Just In
- 2 hrs ago Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- 7 hrs ago வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 10 hrs ago மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- 11 hrs ago இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
Don't Miss
- Sports ஐபிஎல் 2024 - சிஎஸ்கே பிளே ஆப் வாய்ப்பு பாதிப்பு.. புள்ளி பட்டியலில் கீழே சரிந்தது
- News தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை.. மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது?
- Finance மாலத்தீவு தேர்தல்: இந்தியாவுக்கு மீண்டும் ஒரு தலைவலி..!
- Automobiles ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
உங்க நினைவாற்றலை மேம்படுத்த நீங்க இந்த உணவுகள கண்டிப்பா தவிர்க்கணுமாம்...!
நிபுணர்களின் கூற்றுப்படி, அதிக அளவு டிரான்ஸ்-ஃபேட் சாப்பிடுபவர்களுக்கு, அல்சைமர் நோய், மூளையின் அளவு குறைதல், மற்றும் அறிவாற்றல் குறைவு போன்ற ஆபத்து ஏற்படுவது அதிகம். டயட் சோடாவில் நினைவாற்றலை குறைக்கும் கூறுகள் உள்ளன.
மூளை உங்கள் உடலிலுள்ள மிக முக்கியமான உறுப்பு. இது உங்கள் இதயத்துடிப்பு, நுரையீரல் சுவாசம் மற்றும் உங்கள் உடலில் உள்ள அனைத்து அமைப்புகளையும் செயல்படுத்துகிறது. அதனால்தான் உங்கள் மூளையை ஆரோக்கியமான உணவோடு உகந்த நிலையில் வேலை செய்வது அவசியம். சில உணவுகள் மூளையில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன, உங்கள் நினைவாற்றல் மற்றும் மனநிலையை பாதிக்கின்றன மற்றும் உங்கள் டிமென்ஷியா அபாயத்தை அதிகரிக்கின்றன. டிமென்ஷியா 2030 க்குள் உலகளவில் 65 மில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதிக்கும் என்று மதிப்பீடுகள் கணித்துள்ளன.
அதிர்ஷ்டவசமாக, உங்கள் உணவில் இருந்து சில உணவுகளை குறைப்பதன் மூலம் உங்கள் நோய்க்கான அபாயத்தை நீங்கள் குறைக்க உதவலாம். நமது உடல் வலிமை முதல் மன நல்வாழ்வு வரை எல்லாமே நமது அன்றாட உணவைப் பொறுத்தது, அதனால்தான் ஆரோக்கியமாக சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. உங்கள் நினைவாற்றலைக் கூர்மையாக்க நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
பானங்கள்
அதிக பிரக்டோஸ் கார்ன் சிரப் (இனிப்புள்ள குளிர் பானங்கள்) குறிப்பாக தீங்கு விளைவிக்கும், இது மூளை வீக்கத்தை ஏற்படுத்துகிறது, நினைவாற்றல் மற்றும் கற்றலை பாதிக்கிறது.
சிப்ஸ்
நிபுணர்களின் கூற்றுப்படி, அதிக அளவு டிரான்ஸ்-ஃபேட் சாப்பிடுபவர்களுக்கு, அல்சைமர் நோய், மூளையின் அளவு குறைதல், மற்றும் அறிவாற்றல் குறைவு போன்ற ஆபத்து ஏற்படுவது அதிகம். டயட் சோடாவில் நினைவாற்றலை குறைக்கும் கூறுகள் உள்ளன.
நூடுல்ஸ்
மூளை-பெறப்பட்ட நியூரோட்ரோபிக் காரணி மூலக்கூறின் உற்பத்தியைக் குறைப்பதன் மூலம் குப்பை உணவு எதிர்மறையாக மூளையைப் பாதிக்கிறது. இந்த மூலக்கூறு தான் நீண்ட நினைவகம், கற்றல் மற்றும் புதிய நியூரான்களுக்கு அவசியம்.
ஆல்கஹால்
நினைவாற்றலை மேம்படுத்த மதுவை தவிர்க்க வேண்டும். பொதுவாக மது அருந்துவது மனதை பாதிக்கிறது. அது நாள்பட்ட ஆல்கஹால் துஷ்பிரயோகம் அல்லது சமூக குடிப்பழக்கமாக இருந்தாலும், அது வைட்டமின் பி 1 ஐ வெளியேற்றுகிறது. இது மூளையின் அளவைக் குறைக்கவும், நரம்பியக்கடத்திகளை அழிக்கவும் மற்றும் பொதுவாக நினைவாற்றலை இழக்கவும் வழிவகுக்கிறது.
என்ன சாப்பிட வேண்டும்?
சியா, ஆளி விதை, அக்ரூட் பருப்புகள் போன்ற ஒமேகா 3 நிறைந்த உணவுகளை உட்க்கொள்வதன் மூலம் மூளையில் அழற்சி எதிர்ப்பு சேர்மங்களின் சுரப்பை அதிகரிக்கும் மற்றும் பாதுகாப்பு விளைவை அதிகரிக்கும்.