For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கற்றாழை ஜூஸ் உடன் இந்த 2 பொருளையும் கலந்து குடிச்சா, தொப்பை வேகமா குறையுமாம்..!

கற்றாழையை ஜூஸ் வடிவில் எடுப்பதே சிறந்த வழி. அதிலும் கற்றாழை ஜூஸ் உடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடிக்கும் போது, உடல் எடையை வேகமாக குறைகிறது.

|

இயற்கை நமக்கு பல்வேறு நன்மைகளை தன்னுள் கொண்டுள்ள பல பொருட்களை கொடுத்துள்ளது. அதில் ஒரு அற்புதமான பொருள் தான் கற்றாழை. தடிமனான சதைப்பற்றுள்ள பகுதியைக் கொண்ட கற்றாழை, ஆயுர்வேதத்தில் பல ஆரோக்கிய மற்றும் அழகு பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பயன்படுத்தப்படுகிறது. கற்றாழை எளிதில் வீட்டில் வளர்க்கக்கூடிய ஒரு செடி. இது பல்வேறு அழகு சாதனப் பொருட்களில் முக்கிய மூலப் பொருளாக பயன்படுத்தப்பட்டும் வருகிறது. ஆனால் கற்றாழை சருமத்தில் எவ்வளவு மாயங்களைப் புரியக்கூடியதோ, அதே அளவில் ஆரோக்கியத்திலும் ஏராளமான நன்மைகளை வாரி வழங்கக்கூடியவை.

Aloe Vera Juice With Lemon And Honey May Work Wonders For Weight Loss

சொல்லப்போனால் கற்றாழை ஒரு குளிர்ச்சியான பொருள். இதில் போதுமான அளவில் சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக இது ஒருவரது உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. அதற்கு கற்றாழையை ஜூஸ் வடிவில் எடுப்பதே சிறந்த வழி. அதிலும் கற்றாழை ஜூஸ் உடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடிக்கும் போது, உடல் எடையை வேகமாக குறைகிறது. இப்போது இந்த ஜூஸை எப்படி தயாரிப்பது என்றும், இந்த ஜூஸ் உடல் எடை இழப்பில் எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் விரிவாக காண்போம்.

MOST READ: இதெல்லாம் உடம்பில் உள்ள தீவிர பிரச்சனையைத் தான் சுட்டிக்காட்டுது-ன்னு தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எடை இழப்பில் கற்றாழை எவ்வாறு செயல்படுகிறது?

எடை இழப்பில் கற்றாழை எவ்வாறு செயல்படுகிறது?

கற்றாழையில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் மட்டுமின்றி, உடல் எடையைக் குறைக்கத் தூண்டும் குறிப்பிட்ட சில செயலில் உள்ள சேர்மங்களும் இருப்பதாக நம்பப்படுகிறது. இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் தேங்கியுள்ள அதிகப்படியான கொழுப்பை வேகமாக எரிக்க உதவி புரிந்து, உடல் எடையை வேகமாக குறைக்க உதவுகிறது. மேலும் கற்றாழையில் மலமிளக்கி பண்புகள் இருப்பதால், சிறிய அளவில் உட்கொள்ளும் போது, அது செரிமானத்திற்கு உதவுவதோடு, உடல் எடை இழப்புக்கும் வழிவகுக்கிறது.

கற்றாழையின் பிற நன்மைகள்

கற்றாழையின் பிற நன்மைகள்

கற்றாழையை ஜூஸாக தயாரித்துக் குடித்து வருவதால், ஒருவரது நோயெதிர்ப்பு சக்தி மேம்படுகிறது. மேலும் இதில் உள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ப்ரீ-ராடிக்கல்களால் செல்களுக்கு ஏற்படும் சேதத்தைத் தடுக்க உதவி புரிகிறது.

எடை இழப்பிற்கு எலுமிச்சை எப்படி உதவுகிறது?

எடை இழப்பிற்கு எலுமிச்சை எப்படி உதவுகிறது?

எலுமிச்சை உடலை வறட்சியடையாமல் தடுப்பதோடு, உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது மற்றும் திருப்தியுணர்வை அளிக்கிறது. இவையே எடை இழப்பிற்கு உதவுகின்றன. அதிலும் ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸ் குறைந்தது 6 கலோரிகளை எரிப்பதாக சொல்லப்படுகிறது. எனவே எடையைக் குறைக்க நினைப்போர் எலுமிச்சையை உணவில் அதிகம் சேர்ப்பது மிகவும் நல்ல பலனை விரைவில் காண உதவும்.

உடல் எடையை இழக்க தேன் எவ்வாறு உதவுகிறது?

உடல் எடையை இழக்க தேன் எவ்வாறு உதவுகிறது?

தேன் எரிபொருளாக செயல்பட்டு கல்லீரல் க்ளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த க்ளுக்கோஸ் மூளையில் சர்க்கரை அளவை அதிகமாக வைத்திருக்க செய்கிறது மற்றும் கொழுப்புக்களை எரியும் ஹார்மோன்களை வெளியிட கட்டாயப்படுத்துகிறது. தேனில் இருந்து முழு பலனையும் பெற, உங்கள் உணவில் சர்க்கரைக்கு மாற்றாக தேனைப் பயன்படுத்துங்கள்.

கற்றாழை ஜூஸ் தயாரிக்க தேவையான பொருட்கள்:

கற்றாழை ஜூஸ் தயாரிக்க தேவையான பொருட்கள்:

* கற்றாழை ஜெல் - 2 டீஸ்பூன்

* எலுமிச்சை - 1 (ஜூஸ் எடுத்துக் கொள்ளவும்)

* தேன் - 1 டீஸ்பூன்

* புதினா- 5-6 இலைகள்

செய்முறை:

செய்முறை:

* மிக்ஸர் ஜாரில் கற்றாழை ஜெல், எலுமிச்சை சாறு, புதினா மற்றும் 1 டம்ளர் நீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதை ஒரு டம்ளரில் ஊற்றி தேன் சேர்த்து கலந்தால், கற்றாழை ஜூஸ் தயார்.

எப்போது குடிப்பது நல்லது?

எப்போது குடிப்பது நல்லது?

உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால், காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் குடிக்க வேண்டும். முக்கியமாக கற்றாழை ஜூஸை அளவுக்கு அதிகமாக குடிக்காதீர்கள். இல்லாவிட்டால் பக்கவிளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Aloe Vera Juice With Lemon And Honey May Work Wonders For Weight Loss

Did you know aloe vera juice with lemon and honey may work wonders for weight loss? Read on to know more...
Desktop Bottom Promotion