For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனாவின் 3 ஆம் அலையில் இருந்து உங்களை பாதுகாக்க இத ஃபாலோ பண்ணுங்க போதும்...

|

மாற்றம் மட்டும் தான் அனைவரது வாழ்க்கையிலும் நிலையானது. மாற்றத்தை நோக்கி தமது வாழ்வை நடத்துபவர்கள் உயிர் வாழ்வதற்கு சிறந்த வாய்ப்புகளை உடையவர்கள் என்று பெரும்பாலும் கூறப்படுகிறது. விரும்பி, விரும்பாமல் ஏற்படக்கூடிய அனைத்து மாற்றங்களை ஓர் நிர்பந்தத்தின் பேரில் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். இது எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ, தற்போதைய கொரோனா காலத்திற்கு நன்கு பொருந்தும். உலக அளவில் பெரும் தாக்கத்தையும், எவரும் எதிர்பார்த்திடாத மாற்றத்தையும், இந்த கொரோனா வைரஸ் தொற்று நிகழ்த்தி விட்டது. வைரஸ் தொற்றின் அதிவேக பரவலால், உலக நாடுகள் பெரும் நஷ்டத்தையும், கடும் சவாலையும் எதிர்கொள்ள வேண்டியதாகிற்று.

மாதக்கணத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு, இப்போது அனைவரது வாழ்விலும் பெரும் தடுமாற்றத்தை ஏற்படுத்திவிட்டாலும் கூட, தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. அந்த வகையில், திரையரங்குகள், ஜிம்கள், பள்ளிகள் மற்றும் பணியிடங்கள் உட்பட அனைத்து பொது இடங்களும் திறக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில் கால மாற்றங்களுக்கு ஏற்ப நாம் நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம். தற்போதைய புதிய இயல்பு வாழ்க்கையில் சுகாதாரம் மற்றும் சமூக விலகல் தொடர்பான விதிமுறைகளும் கடுமையாக மாறிவிட்டன என்பது ஏற்கனவே அறியப்பட்ட உண்மை தான்.

MOST READ: கொரோனா, எபோலாவை விட கொடியது 'சப்பரே வைரஸ்' - எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தொடங்கியது 3 ஆம் அலை

தொடங்கியது 3 ஆம் அலை

டெல்லியில் கோவிட்-19 இன் மூன்றாவது அலை தொடங்கிவிட்டது என்பதால், தொற்றுநோய் பாதிப்பிற்குள்ளானவர்களிடம் இருந்தும், அசுத்தமான பரப்புகளில் இருந்தும் நோய் பரவி வருகிறது. எனவே, கொரோனா வைரஸுக்கு எதிரான உலகப் போரில் சுகாதாரம் மற்றும் சமூக இடைவெளி ஆகியவை மிகவும் பயனுள்ள இரண்டு கருவிகளாகவே மாறியுள்ளன. அதை மனதில் வைத்து, சினிமா அரங்குகள், மால்கள், ஜிம்கள், பள்ளிகள் அல்லது பணியிடங்களுக்குச் செல்லும்போது நாம் அனைவரும் எடுக்க வேண்டிய சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பார்ப்போம்.

சுத்திகரிப்பு சார்ந்த கவனம் அதிகம் தேவை

சுத்திகரிப்பு சார்ந்த கவனம் அதிகம் தேவை

மல்டிபிளெக்ஸ், ஷாப்பிங் மால்கள் மற்றும் வணிக வளாகங்கள் திறக்கப்பட்டதால், அனைவரும் சற்று கூடுதல் கவனத்துடனேயே இருக்க வேண்டும். வணிய வளாக நிர்வாகங்கள் அவற்றின் வளாகத்தின் முழுமையான சுகாதாரத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். இருந்தாலும், உங்களது பாதுகாப்பை உறுதி செய்ய நீங்கள் மறந்துவிடாதீர்கள். உங்கள் பயன்படுத்தும் பகுதியின் மேற்பரப்பை சுத்தம் செய்வதற்காக கிருமிநாசினி ஸ்ப்ரேக்களை உடன் எடுத்துச் செல்வது நல்லது. தியேட்டரில் உங்கள் இருக்கையில் அமருவதற்கு முன்பு, இருக்கை அல்லது குறைந்தபட்சம் கை மற்றும் தலை படும் பகுதிகளையாவது கிருமிநாசினி தெளித்துவிட்டு உட்காரலாம். இப்படி செய்வதன் மூலம், நீங்கள் படம் பார்த்த சந்தோஷத்தை மட்டும் எடுத்து செல்லலாம், வைரஸ்களை அல்ல.

கை சுகாதாரம் அவசியம்

கை சுகாதாரம் அவசியம்

நீங்கள் எங்கு சென்றாலும், ஒரு நல்ல தரமான கை சுத்திகரிப்பு (சானிடைசர்) எடுத்துச் செல்வது அவசியம். பொது ஓய்வறையைப் பயன்படுத்தும்போது அல்லது குழாய், கதவு கைப்பிடி, மேசைகள் அல்லது இருக்கை / நாற்காலியின் அமர்வது என நீங்கள் தொடும் ஒவ்வொரு முறையும் வைரஸ் கிருமிகள் அங்கு இருக்கக்கூடும். எனவே, குறைந்தது 60% அல்லது அதற்கு மேற்பட்ட அளவு ஆல்கஹால் கொண்டிருக்கும் ஒரு நல்ல தரமான சானிட்டீசர் மூலம் கைகளை அடிக்கடி தேய்த்து சுத்தம் செய்வதன் மூலம் உங்களை வைரஸிலிருந்து பாதுகாத்திடலாம்.

முக கவசங்கள்

முக கவசங்கள்

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபரின் சுவாசத்தால் வெளியாகும் சுவாச துளிகளால் தான் கோவிட்-19 பரவுகிறது. பாதிக்கப்பட்ட நபரின் அருகாமையில் உள்ள ஒருவர் அத்தகைய சுவாசத்துளிகளை உள்ளிழுக்கும்போது, வைரஸ் அவரது சுவாச அமைப்புகளுக்குள் நுழைந்து, தொற்றுநோயாக உருவாக வாய்ப்புள்ளது. எனவே, நாம் மற்றவர்களுக்கு அருகில் இருக்கும்போது எல்லாம், குறிப்பாக திரையரங்கு, உடற்பயிற்சி கூடம், வணிக வளாகம், கல்வி அல்லது வணிக நிறுவனம் போன்ற மூடிய இடங்களில், நம்மைப் பாதுகாத்துக் கொள்ள நல்ல தரமான முக கவசத்தைப் பயன்படுத்த வேண்டும்.

ஆரோக்கிய சேது ஆப்

ஆரோக்கிய சேது ஆப்

மேலே குறிப்பிட்டுள்ள சுகாதாரம் தொடர்பான செயல்களைத் தவிர, ஆரோக்கிய சேது பயன்பாட்டை நிறுவுவது போன்ற வேறு சில பாதுகாப்பு நடவடிக்கைகளும் உள்ளன. அவை உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவக்கூடியவை. நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருகே பாதிக்கப்பட்ட நபர் யாரேனும் உள்ளனரா என்பதைக் கண்காணிக்க இந்த ஆப் உதவுகிறது. நாடு முழுவதும் ரயில்கள் அல்லது விமானங்களில் பயணிப்பதற்கு முன்பு இந்த ஆப்பை பதிவிறக்கம் செய்வது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சமூக விலகல்

சமூக விலகல்

பொது இடங்களில் மற்றவர்களிடமிருந்து குறைந்தபட்சம் 6 அடி தூரத்தை பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை ஏற்கனவே அனைவருத் அறிந்த ஒன்று தான். குறிப்பாக, தியேட்டர்களில் மாற்று இருக்கைகளில் அமர அனுமதிப்பது மற்றும் பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்கள் போன்ற பொதுப் போக்குவரத்து வாகனங்களிலும் குறிப்பிட்ட விதிமுறைகளும் நடைமுறையில் உள்ளன. உணவகங்கள், கட்டிடம் அல்லது மல்டிபிளக்ஸ் நுழைவாயில்கள் மற்றும் டிக்கெட் கவுண்டர்கள் போன்றவற்றில் சமூக விலகலை பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியமானது.

தொடுதல் இல்லா பரிவர்த்தனைகள்

தொடுதல் இல்லா பரிவர்த்தனைகள்

தியேட்டர்கள், மால்கள் அல்லது உணவகங்கள் போன்ற இடங்களில் பண பரிவர்த்தனை செய்யும் போது, எந்தவொரு நபர்களுடனும் அல்லது மேற்பரப்புகளுடனும் குறைந்தபட்ச தொடர்பை உறுதிசெய்ய பழகிக் கொள்ளுங்கள். எந்தவொரு மேற்பரப்புகளையும் அல்லது காகித நோட்டுகளையும் தேவையின்றி தொடாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். பெரும்பாலும், தொடுமல் இல்லா டெபிட் கார்டு அல்லது யுபிஐ கட்டண முறைகளைப் பயன்படுத்தி பணம் செலுத்துங்கள். இதன்மூலம், தேவையற்ற வைரஸ் தொற்று அபாயத்தை தவிர்த்திடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

6 Hygiene Hacks To Protect Yourself From The Third COVID-19 Wave

Here are some hygiene hacks to protect yourself from the third COVID-19 wave. Read on...