For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடுமையான காது வலியை சுலபமாக போக்க உதவும் எளிய வீட்டு வைத்திய முறைகள்!

காதுகளில் வலி ஏற்படுவது என்பது பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு பிரச்சனையாகும். பலர் காது வலியை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்வது கிடையாது. இந்த காது வலியை ஒருசில இயற்கை வைத்திய முறைகளால் சரிசெய்யலாம்.

|

காதுகளில் வலி ஏற்படுவது என்பது பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு பிரச்சனையாகும். பலர் காது வலியை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்வது கிடையாது. ஆனால், இது போன்ற வலிகளை புறக்கணிப்பது சில சமயங்களில் பெரிய பிரச்சனையில் வந்து முடிந்துவிடும். அதாவது, அடிக்கடி ஏற்படக்கூடிய காது வலி என்பது சைனஸ் தொற்று, டான்சில்லிடிஸ், துவாரங்கள் போன்ற பிரச்சனைகளில் வெளிப்பாடாக கூட இருக்கலாம். எனவே, எப்போது காதுகளில் கடுமையான, தாங்கி கொள்ள முடியாத அளவு வலி ஏற்படுகிறதோ, உடனே காது மூக்கு தொண்டை மருத்துவ நிபுணரை பார்ப்பதே சிறந்த தீர்வாக இருக்கும்.

Ayurvedic Tips To Effectively Treat Ear Pain Without Any Medication

மனிதனின் காதுகளில் மொத்தம் 3 பகுதிகள் உள்ளன. உள் காது, நடு காது மற்றும் வெளி காது. பெரும்பாலும் காது வலி என்பது மூன்றில் ஏதாவது ஒரு பகுதியிலோ அல்லது 3 பகுதிகளிலோ தான் ஏற்படக்கூடும். பொதுவாக காது வலிக்கு காரணமாக 2 காது தொற்றுகள் கருதப்படுகின்றன. ஒன்று, வெளிப்புற காது தொற்று(otitis ecterna), இரண்டாவது, நடுப்பகுதி காது தொற்று (otitis media).

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெளிப்புற காது தொற்றின் அறிகுறிகள்:

வெளிப்புற காது தொற்றின் அறிகுறிகள்:

* காதுகளுக்குள் வீக்கம்

* அரிப்பு

* தற்காலிக காது கேளாமை

* திரவ வெளியேற்றம்

* கூர்மையான, தீவிரமான காது வலி

* மிதமான காய்ச்சல்

நடுப்பகுதி காது தொற்றின் அறிகுறிகள்:

நடுப்பகுதி காது தொற்றின் அறிகுறிகள்:

* வலி இருக்கும் காதில் கேட்கும் திறனில் பிரச்சனை

* கடுமையான வலி

* கடுமையான அரிப்பு

* திரவ வெளியேற்றம்

* வாந்தி

* காய்ச்சல்

* தலைச்சுற்றல்

ஏன் காதுகளில் வலி ஏற்படுகிறது?

ஏன் காதுகளில் வலி ஏற்படுகிறது?

ஆயுர்வேதத்தின் படி, கபம் மற்றும் வாத தோஷத்தின் விளைவாக காதுகளில் வலி ஏற்படுகிறது. கப தோஷம் செயலிழப்பதன் விளைவாக, கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அரிப்பு, தொடர்ச்சியான வீக்கம், லேசான வலி, அசாதாரண செவித்திறன், பாதிக்கப்பட்ட காதில் இருந்து வெள்ளை வெளியேற்றம் ஆகியவை ஏற்படக்கூடும். அதுவே, வாத தோஷம் செயலிழப்பு, காதுகளில் இரைச்சல், உலர்ந்த காது மெழுகு, திரவ வெளியேற்றம், காது கேளாமை, பாதிக்கப்பட்ட காதில் கூர்மையான வலி போன்றவை ஏற்படும்.

காது வலிக்கு உதவும் வீட்டு வைத்தியங்கள்:

காது வலிக்கு உதவும் வீட்டு வைத்தியங்கள்:

#1 பூண்டு எண்ணெய்

பூண்டில் நோய்தொற்று எதிர்ப்பு பண்புகளும், வலி நிவாரண பண்புகளும் அதிகமாகவே உள்ளன. இவை, காது வலியை குறைக்க உதவும்.

பூண்டு எண்ணெய் தயாரிக்கும் முறை:

* முதலில் பூண்டு பற்களை தட்டி வைத்துக் கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, 3-4 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.

* அதில், தட்டி வைத்துள்ள பூண்டை சேர்த்து எண்ணெயை ஆற வைக்கவும்.

* தயாரித்து வைத்துள்ள பூண்டு எண்ணெயை 2-3 சொட்டுகள் வலி இருக்கும் காதில் தொடர்ந்து ஊற்றி வந்தால், காது வலி குணமாகும்.

#2 இஞ்சி

#2 இஞ்சி

பூண்டை போலவே, இஞ்சியிலும் நோய்தொற்று எதிர்ப்பு பண்பும், வலி நிவாரணமும் உள்ளது.

* சிறிது இஞ்சியில் சாறு எடுத்து, அதனை 2-3 டீஸ்பூன் ஆலிவ் ஆயிலில் சேர்க்கவும்.

* இதனை நன்கு கலந்து 3-4 சொட்டுக்கள் வலி இருக்கும் காதில், வலி போகும் வரை தொடர்ந்து ஊற்றி வரவும்.

#3 டீ ட்ரீ ஆயில்

#3 டீ ட்ரீ ஆயில்

டீ ட்ரீ ஆயிலில் உள்ள ஆன்டிபாக்டீரியல் பண்புகளாலே, காது வலிக்கு ஒரு சிறந்த மருந்தாக இது விளங்குகிறது.

* சிறிது ஆலிவ் ஆயிலை மிதமாக சூடேற்றி, அதனுடன், 2-3 சொட்டுக்கள் டீ ட்ரீ ஆயிரை சேர்க்கவும்.

* இந்த எண்ணெய் கலவையை நன்கு ஆற விடவும்.

* பின்பு, 3-4 சொட்டு எண்ணெயை வலி இருக்கும் காதில் தொடர்ந்து ஊற்றி வலி இல்லாமல் போகும்.

#4 மா இலைச் சாறு

#4 மா இலைச் சாறு

நிறைய பேருக்கு தெரிந்திருக்காது, மா இலையில் நோய் தொற்று எதிர்ப்பு பண்புகள் உள்ளது என்பது. இதனாலேயே, காது வலிக்கு மா இலையின் சாறு சிறந்த மருந்தாக திகழ்கிறது.

* மா இலைகள் சிலவற்றை எடுத்து நன்கு கசக்கி, சாறு எடுத்துக் கொள்ளவும்.

* வலி இருக்கும் காதில் மா இலையின் சாற்றை ஊற்றுவதற்கு முன்பு சிறிது மிதமான சூடேற்றி கொள்ளவும்.

#5 ஹெர்பல் டீ குடியுங்கள்

#5 ஹெர்பல் டீ குடியுங்கள்

பொதுவாக ஹெர்பல் டீ குடிப்பது மொத்த உடலுக்கும் ஆரோக்கியத்தை நல்கும் என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று. இதனாலேயே, காது வலி இருந்தாலும் ஹெர்பல் டீ குடிப்பதால், காது வலி தீரும். இதிலிருக்கும மென்மையான பண்புகள் வலியை குறைக்க உதவும்.

காது வலி இருக்கும் போது, துளசி டீ அல்லது கெமோமில் டீ குடித்தால், வலி இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

#6 ஆப்பிள் சிடர் வினிகர்

#6 ஆப்பிள் சிடர் வினிகர்

ஆப்பிள் சிடர் வினிகரில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகளாலேயே, காது வலிக்கு சிறந்த அருமருந்தாக இது பார்க்கப்படுகிறது.

12 மணி நேர இடைவேளையில், தொடர்ந்து ஆப்பிள் சிடர் வினிகரை 3-4 சொட்டுகள் வலி இருக்கும் காதில் ஊற்றி வரவும்.

இங்கே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்திய குறிப்புகள் எந்தவொரு உடனடி நிவாரணத்தையும் தந்துவிடாது. இதனை தொடர்ந்து செய்து வந்தால் மட்டுமே நீங்கள் விரும்பிய பலனை அடைந்திட முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ayurvedic Tips To Effectively Treat Ear Pain Without Any Medication

Here are some ayurvedic tips to effectively treat ear pain without any medication. Read on...
Story first published: Monday, February 17, 2020, 16:40 [IST]
Desktop Bottom Promotion