Latest Updates
-
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்!
இரவு தூங்கும் முன் பாலில் ஒரு ஸ்பூன் நெய் கலந்து குடிப்பதால் பெறும் நன்மைகள் குறித்து தெரியுமா?
பாலில் நெய் கலந்து குடித்தால் ஏராளமான நன்மைகளைப் பெறலாம். அதுவும் இரவு தூங்கும் முன் வெதுவெதுப்பான பாலில் ஒரு ஸ்பூன் நெய் கலந்து குடிப்பது மிகவும் நல்லது.
உடல் ஆரோக்கியமாக இருப்பதில் உணவுகள் முக்கிய பங்கை வகிக்கின்றன. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பலவிதமான உணவுகள் உள்ளன. அதே வேளையில் இரவு நேரத்தில் சில உணவுகள் மற்றும் பானங்களை உட்கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்கலாம். பலருக்கு இரவு நேரத்தில் தூங்கும் முன் பால் குடிக்கும் பழக்கம் இருக்கும். இரவு தூங்கும் முன் பால் குடித்தால் நல்ல தூக்கம் கிடைக்கும். இதுவரை பாலில் தேன் கலந்து குடித்திருப்பீர்கள். ஆனால் பாலில் நெய் கலந்து குடித்தால் எப்படி இருக்கும்?

ஆம், பாலில் நெய் கலந்து குடித்தால் ஏராளமான நன்மைகளைப் பெறலாம். அதுவும் இரவு தூங்கும் முன் வெதுவெதுப்பான பாலில் ஒரு ஸ்பூன் நெய் கலந்து குடிப்பது மிகவும் நல்லது. உங்களுக்கு பாலில் நெய் கலந்து குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாலில் நெய் கலந்து குடிப்பதால் பெறும் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

மெட்டபாலிசம் அதிகரிக்கும்
பாலில் நெய் கலந்து குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிசம் மேம்படும் மற்றும் உடலின் ஆற்றல் மற்றம் வலிமை அதிகரிக்கும். எனவே உங்கள் உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்த சிறப்பான எளிய வழியை தேடுகிறீர்கள் என்றால், பாலில் நெய் கலந்து குடியுங்கள்.

ஸ்டாமினா அதிகரிக்கும்
அதிகப்படியான மற்றும் தொடர்ச்சியான வேலையால் நீங்கள் மிகவும் சோர்வை உணர்கிறீர்களா? அப்படியானால் இரவு தூங்கும் முன் பாலில் நெய் சேர்த்து கலந்து குடியுங்கள். இது அதிகப்படியான வேலையைச் செய்யத் தேவையான ஸ்டாமினாவை உடலுக்கு வழங்கும்.

செரிமான மண்டலத்திற்கு நல்லது
நீங்கள் அடிக்கடி செரிமான பிரச்சனைகளை சந்திப்பவராயின், பாலில் ஒரு ஸ்பூன் நெய் கலந்து குடியுங்கள். இதில் உள்ள நைட்ரிக் அமிலம் செரிமான நொதியை மேம்படுத்தி, பலவீனமான செரிமான மண்டலத்தை வலுவாக்கும்.

செக்ஸ் வாழ்க்கையை சிறப்பாக்கும்
உங்களின் செக்ஸ் வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டுமானால், பாலில் நெய் கலந்து குடியுங்கள். இது பாலியல் செயல்பாடு, ஸ்டாமினா மற்றும் விந்து உற்பத்தியை அதிகரிக்கிறது. அதே வேளையில் இநத பால் உடல் சூட்டைக் குறைத்து, உடலுறவின் போது நீண்ட நேரம் இன்பத்தை அனுபவிக்க உதவுகிறது. முன்கூட்டியே விந்து வெளியேறும் பிரச்சனை உள்ள ஆண்கள், இந்த பாலை இரவு தூங்கும் முன் தினமும் குடித்தால் நற்பலன் கிடைக்கும்.

கர்ப்பிணிகளுக்கு நல்லது
கர்ப்பிணிகள் நெய் கலந்த பாலைக் குடித்து வருவது, வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியமான எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவும். அதோடு இத குழந்தையின் மூளையை வலுப்படுத்த உதவுகிறது. தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களும் நெய் கலந்த பாலைக் குடிக்கலாம்.

மூட்டு வலி
தற்போது நிறைய பெண்கள் மூட்டு வலியால் அவதிப்படுகிறார்கள். இதில் இருந்து விடுபட ஒரு சிறந்த வழி, இரவு தூங்கும் முன் பாலில் நெய் கலந்து குடிப்பது தான். நெய் லூப்ரிகேட்டர் போன்று செயல்படுகிறது மற்றும் இது மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. மறுபுறம் பாலில் கால்சியம் உள்ளது. இது எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.

தூக்கமின்மை
நீங்கள் தூக்கமின்மையால் அவதிப்படுபவராக இருந்தால், நெய் கலந்த பால் ஒரு மந்திரப்பால் போன்று வேலை செய்யும். இந்த பாலை ஒருவர் இரவு தூங்கும் முன் குடித்தால், படுத்த உடனேயே தூங்கலாம்.

உடல் எடை அதிகரிக்கும்
நீங்கள் மிகவும் ஒல்லியாக குறைவான உடல் எடையுடன் இருக்கிறீர்களா? உங்கள் உடல் எடையை அதிகரிக்க எளிய வழியைத் தேடுகிறீர்களா? அப்படியானால் இரவு தூங்கும் முன் பாலில் நெய் கலந்து குடிக்க தொடங்குங்கள். இதனால் நெய்யில் உள்ள கொழுப்புக்கள் உடல் எடையை அதிகரிக்க உதவும்.

நச்சுக்கள் வெளியேறும்
பாலில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து குடித்தால், உடலின் மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்கள் அனைத்தையும் வெளியேற்றி, உடலை சுத்தம் செய்யலாம்.



Click it and Unblock the Notifications
