For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் சாப்பிடும் இந்த சுவையான உணவுகள் உங்களின் மனநிலையை பாதித்து உங்களை சோகமாக்குமாம்...!

உங்களுக்கு பிடித்த அனைத்து உணவுகளும் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்குமா என்றால் நிச்சயமாக இல்லை என்றுதான் கூறவேண்டும்.

|

மனிதர்களுக்கு மகிழ்ச்சியை தரும் ஒரு விஷயமென்றால் அது உணவுதான். பிடித்த உணவு தரும் மகிழ்ச்சியை வேறு எந்த பொருளாகும் கொடுக்க முடியாது. ஏனெனில் பிடித்த உணவுகள் நமது வயிறை மட்டும் நிரப்புவதில்லை மாறாக மனநிலையையும் மாற்றக்கூடும் என்று ஆரய்ச்சிகள் கூறுகிறது.

List of foods which make you sad

உங்களுக்கு பிடித்த அனைத்து உணவுகளும் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்குமா என்றால் நிச்சயமாக இல்லை என்றுதான் கூறவேண்டும். ஏனெனில் நீங்கள் பிடித்த உணவுகள் என்று சாப்பிடும் சில உணவுகள் உங்களின் மனநிலையை மாற்றி உங்களை சோகமுற செய்யலாம். இந்த பதிவில் உங்களை சோகமாக மாற்றக்கூடும் உணவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சர்க்கரை

சர்க்கரை

மாதவிடாய் நின்ற பெண்களிடையே சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் அவர்களின் மனஅழுத்தம் அதிமாக இருக்க காரணம் அவர்கள் எடுத்து கொள்ளும் சர்க்கரைதான் என்று கண்டறியப்பட்டது. எள்ளளவு அதிகம் சர்க்கரை நாம் சேர்த்து கொள்கிறோமோ அவ்வளவு மனஅழுத்தத்திற்கு ஆளாவோம்.

காரணம்

காரணம்

இதற்கு காரணம் உங்கள் உடலில் இருக்கும் குளுக்கோஸ் அளவு உயரும்போது அது உங்கள் உடலில் இருக்கும் புரதத்தின் அளவை குறைக்கும். இது உங்களை பலவீனமாகவும், சோகமாகவும் உணரச்செய்யும்.

செயற்கை இனிப்புகள்

செயற்கை இனிப்புகள்

சர்க்கரைக்கு மாற்றாக உபயோகப்படுத்தும் பொருட்களும் கெடுதலானவைதான். செயற்கை இனிப்புகளில் இருக்கும் அஸ்பார்டேம் உங்கள் மூளையில் சுரக்கும் மகிழ்ச்சிக்கான ஹார்மோனான செரோடோனின் மீது பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் மனஅழுத்தம் மற்றும் இன்சொமேனியா போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

MOST READ: இந்த பொருட்கள் உங்கள் வீட்டில் இருந்தால் லக்ஷ்மி தேவி உங்கள் வீடு தேடி வருவாராம் தெரியுமா?

ஆல்கஹால்

ஆல்கஹால்

ஆல்கஹால் உங்களுக்கு மகிழ்ச்சியை வழங்குகிறது என்று நீங்கள் நினைத்தால் அது தவறாகும். ஏனெனில் உங்கள் நரம்பு மண்டலம் ஆல்கஹாலை நல்ல வழியில் எடுத்துக்கொள்ளாது. எந்த மதுவை அருந்தினாலும் இதே நிலைதான். தினமும் மது அருந்துவது உங்களை சோகமாக உணரச்செய்யும்.

எண்ணெய்

எண்ணெய்

ஹைட்ரஜனேற்றப்பட்ட எண்ணெய் டிரான்ஸ் கொழுப்பு நிறைந்தது. இந்த எண்ணெயில் சமைப்பது உணவின் சுவையை அதிகரிக்கலாம். இந்த உணவை சாப்பிடுவது உங்கள் வயிற்றில் வீக்கத்தையும், சோகமாகவும் உணரச்செய்யும்.

ட்ரான்ஸ் கொழுப்புகள்

ட்ரான்ஸ் கொழுப்புகள்

ட்ரான்ஸ் கொழுப்புகள் உங்களை மனசோர்வடைய வைப்பது மட்டுமில்லாமல் உங்கள் தமனிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும். இது உங்கள் இதய ஆரோக்கியத்தை பாதிப்பதுடன் உங்களை சோகமாகவும் உணரச்செய்யும்.

சோடியம்

சோடியம்

உப்பு அதிகமாக இருக்கும் அனைத்து உணவுகளும் உங்களை சோகமாக உணரச்செய்யும். உப்பு அதிகமிருக்கும் உணவுகள் உங்களை வீக்கமாக உணர செய்வதுடன் உங்கள் உடலில் இருக்கும் தண்ணீரின் அளவை குறைக்கும். இது உங்களை சோகமாக உணரச்செய்யும்.

MOST READ: மஞ்சளை இந்த அளவிற்கு எடுத்து கொண்டால் உங்களுக்கு சிறுநீரகக்கல் ஏற்படுமாம் தெரியுமா?

கோதுமை தவிடு

கோதுமை தவிடு

இது அவ்வளவு மோசமான உணவல்ல ஆனால் அது நீங்கள் எவ்வளவு எடுத்து கொள்கிறீர்கள் என்பதை பொறுத்தது. இது ஒரு ஆரோக்கிய உணவுதான், ஏனெனில் இது உங்கள் உடல் ஜிங்க் உறிஞ்சும் அளவின் அளவை குறைக்கும். இது உங்களை மனசோர்வடைய வைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

List of foods which make you sad

There are many foods which are known to give you comfort, but can in fact make you feel depressed.
Story first published: Saturday, June 22, 2019, 16:10 [IST]
Desktop Bottom Promotion