For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் குட்டி தூக்கம் போடுவதால் இப்படிப்பட்ட பயங்கர நோய்கள் உங்களுக்கு வராதாம்..!

|

பல சமயங்களில் நாம் செய்கிற சில விஷயங்கள் உடலுக்கு பல்வேறு நலன்களை தர கூடியதாக இருக்கும். அடிக்கடி நடப்பது முதல் குட்டி தூக்கம் வரை நமக்கு தெரியாமலே நம்மை பல்வேறு பாதிப்புகளில் இருந்து காக்கிறது. பலருக்கும் இது மிகவும் பரீட்சையமான ஒன்று தான். குட்டி தூக்கம் என்பது பள்ளி, கல்லூரி தொடங்கி அலுவலகம் வரை நீடிக்கிறது.

தினமும் குட்டி தூக்கம் போடுவதால் இப்படிப்பட்ட பயங்கர நோய்கள் உங்களுக்கு வராதாம்..!

இந்த நேரத்தில் தான் இது வரும் என நம்மால் குறிப்பிட முடியாது. எந்த நேரங்களில் வேண்டுமானாலும் இந்த குட்டி தூக்கம் நமக்கு வர கூடும். இதனால் உடல்நல பாதிப்புகள் ஏற்படும் என பலர் நினைத்து கொண்டுள்ளனர். ஆனால், அது அப்படி கிடையாது. மாறாக இந்த குட்டி தூக்கம் உங்களுக்கு பல்வேறு வகையில் உதவுகிறது. குட்டி தாக்கத்தினால் எப்படிப்பட்ட மாற்றங்கள் உடலில் உண்டாகும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குட்டி தூக்கம்

குட்டி தூக்கம்

நம்மை பல நேரங்களில் சொர்க்கத்தை போன்ற உணர்வை தருவதே இந்த குட்டி தூக்கம் தான். குட்டி தூக்கத்தால் உடலில் எண்ணற்ற மாற்றங்கள் உண்டாகும்.

ஒரு வித புத்துணர்வும், சுறுசுறுப்பும் இதனால் முதல் கட்டத்தில் கிடைக்கும். இதனை நாம் எடுத்து கொள்ளும் நேரத்தை பொருத்து தான் இதன் பயன்களும் மாறுபடும்.

மூளையின் திறன்

மூளையின் திறன்

குட்டி தூக்கத்தால் உங்களது மூளையின் திறன் பல மடங்கு கூடும். மூளையின் செல்கள் இத்தனை நாட்களை விட தற்போது அதி வேகமாக செயல்படும். மேலும், மூளைக்கு எந்தவித நோய் தொற்றுகளும் ஏற்படாமல் இது காக்கும்.

30 நிமிட தூக்கம்

30 நிமிட தூக்கம்

வெறும் 30 நிமிடம் குட்டி தூக்கம் போடுவதால் உடலுக்கு அதிக ஆரோக்கியம் உண்டாகும். முக்கியமாக மன அழுத்தம் குறையும். கூடவே உடல் வலிகளையும் இது குணப்படுத்த கூடும். அவ்வப்போது 30 நிமிடம் குட்டி தூக்கம் போட்டால் சோர்வில்லாமல் வேலை செய்யலாம்.

MOST READ: தொப்பையை 4 வாரங்களிலே குறைக்கணுமா? அப்போ இந்த பயிற்சியை தினமும் செய்தாலே போதும்!

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய்

குட்டி தூக்கம் பல்வேறு நோய்களை தடுக்கும் வல்லமை கொண்டது. சர்க்கரை நோயின் அபாயத்தை குறைக்கும் தன்மை இதற்குண்டு என தற்போதைய ஆய்வுகள் சொல்கின்றன. மேலும், மறதியை தடுக்க கூடிய ஆற்றலும் இதற்குண்டாம்.

60 நிமிடம் தூக்கம்

60 நிமிடம் தூக்கம்

குட்டி தூக்கத்தை 60 நிமிடம் வரை நீடித்தால் உங்களது செயல் திறன் கூடும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். எப்போதுமே ஆற்றலுடன் செயல்பட 60 நிமிட குட்டி தூக்கம் போதும்.

மேலும், கற்பனை திறன் இதனால் அதிகரிக்கும். உங்களை சிறந்த செயல்திறன் மிக்கவராக மாற்ற குட்டி தூக்கம் மிக அவசியமானது.

இதய நோய்கள்

இதய நோய்கள்

குட்டி தாக்கத்தால் உங்களின் இதய ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். மாரடைப்பு, மன அழுத்தம், இரத்த அழுத்தம் போன்ற பல பாதிப்புகளை தடுக்க குட்டி தூக்கம் சிறந்த முறையாகும். மேலும், இரத்த ஓட்டத்தை சீராக வைத்து கொள்ள குட்டி தூக்கம் உதவுகிறது.

90 நிமிடம் தூக்கம்

90 நிமிடம் தூக்கம்

இது கிட்டத்தட்ட ஒரு முழு சுழற்சி தூக்கமாக கருதப்படுகிறது. இந்த குட்டி தூக்க நிலையானது ஆழ்ந்த நிலையாக கருதப்படுகிறது. உடல் அளவிலும் மனதளவிலும் இந்த குட்டி தூக்கம் நல்ல மாற்றத்தை உங்களுக்கு தரும். எந்தவித மன குழப்பமும் இல்லாமல் இருக்க குட்டி தூக்கம் மிக சிறந்த தேர்வாகும்.

MOST READ: உடலில் இந்த 8 அறிகுறிகள் இருந்தால் கண்டிப்பாக உயிருக்கு ஆபத்துண்டு!

உடல் எடை

உடல் எடை

தினமும் கிடைக்கும் இடைவேளைகளில் ஒரு குட்டி தூக்கம் போட்டால் உங்களது உடல் எடை பிரச்சினைக்கும் தீர்வு கண்டு விடலாம். உடல் எடையை குறைக்கவும் குட்டி தூக்கம் உதவுகிறது.

எப்போதும் மகிழ்ச்சியாகவும், ஆழ்ந்த மன நிலையில் இருக்க வேண்டுமென்றால் குட்டி தூக்கம் அருமையான வழி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Taking a Nap Can Prevent Diseases, Scientists Claim

According to Scientists, taking a nap can prevent you from several diseases.
Desktop Bottom Promotion