For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செரிமானத்தைத் தூண்டி எடையைக் குறைக்க உதவும் அற்புத மூலிகைகள்!

ஒருவரது உடலில் மெட்டபாலிச அளவு சிறப்பாக இருந்தால், அவர்களது உடலில் கலோரிகள் எளிதில் கரைக்கப்பட்டு, உடல் பருமனடையாமல் இருக்கும். அதற்கு ஆயுர்வேதம் கூறும் ஒருசில மூலிகைகள் பெரிதும் உதவியாக இருக்கும்.

|

ஆயுர்வேத மருத்துவ முறையானது மெட்டபாலிசம், செரிமானம் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி போன்றவற்றை மேம்படுத்துவது முதல் உடலில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வை வழங்கும். ஒருவரது உடலில் மெட்டபாலிசம் எனும் வளர்சிதை மாற்றமானது எடையைக் குறைக்க மிகவும் அவசியமான ஒன்று. ஏனெனில் மெட்டபாலிசம் தான் நாம் உண்ணும் உணவை ஆற்றலாக மாற்றி, உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

நம் உடலின் நடைபெறும் சில செயல்பாடுகளான மூச்சு விடுவது, செரிமானம் மற்றும் இரத்த ஓட்டம் போன்றவற்றிற்கும் ஆற்றல் அவசியம் என்பது தெரியுமா? மெட்டபாலிசம் தான் உடலில் உள்ள கலோரிகளை உடைத்து ஆற்றலாக மாற்றி, உடலுக்குத் தருகிறது. ஒருவரது உடலில் மெட்டபாலிச அளவு சிறப்பாக இருந்தால், அவர்களது உடலில் கலோரிகள் எளிதில் கரைக்கப்பட்டு, உடல் பருமனடையாமல் இருக்கும்.

Ayurveda Suggests These 5 Herbs For Better Metabolism, Digestion And Weight Loss

MOST READ: முன்கூட்டியே விந்து வெளியேறுகிறதா? அப்படின்னா தினமும் இதுல ஒன்ன செய்யுங்க...

இந்த கட்டுரையில் உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி செரிமானத்தை சிறப்பாக நடைபெறச் செய்து, உடல் எடையைக் குறைக்க ஆயுர்வேதம் கூறும் அற்புத மூலிகைகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நெல்லிக்காய்

நெல்லிக்காய்

ஒருவர் நெல்லிக்காயை தினமும் உட்கொண்டு வந்தால், உடலின் மெட்டபாலிசம் சிறப்பாக இருப்பதோடு, ஒட்டுமொத்த உடல் மற்றும் முடியின் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். அதற்கு நெல்லிக்காயை தினமும் ஒன்று சாப்பிடலாம் அல்லது 3-5 கிராம் நெல்லிக்காய் பொடி அல்லது 5-10 மிலி நெல்லிக்காய் ஜூஸை அன்றாடம் உட்கொள்ளலாம்.

நெல்லிக்காயில் எலாஜிக் அமிலம், காலிக் அமிலம், க்யூயர்சிடின் மற்றும் காரிலாஜின் போன்ற கல்லீரலுக்கு நன்மையளிக்கும் உட்பொருட்கள் உள்ளன. இந்த உட்பொருட்கள் உடலினுள் உள்ள அழற்சியைக் குறைப்பதோடு, நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும், இரத்த சர்க்கரை அளவை பராமரிக்கும் மற்றும் இதயத்திற்கு பாதுகாப்பளிக்கும்.

MOST READ: இந்த பொருட்கள் ஆண்களின் ஆண்மைத்தன்மையை அழிக்கும் என்று தெரியுமா?

அஸ்வகந்தா

அஸ்வகந்தா

அஸ்வகந்தாவை அதன் இயற்கையான வடிவத்தில் உட்கொள்வதே அதிகபட்ச பலன்களைப் பெறுவதற்கான சிறந்த வழியாகும். அதற்கு தினமும் உணவில் 3-12 கிராம் அஸ்வகந்தா பொடியை சேர்த்துக் கொள்ளலாம் அல்லது மசாலா டீயுடன் சேர்த்தும் உட்கொள்ளலாம். இந்த ஆயுர்வேத மூலிகை நல்ல தூக்கத்தைக் கொடுப்பதோடு, தைராய்டு செயல்பாட்டை மேம்படுத்தும், உடலின் ஸ்டாமினாவை அதிகரிக்கும், இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தும் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கும். இவை அனைத்துமே உடலின் ஆரோக்கியமான மெட்டபாலிச செயல்பாட்டிற்கு அவசியமானதாகும்.

அதிமதுரம்

அதிமதுரம்

அதுமதுர வேரை அன்றாடம் குடிக்கும் டீயுடன் சேர்த்துக் கொள்ளலாம். ஒருவர் ஒரு நாளைக்கு 1-5 கிராம் அதிமதுரத்தை எடுத்து வந்தால், அதில் உள்ள ப்ளேவோனாய்டுகளான கிளாபிரிடின், லிகுரிடிஜெனின் மற்றும் ஐசோலிகுரிடிஜெனின், மனநலத்தை மேம்படுத்தும். மேலும் இந்த ஆயுர்வேத மூலிகை நினைவாற்றலை மேம்படுத்துவதோடு, மன அழுத்தத்தைக் குறைக்கும். அதுமட்டுமின்றி, இந்த மூலிகைப் பொருள் செரிமானத்தை மென்மையாக்குவதோடு, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் அழற்சியைக் குறைக்கும். இந்த அனைத்து செயல்பாடுகளும் சிறப்பாக இருந்தால், உடலின் மெட்டபாலிசம் மேம்படும்.

MOST READ: ஆண்களே! விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு குட்-பை சொல்லணுமா? இந்த ஜூஸ் குடிங்க...

ஜாதிக்காய்

ஜாதிக்காய்

ஜாதிக்காயை தினமும் 2-3 டீஸ்பூன் எடுத்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து செரிமானம், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, நல்ல தரமான தூக்கத்தைப் பெற உதவும். அதிமதுர வேர் மற்றும் ஜாதிக்காய் இரண்டுமே மன ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இந்த மசாலாப் பொருள் மனநிலை மற்றும் உந்துதலைக் கட்டுப்படுத்தும் நரம்புகளுடன் தொடர்பு கொள்கிறது.

காட்டு அஸ்பாரகஸ்

காட்டு அஸ்பாரகஸ்

சாத்தாவாரி அல்லது காட்டு அஸ்பாரகஸ் ஒரு ஆயுர்வேத மூலிகை. இது காய்கறி வகையான அஸ்பாரகஸ் இனத்தை சேர்ந்தது. இந்த காட்டு அஸ்பாரகஸ் ஆயுர்வேதத்தில் பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மூலிகையில் செரிமானத்தை மேம்படுத்தும், நோயெதிர்ப்பு சக்தியை வலிமைப்படுத்தும் மற்றும் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஸ்டெராய்டல் சாப்போனின்கள் மற்றும் ப்ளேவோனாய்டுகள் உள்ளன.

எனவே 2 டீஸ்பூன் காட்டு அஸ்பாரகஸ் பொடியை வெதுவெதுப்பான பாலில் சேர்த்து கலந்து, தினமும் குடிக்க வேண்டும். இதனால் முழு பலனையும் பெறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ayurveda Suggests These 5 Herbs For Better Metabolism, Digestion And Weight Loss

Read here to know about some of the most effective Ayurvedic herbs that can give a boost to your metabolism, weight loss and digestion.
Story first published: Tuesday, October 1, 2019, 16:14 [IST]
Desktop Bottom Promotion