் கருவுறாமை பிரச்சனை நீங்கும். முட்டையில் உள்ள புரோட்டீன், உடலை வலுவாக்குவதோடு, மலட்டுத்தன்மையில் இருந்து பாதுகாக்கிறது. கருவுறுதல் திறனை வலுவாக்க வேண்டுமானால், தினமும் வேக வைத்த முட்டைகளை 1-2 சாப்பிட வேண்டும்.

உடல் எடையைக் குறைக்க உதவும்

உடல் எடையைக் குறைக்க உதவும்

வேக வைத்த முட்டைகளை உண்பது உடல் எடையைக் குறைப்பதற்கான சிறந்த உணவாக கருதப்படுகிறது. அதுவும் முட்டையின் மஞ்சள் பகுதியை நீக்கிவிட்டு வெள்ளைப் பகுதியை சாப்பிடுவது பயனுள்ளதாக கருதப்படுகிறது. எனவே நீங்கள் வேக வைத்த முட்டைகளை அன்றாட உணவில் சேர்த்து வந்தால், உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலுபெறுவதோடு, இதில் உள்ள வைட்டமின் டி மற்றும் புரோட்டீன், எலும்புகளை வலுபடுத்தும். இதனால் மூட்டு வலி பிரச்சனைகள் நீங்கும்.

குறிப்பு

குறிப்பு

ஒரு நாளைக்கு எத்தனை வேக வைத்த முட்டைகளை சாப்பிடலாம் என்று பலரும் கேட்கலாம். ஒரு நாளைக்கு 2-3 வேக வைத்த முட்டைகளை சாப்பிடலாம். ஆனால் ஒரு முட்டையே தேவையான சக்தியை அளிக்கும். உங்களுக்கு முட்டை அலர்ஜி என்றால், மருத்துவரை கலந்தாலோசித்த பின்னர் உங்கள் டயட்டை தீர்மானியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Tuesday, March 22, 2022, 12:05 [IST]
Desktop Bottom Promotion