For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

8 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் உங்களுக்கு ஏற்படும் அபாயங்கள் என்னென்ன..?

|

ஒவ்வொரு உயிரினத்திற்கும் தூக்கம் என்பது மிக அவசியமானது. நாள் முழுக்க உழைத்த மனிதன் தனது ஓய்வு நேரத்தில் தான் உடலையும் மனதையும் இளைப்பாறி கொள்கிறான். இந்த ஓய்வு நேரம் இல்லையென்றால் பலவித பாதிப்புகள் உடலுக்கு ஏற்பட கூடும். சிலர் ஓய்வே இல்லாமல் வேலை செய்வார்கள்.

8 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் எப்படிப்பட்ட அபாயங்கள் உடலில் ஏற்படும்..?

இப்படி செய்வதால் முதலில் பாதிக்கப்படுவது அவர்களின் ஆயுட்காலம் தான். தூக்கம் குறைந்தால் நமது உடலின் செயல்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கி விடும். ஒவ்வொரு வயதினருக்கும் ஒரு சில குறிப்பிட்ட கால அளவில் தூக்கம் தேவைப்படுகிறது.

ஏனெனில் சராசரியாக ஒருவருக்கு 8 மணி நேரம் தூக்கம் இன்றியமையாததாகும். 7 முதல் 8 மணி நேரம் தூங்கவில்லை என்றால் எப்படிப்பட்ட நோய்களும், ஆபாயங்களும் உங்களை தாக்கும் என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எதிர்ப்பு சக்தி மண்டலம்

எதிர்ப்பு சக்தி மண்டலம்

சரியான தூக்கம் இல்லையென்றால் முதலில் நமது உடலில் பாதிக்கப்படுவது எதிர்ப்பு சக்தி மண்டலம் தான். தூக்கம் இல்லாததால் எதிர்ப்பு சக்தி மண்டலம் வெளிப்படுத்த கூடிய cytokine என்கிற மூல பொருள் குறைந்து, அடிக்கடி உடல்நல கோளாறுகளை தரும். மேலும், தொற்றுகளுக்கும் வழி வகுக்கும்.

இதயமும் தூங்கமும்...

இதயமும் தூங்கமும்...

8 மணி நேரம் தூக்கம் இல்லையென்றால் உங்களுக்கு 45 சதவீதம் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் சொல்கின்றன. அத்துடன் இதயத்தின் செயற்பாடும் சீராக இருக்காது. 8 மணி நேரம் தூங்கினால் ரத்த அழுத்தத்தை சமமாக வைத்து இதய பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

உடல் எடை

உடல் எடை

8 மணி நேரம் தூங்குபவர்களுக்கு உடல் எடை கூடும் பிரச்சினை இருக்காதாம். 6 மணி நேரத்திற்கு குறைவாக தூக்கம் கொண்டோருக்கு உடல் எடை தாறுமாறாக ஏற கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். சிலருக்கு அடிக்கடி உடல் சோர்வு ஏற்படுவதற்கு முதல் காரணம் இதுவாக தான் இருக்கும்.

திறன் குறைய

திறன் குறைய

ஒருவருக்கு 8 மணி நேரம் தூக்கம் இல்லையென்றால் ஞாபக சக்தி குறைய கூடும். இதுவே சரியான அளவில் தூக்கம் இருந்தால் மூளை ஆரோக்கியமாக இருந்து எல்லாவித வேலைகளையும் சுறுசுறுப்பாக செய்ய உதவும். மேலும், ஞாபக சக்தியையும் அதிகரிக்குமாம்.

MOST READ: தாம்பத்தியத்தில் அதிக ஆற்றலுடன் செயல்பட ஆண்களுக்கு தேவையான வைட்டமின்கள் என்னென்ன..?

சர்க்கரை நோய் அபாயம்..!

சர்க்கரை நோய் அபாயம்..!

குறைந்த தூக்கம் இருந்தால் பலவித பாதிப்புகள் ஒன்றன் பின் ஒன்றனாக வர கூடும். அதில் முக்கியமானது சர்க்கரை நோய் அபாயமும். தூக்கம் சரியாக இல்லையென்றால் குளுக்கோஸ் உற்பத்தி தடை பட கூடும். இதனால் சர்க்கரை நோய் உங்களை எளிதாக பாதிக்க கூடும்.

நல்ல தாம்பத்தியம்...

நல்ல தாம்பத்தியம்...

யாரெல்லாம் 8 மணி நேரம் தூங்கும் பழக்கம் கொண்டுள்ளனரோ அவர்களின் தாம்பத்திய வாழ்வு மிக இனிமையாக இருக்குமாம்.

ஆண்களுக்கு வர கூடிய விரைப்பு தன்மை பிரச்சினைகளும் இதனால் தவிர்க்க படும். எப்போதும் நல்ல தாம்பத்தியம் வேண்டுமென்றால் 8 மணி நேரம் உறங்குங்கள் நண்பர்களே.

நீண்ட ஆயுள்

நீண்ட ஆயுள்

8 மணி நேரம் தூக்கம் உங்களை அதிக ஆயுளுடன் வைத்து கொள்ளும். யாரெல்லாம் 6 மணி நேரத்திற்கும் குறைவாக உறங்குகிறார்களோ அவர்களின் ஆயுள் குறையும் என ஆராய்ச்சிகள் சொல்கின்றன. மேலும், மிக இளம் வயதிலே இவர்களை மரணம் நெருங்க அதிக வாய்ப்புகள் உள்ளதாம்.

தசை வளர்ச்சி

தசை வளர்ச்சி

நாம் எவ்வளவு நேரம் தூங்குகிறோமோ அதை பொருத்து தான் நமது உடல் உறுப்புகளின் வளர்ச்சியும் நிர்ணயிக்கப்படும்.

அந்த வகையில் குறைவான நேரம் நாம் தூங்கினால் நமது தசை வளர்ச்சி குறைய கூடும். அத்துடன் ரத்த ஓட்டமும் பாதிக்கப்படுமாம்.

MOST READ: தினமும் காலையில் இதையெல்லாம் செய்தால் உங்களின் முகம் பளபளவென மாறுமாம்...

மன அழுத்தம்

மன அழுத்தம்

தூக்கம் குறைந்தால் மன அழுத்தம் அதிகரிக்க கூடும். நிம்மதியான தூக்கம் இல்லாமல் இன்று பாதிக்கும் மேற்பட்டோர் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 மணி நேரம் தூக்கம் இல்லையென்றால் மன நல குறைபாடு ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இளமை முகம்

இளமை முகம்

நல்ல தூக்கம் இருந்தால் உடலுக்கு எந்தவித பாதிப்பும் வராது. அந்த வகையில் 8 மணி நேரம் தூங்கினால் சரும பிரச்சினைகள் குறைந்து நீண்ட இளமையான சருமத்தை தரும். அத்துடன் முக சுருக்கங்கள் ஏற்படும் வாய்ப்பும் குறைவாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Happens To Your Body When You Get 8 Hours Of Sleep

This article talks about what happens to your body when you get 8 hours sleep.
Desktop Bottom Promotion