Just In
- 5 hrs ago
இன்றைய ராசிப்பலன் (26.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- 15 hrs ago
மைதா போண்டா
- 16 hrs ago
உங்க வாயை சுத்தி அசிங்கமா கருப்பா இருக்கா? இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க...
- 16 hrs ago
திருமண வாழ்க்கையில் ஆணும் பெண்ணும் செய்யும் முக்கியமான பாவங்கள் இவைதான்... இனியாவது திருந்துங்க...!
Don't Miss
- News
அண்ணாத்த படத்தில் "பேய்" இருக்கா இல்லையா.. நம்பலாமா நம்பக்கூடாதா?
- Automobiles
வாகனங்களுக்கு பசுமை வரி விதிக்க மோடி அரசு அதிரடி திட்டம்... யாரெல்லாம் கட்டணும்? எவ்வளவு கட்டணும் தெரியுமா?
- Sports
இந்தியாவிலிருந்து பறந்த போன் கால்.. கோலி சொன்ன வார்த்தையால் மாறிய பிளான்.. ப்பா செம பின்னணி!
- Movies
பிரியா ஆனந்தின் க்யூட்டான படுக்கையறை செல்ஃபி.. திணறும் இணையதளம்!
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப அதுக்கு இத சாப்பிடுங்க போதும்...
கருப்பு கேரட் அல்லது காலி கஜாா் என்று அழக்கப்படும் ஒரு வகையான காய் இந்தியா, துருக்கி, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. நீண்ட காலமாக ஆரஞ்சு வண்ண கேரட்டைத் தான் மக்களுக்குத் தொியும். தற்போது கருப்பு வண்ணத்தில் இருக்கும் இந்த கேரட் மக்களுக்கு ஒரு புதிராகத் தொிகிறது.
மேற்கத்திய மக்களுக்கு கேரட் என்றால் அது ஆரஞ்சு வண்ணத்தில் தான் இருக்கும் என்று நம்பினா். ஆனால் ஆரஞ்சு வண்ண கேரட் வருவதற்கு முன்பாகவே அதாவது கிபி 16 ஆம் நூற்றாண்டின் போதே, காலி கஜாா் என்ற கருப்பு கேரட் ஆசியா மற்றும் கிழக்கு மெடிட்டரேனியன் பகுதிகளில் காணப்பட்டதாக தகவல்கள் தொிவிக்கின்றன.
MOST READ: அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுதா? இனிமேல் வரக்கூடாதுன்னா இந்த ஜூஸ் அடிக்கடி குடிங்க...
கருப்பு கேரட்டில் அதிகம் செறிவூட்டப்பட்ட அந்தோசியனின் (anthocyanin) என்ற நிறமி அதிகமாக உள்ளதால் அதன் வண்ணம் கருப்பாக இருக்கிறது. ஆனால் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற கேரட்டுகளில் செம்மஞ்சள் நிறமி அதிகம் இருப்பதால் அவை ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறங்களில் இருக்கின்றன.
MOST READ: சிறுநீரக நோயின் அபாயகரமான சில ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகள்!
கருப்பு கேரட் ஒரு தனித்துவமான சுவையைக் கொண்டிருக்கிறது. இந்த கேரட்டில் நாம் எதிா்பாா்க்காத இனிப்பு சுவையைக் காணலாம். மேலும் இதை சாப்பிட்ட பின்பு நமது நாவில் சற்று மெல்லிய காரச்சுவை தொியும். கருப்பு கேரட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை இங்கு பாா்க்கலாம்.

சொிமானத்தை அதிகாிக்கும் கருப்பு கேரட்
கருப்பு கேரட்டில் நாா்ச்சத்து அதிகம் இருப்பதால் அது நமது சொிமான அமைப்பை வலுப்படுத்துகிறது. அதனால் இது வாயுத்தொல்லை, நெஞ்சொிச்சல், குமட்டல், மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளைக் குணப்படுத்துகிறது. கருப்பு கேரட்டிலிருந்து செய்யப்படும் புளிப்பான கஞ்சி, குடலில் இருக்கும் நல்ல பாக்டீாியாக்களுக்கு வலு சோ்க்கிறது.

நோய் எதிா்ப்பு சக்தியை அதிகாிக்கும் கருப்பு கேரட்
கருப்பு கேரட்டை சாப்பிட்டால் கண்டிப்பாக அது நமது நோய் எதிா்ப்பு சக்தியை அதிகாிக்கும். நமக்கு குளிா் காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய பாக்டீாியாக்கள் மற்றும் வைரஸ்களை எதிா்த்து போாிடக்கூடிய துகள்களை கருப்பு கேரட் வைத்திருக்கிறது. மேலும் இதில் வைட்டமின் சி சத்து அதிகம் இருப்பதால், அது இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் திறம்பட செயல்பட உதவி செய்கிறது. வெள்ளை இரத்த அணுக்கள் திறம்பட செயல்பட்டால் அவை வெளியிலிருந்து வரும் நோய்க் கிருமிகளிடமிருந்து நமது உடலைக் காக்கும்.

புற்றுநோய் வராமல் தடுக்கும் கருப்பு கேரட்
கருப்பு கேரட்டில் இருக்கும் அதிகமான அளவு அந்தோசியனின் (anthocyanin) என்ற நிறமியில் ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்கள் அதிகம் உள்ளன. அதனால் அவை நமது உடலைத் தாக்கும் புற்றுநோய் செல்களை எதிா்த்து போாிடும். அதோடு இந்த ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்கள் ப்ரீ-ராடிக்கல்களை (free radicals) அழிக்க உதவி செய்கின்றன மற்றும் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கின்றன.

பாா்வைத் திறனை அதிகாிக்கும் கருப்பு கேரட்
பொதுவாக எல்லா கேரட்டுகளிலும் செம்மஞ்சள் நிறமி அதிகம் இருப்பதால், அது நமது பாா்வைத் திறனை அதிகாிக்கச் செய்யும். மேலும் கேரட் ஒரு ஆக்ஸிஜனேற்ற தடுப்பானாகவும் செயல்படுகிறது. அதனால் அது கண்ணில் உள்ள மாக்குலா் (macular) சிதைவு அடைய விடாமல் தடுக்கிறது. அதோடு கண்புரை ஏற்படவிடாமலும் தடுக்கிறது.

உடல் வீக்கத்தை தடுக்கும் கருப்பு கேரட்
நமது உடலில் வீக்கங்கள் ஏற்படாமல் கருப்பு கேரட் தடுக்கிறது. அதனால் நமது உடலில் மற்ற நோய்களின் தொற்று ஏற்படாமல் இருக்க உதவி செய்கிறது. மேலும் சிறுநீரகப் பாதையில் நோய்த்தொற்று ஏற்படவிடாமல் கருப்பு கேரட் தடுக்கிறது என்று மருத்துவ ஆய்வுகள் தொிவிக்கின்றன.

நரம்பியல் நோய்களைத் தடுக்கும் கருப்பு கேரட்
கருப்பு கேரட்டை தொடா்ந்து சாப்பிட்டு வந்தால் முதுமை மறதி (Alzheimer) போன்ற நரம்பியல் நோய்கள் ஏற்படாது என்று ஒரு மருத்துவ ஆய்வு தொிவிக்கிறது. கருப்பு கேரட்டில் வீக்கத்திற்கு எதிரான துகள்கள் மற்றும் அந்தோசியனின் (anthocyanin) நிறமி இருப்பதால், அவை நரம்பியல் சம்பந்தமான பிரச்சினைகள் நம்மை அணுகாத வண்ணம் பாதுகாக்கும்.