For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் ஆயுளில் பல ஆண்டுகளை அதிகரிக்க இந்த நிற உணவுகளை அதிகம் சாப்பிட்டால் போதும்...!

உணவிற்கு எப்போதும் கூடுதல் ஈர்ப்பை சேர்ப்பது அவற்றின் நிறம்தான். ஒவ்வொரு உணவின் நிறத்திற்கும் அதில் இருக்கும் ஊட்டச்சத்து நிறமிகள்தான் காரணம்.

|

உணவின் நிறம் பிரகாசமாக இருக்கும்போது அதில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் இருக்கும் என்று நம்பப்படுகிறது. உணவிற்கு எப்போதும் கூடுதல் ஈர்ப்பை சேர்ப்பது அவற்றின் நிறம்தான். ஒவ்வொரு உணவின் நிறத்திற்கும் அதில் இருக்கும் ஊட்டச்சத்து நிறமிகள்தான் காரணம்.

Benefits of Including Red Foods In Diet

ஒவ்வொரு நிற உணவிற்கும் என சில குறிப்பிட்ட பண்புகளும், ஊட்டச்சத்துக்களும் இருக்கும். அந்த வகையில் சிவப்பு நிற உணவுகளுக்கென குறிப்பிட்ட பண்புகள் உள்ளது. உணவுகளிலேயே முதன்மை நிறமான சிவப்பு நிற உணவுகளில்தான் முக்கியமான பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. சிவப்பு நிற உணவுகள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்னெ என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆன்டிஆக்சிடண்ட்கள்

ஆன்டிஆக்சிடண்ட்கள்

சிவப்பு உணவுகளில் அந்தோசயனின் என்னும் ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. இது சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது இரத்த நாளங்கள் மற்றும் மூட்டுக்கு பெரிதும் உதவுகிறது. இது தவிர, சிவப்பு உணவுகளில் லைகோபீனும் உள்ளது. லைகோபீன் ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும், இது புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது, இது இந்த உணவுகளில் காணப்படும் சிவப்பு வண்ண நிறமிக்கு காரணமாகும்.

பொட்டாசியம் நிறைந்தது

பொட்டாசியம் நிறைந்தது

சிவப்பு நிற உணவுகள் ஆரோக்கியமான இதயத்திற்கும், சீரான இரத்த அழுத்தத்திற்கும் முக்கியமானது. இந்த நன்மைகளை வழங்க பொட்டாசியம் அத்தியாவசியமான ஊட்டச்சத்தாகும். இது சிவப்பு நிற உணவுகளில் பெருமளவு நிறைந்துள்ளது.

ஊட்டச்சத்துக்களின் புதையல்

ஊட்டச்சத்துக்களின் புதையல்

வைட்டமின் ஏ மற்றும் சி நிரம்பிய சிவப்பு உணவுகள் புற்றுநோய், இதய நோய்கள் மற்றும் கீல்வாதம் ஆகியவற்றின் அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன. ஆரோக்கியமான தோல், முடி மற்றும் நகங்களுக்கும் அவை முக்கியம். சிவப்பு உணவுகள் ஆரோக்கியமான நோயெதிர்ப்பு சக்தியையும் பராமரிக்கின்றன.

MOST READ: அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி பற்றி பலரும் அறியாத உண்மைகள்... அமெரிக்காவின் எதிர்காலம் என்னவாகும்?

எலக்ட்ரோலைட்டுள் நிறைந்தது

எலக்ட்ரோலைட்டுள் நிறைந்தது

உடல் செல்கள் அத்தியாவசிய செயல்பாடுகளைச் செய்ய நமது உடலுக்கு எலக்ட்ரோலைட்டுகள் முக்கியம். சிவப்பு உணவுகள் பொட்டாசியம், சோடியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்தவை. இவை சாதாரண இரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.

ஃபிளாவனாய்டுகள்

ஃபிளாவனாய்டுகள்

ஃபிளாவினாய்டுகள் நம் உடலுக்கு ஆக்ஸிஜனேற்ற விளைவை அளிக்கின்றன. பெரும்பாலும் பிரகாசமான வண்ண உணவுகளில் குறிப்பாக சிவப்பு உணவுகளில் குவெர்செட்டின் என்ற ஃபிளாவனாய்டு உள்ளது. ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமா போன்ற சுகாதார நிலைகளை எளிதாக்க குவெர்செட்டின் உதவுகிறது.

MOST READ: குடும்பத்தில் ஒருவர் இறந்து விட்டால் ஏன் ஆண்களுக்கு மொட்டை அடிக்கிறார்கள் தெரியுமா?

உணவில் சேர்க்க வேண்டிய சிவப்பு நிற பொருட்கள்

உணவில் சேர்க்க வேண்டிய சிவப்பு நிற பொருட்கள்

தக்காளி, செர்ரி, ஆப்பிள், வெங்காயம், ஸ்ட்ராபெர்ரி, மாதுளை, பிளம்ஸ், சிவப்பு மிளகாய், சிவப்பு பீன்ஸ், தர்பூசணி, சிவப்பு முட்டைக்கோஸ் மற்றும் சிவப்பு மிளகுத்தூள் ஆகியவற்றை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை ஒவ்வொன்றும் உங்கள் உடலுக்கு பல்வேறு வழிகளில் நன்மைகளை ஏற்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Benefits of Including Red Foods In Diet

Read to know how including red foods can help you.
Story first published: Monday, November 9, 2020, 16:01 [IST]
Desktop Bottom Promotion