Just In
- 5 hrs ago
வார ராசிபலன் (17.01.2021 முதல் 23.01.2021 வரை) – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- 6 hrs ago
இன்றைய ராசிப்பலன் (17.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது…
- 17 hrs ago
பெண்களை கலவியில் திருப்திப்படுத்துவதற்கு இத மட்டும் கரெக்ட்டா பண்ணுனா போதுமாம்... சரியா பண்ணுங்க...!
- 19 hrs ago
காரமான... பெப்பர் மட்டன் வறுவல்
Don't Miss
- Movies
ஆரி, பாலா, ரம்யா, ரியோ, சோம்.. செம சூப்பரா இருக்காங்களே.. இறுதிப்போட்டியில் பங்கேற்ற குடும்பங்கள்!
- News
கொடுமையை பாருங்க.. ஐந்து நாளில் இரண்டு முறை.. 9 பேரால் சிக்கி சீரழிந்த 13 வயது சிறுமி.. ஷாக்!
- Sports
எப்படி போட்டாலும் அடிக்கிறான்.. ஆஸி.யை திணற வைக்கும் சென்னையின் "வாஷிங்க்டன்".. சூறாவளி சுந்தர்!
- Finance
அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..!
- Automobiles
வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா? - மத்திய அரசு விளக்கம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உடல் எடை குறைக்கும் முயற்சியில் தோல்வியை சந்தித்தவரா? அப்ப இந்த 5 வழியை ட்ரை பண்ணுங்க...
உடல் எடையை குறைப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. தினசரி உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு பழக்கம் மட்டுமே ஒருவர் உடல் எடையை குறைக்க சிறந்த வழி. ஆனால், இது அனைவராலும் முடியும் என்று கூறமுடியாது. தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற ஆசையோடு செய்தால், அதில் ஏதாவது ஒரு தடை வந்துவிடும். பின்பு, உடல் எடை குறைப்பு கனவு தகர்ந்துவிடும்.
நீங்கள் உடல் எடை குறைக்கும் முயற்சியில் தொடர்ந்து தடைகளை சந்தித்து வருபவரா? அப்படியெனில் இங்கே கொடுக்கப்பட்டுள்ள 5 வழிகள் உங்களுக்கு தான். வாருங்கள் அவற்றை படித்து தெரிந்து கொண்டு மீண்டும் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் நம்பிக்கையோடு குதிப்போம்...

எண்ணெய் குடிப்பது
செத் ராபர்ட் புத்தகமான சாங்க்ரி-ல டயட் அடிப்படையில், உடல் எடை குறைக்க விரும்புபவர்கள், கண்டிப்பாக ஒரு டீஸ்பூன் சர்க்கரை நீர் அல்லது ஒன்று அல்லது 2 டேபிள்ஸ்பூன் ஆலிவ் ஆயிலை நாளொன்றிற்கு 2 முறை, அதுவும் உணவு உண்ணும் போது நடுவே குடிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து செய்தால் உடல் எடையை எளிதில் குறைத்திடலாம்.

சமைக்கும் போது இனிப்பு சாப்பிடுவது
நிபுணர்கள் கூறுவது என்னவென்றால், சமைத்துக் கொண்டிருக்கும் போது, அதிக சாக்லேட் எதையாவது சாப்பிட வேண்டுமாம். உதாரணத்திற்கு, புதினா, பட்டை அல்லது புளிப்பு சுவை கொண்ட சாக்லேட்டுகளை சாப்பிடலாம். இதன்மூலம், உங்கள் வாய் எப்போதும் பிஸியாகவே இருப்பதனால், வேறு எதையாவது சாப்பிடுவதை தவிர்த்திடலாம். மேலும், இது நல்ல சுவையை நாவிற்கு தரும். இந்த டிப்ஸ், சமைக்கும் போது சாப்பிடுபவர்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

காலை உணவாக கேக் சாப்பிடுவது
இஸ்ரேலிய ஆய்வின்படி, காலை உணவாக கேக் சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவும் என்று தெரியவந்துள்ளது. பருமனானவர்களை கொண்டு நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில், புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் இனிப்புகளை காலை உணவில் தவிர்த்து வந்தனர். அதன் முடிவில், காலை உணவில், குறைந்த கார்போஹைட்ரேட் உட்கொண்டவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது, கேக் சாப்பிட்டவர்கள் தங்களது டயட்டை தொடர முடிந்ததோடு, உடல் எடையும் குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

காரசாரமான உணவை உட்கொள்ளுதல்
பலவிதமான மசாலாக்களை உங்களது உணவில் நீங்கள் சேர்த்துக் கொள்ளும் போது, உணவு கட்டுப்பாட்டை உங்களால் தொடர்ந்து கடைபிடிக்க முடியும். அதாவது, உடல் எடையை குறைக்க உதவும். புதிய மற்றும காரசாரமான உணவுகளை உண்பவர்கள் குறைவாக உணவுகளை உண்ணுவது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. பாரம்பரிய மசாலாக்களான, மஞ்சள், பட்டை மற்றும் சீரகத்தில் ஆன்டிஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளதால், உடலுக்கு மிகவும் நல்லது.

சாப்பிடும் போது மூக்கை மூடி கொள்ளுதல்
உணவில் நறுமணம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். நோஸ் க்ளிப்பிங் அதாவது, மூக்கை மூடிக்கொள்வது ஒரு புதுவிதமான விஷயமாக தோன்றலாம். சாப்பிடும் போது, உங்களது மூக்கை மூடிக் கொண்டால், உங்கள் வயிறு நிரம்பும் வரை உங்களால் சாப்பிட முடியும். ஆனால், உங்களுக்கு விருப்பமான உணவை நீங்கள் சாப்பிடும் அளவு நிச்சயம் குறையும்.