Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
உயர் இரத்த அழுத்த பிரச்சனைக்கு 'டாடா' சொல்லணுமா? அப்ப இந்த காயை அடிக்கடி சாப்பிடுங்க...
சாலட் உட்கொள்ளும் போது அதில் சிவப்பு நிறத்தில் ஒரு இலையை நீங்கள் கண்டிருக்கலாம். லெட்டூஸ் மற்றும் இதர பச்சை இலைகளுடன் சேர்த்து இந்த இலையையும் சாலட்டில் சேர்ப்பார்கள். இதுவே ரேடிக்கியோ.
சாலட் உட்கொள்ளும் போது அதில் சிவப்பு நிறத்தில் ஒரு இலையை நீங்கள் கண்டிருக்கலாம். லெட்டூஸ் மற்றும் இதர பச்சை இலைகளுடன் சேர்த்து இந்த இலையையும் சாலட்டில் சேர்ப்பார்கள். இதுவே ரேடிக்கியோ. இது ஒரு சிவப்பு இலையுடைய காய் ஆகும். இது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஒரு காய் ஆகும். அஸ்டெரசியா குடும்பத்தை சேர்ந்த இந்த இலையுடைய காய் , அடர் சிவப்பு - ஊதா இலைகள் மற்றும் வெள்ளை நரம்புகள் கொண்ட சிறு கசப்பு சுவை கொண்ட ஒரு காயாகும்.

இதனை இத்தாலியன் சிக்கரி, ரெட் சிக்கரி என்று கூறுவர், பெரும்பாலும் இத்தாலிய உணவு வகைகள், சாலட் போன்றவற்றிலும், நட்ஸ் மற்றும் பழங்களுடன் சேர்த்து பரிமாறுவர். மற்ற இலையுடைய காய்கறிகளுடன் ஒப்பிடும் போது ரேடிக்கியோ எவ்வாறு தனித்தன்மை பெறுகிறது? ஆன்டிஆக்சிடண்ட் அதிகம் உள்ள இந்த காயில் மற்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துகளும் மிக அதிகம்.

இதய ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது
ரேடிக்கியோவில் வைட்டமின் கே, மெக்னீசியம், மாங்கனீசு போன்றவை உள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது, அழற்சியைக் குறைத்து, இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, தமனிகளில் அடைப்பு படிவதை தடுக்கிறது. ரேடிக்கியோவில் பாலிஃபீனால் கூறுகள் இருப்பதாகவும், இவற்றிற்கு குருதிதட்டுக்கு எதிரான தன்மை இருப்பதாகவும், இதனால் இரத்த ஓட்டம் மேம்பட்டு, இரத்த உறைவு தடுக்கப்படுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன .

புற்றுநோயை நிர்வகிக்க உதவுகிறது
ரேடிக்கியோவில் அந்தோசைனின் போன்ற ஃபீனாலிக் கூறுகள் உயர்வாக உள்ளன. இவை புற்றுநோய் வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக விளங்கும் ப்ரீ-ராடிக்கல்களை சேதப்படுத்த உதவுகின்றன. அந்தோசைனின் புற்றுநோய் அணுக்களின் வளர்ச்சியைத் தடுப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

ஆரோக்கியமான எலும்புகளுக்கு ஆதரவு தருகிறது
வலிமையான எலும்புகளின் கட்டுமானத்தில் மற்றும் அவற்றை நிர்வகிப்பதில் ரேடிக்கியோ மிகுந்த நன்மைகளைத் தருகிறது. இதற்கு காரணம் இதில் உள்ள வைட்டமின் கே சத்து. இது உடலில் கால்சியம் குவிவதைக் கட்டுப்படுத்த உதவுகிறது, இதனால் எலும்பு வலிமையை மேம்படுத்துகிறது மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் எலும்பு தொடர்பான பிற நோய்களின் அபாயத்தைத் தடுக்கிறது.

கண் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது
கண் ஆரோக்கியத்திற்கு தேவையான அத்தியாவசிய ஆன்டிஆக்சிடண்ட்டான லூட்டின் மற்றும் ஜிக்ஸாந்தின் ராடியோச்சியோவில் உயர்ந்த அளவில் உள்ளது. இந்த ஆன்டிஆக்சிடண்ட்கள் கண்களை தீங்கு விளைவிக்கும் கூறுகளில் இருந்து தடுத்து, கண் தொடர்பான கோளாறுகளை தடுக்க உதவுகிறது.

எடை இழப்பிற்கு உதவுகிறது
நீங்கள் எடை இழப்பிற்கான முயற்சியில் இருந்தால் ரேடிக்கியோ உங்களுக்கு நல்ல பலன் தரும். இந்த சிவப்பு இலையுடைய காய் குறைவான கலோரிகள் கொண்டது. ஆனால் உங்கள் பசியுணர்வைப் போக்கி, நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தரும். அதனால் உங்கள் சாலட், பழச்சாறு போன்றவற்றில் இதனை நீங்கள் சேர்த்துக்கொள்ளலாம்.

இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது
ரேடிக்கியோவில் பொட்டாசியம் அதிக அளவில் உளள்து. அதனால் இரத்த அழுத்தம் குறைகிறது. சிறுநீரகத்தில் உள்ள அதிக அளவு உப்பை போக்கி, உடலின் திரவ அளவை சரியான நிலையில் நிர்வகிக்க உதவுகிறது. இதனால் இரத்த அழுத்தம் குறைகிறது.

செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
ராடிச்சோயோவில் உள்ள குறிப்பிட்ட அளவு நார்ச்சத்து சீரான செரிமானத்தை ஊக்குவிக்கிறது. மலச்சிக்கல், வயிறு உப்புசம், வாய்வு தொல்லை போன்ற பாதிப்புகளைக் குறைத்து, குடல் ஆரோக்கியத்தை வழக்கமான முறையில் பராமரிக்க உதவுகிறது.

தொற்றை எதிர்த்து போராடுகிறது
ராடிச்சோயோவின் ஒட்டுண்ணி எதிர்ப்பு பண்புகள் ஒட்டுண்ணிகளால் இரைப்பைக் குழாயில் ஏற்படும் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவும். ரேடிக்கியோ விலங்குகளில் மலேரியா எதிர்ப்பு மற்றும் ஒட்டுண்ணி எதிர்ப்பு செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.



Click it and Unblock the Notifications











