For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வலிப்பு நோய் இருக்கிறவங்க கட்டாயமா தெரிஞ்சிக்க வேண்ய விஷயங்கள் என்ன? கட்டாயம் படிங்க...

வலிப்பு நோய் வருபவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை நிறைய உள்ளன. அதை நீங்களும் படித்துத் தெரிந்து கொண்டு மற்றவர்களுக்குச் சொல்லலாம்.

By Mahibala
|

பொதுவாகவே வலிப்பு நோய் உள்ளவர்கள் பற்றி அவர்களுக்கு பயம் இருக்கிறதோ இல்லையோ அவருக்கு நெருக்கமானவர்களுக்கு பயம் இருக்கும். காரணம் எந்த நேரத்தில் வலிப்பு வரும், வெளியில் சென்றிருக்கும் போது வந்துவிட்டால் என்கிற பயம் தான்.

International Epilepsy Day - Things You Should Know About Epilepsy

அதை தடுக்க என்ன செய்யலாம், என்ன மாதிரியான உணவுகள் சாப்பிடலாம் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளாமலே இருப்பது தான். அதைத் தெரிந்து கொண்டு விழிப்புணர்வுடன் இருந்தால் எளிதில் வலிப்பு நோயைக் கடக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வலிப்பு நோய்

வலிப்பு நோய்

வலிப்பு என்பது எப்படி ஏற்படுகிறது என்று தெரிந்து கொண்டாலே பெரிதாக அதன்மீது இருக்கின்ற பயம் குறையத் தொடங்கிவிடும். ஆனால் அதன்மீது அஜாக்கிரதை ஏற்பட்டு விடக்கூடாது.

நம்முடைய உடலின் நரம்பு செல்கள் மற்றும் அதில் உள்ள தேவையற்ற மின்னணுக்கள் மற்றும் அளவுக்கு அதிகமான மின்னணுக்கள் உற்பத்தி செய்து வெளியிடுகிற பொழுது, அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் நம்முடைய உடலில் ஏற்படுகின்ற மாற்றமே வலிப்பு நோய்.

வேறு பெயர்கள்

வேறு பெயர்கள்

இந்த வலிப்பு நோய்க்கு காக்காய் வலிப்பு, ஜன்னி, பிட்ஸ் (fits), எபிலெப்ஸி (epilepsy) என்று பல்வேறு பெயர்கள் உண்டு. இந்த வலிப்பு நோய் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலும் எல்லா வயதினருக்கும் வரும்.

அப்படி வலிப்பு நோய் வருகின்றவர்கள் என்ன தான் மருந்து, மாத்திரைகள் மட்டும் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் போதாது. வாழ்க்கை முறையில் சில சின்ன சின்ன மாற்றங்களைச் செய்வது மற்றும் சில முக்கியமான விஷயங்களை மனதில் வைத்துக் கொள்வது நல்லது.

 வெளியில் செல்வது

வெளியில் செல்வது

மருந்து, மாத்திரைகளைத் தவறாமல் சாப்பிட்டு வந்தால், இந்த பிரச்சினை அதிகம் இருக்காது. அதனால் பள்ளி, கல்லூரி, அலுவலகம், வேலை, உடற்பயிற்சி, பயணங்கள் என எல்லா இடங்களுக்கும் இயல்பாக எப்போதும் போல சென்று வரலாம்.

 திருமண வாழ்க்கை

திருமண வாழ்க்கை

வலிப்பு நோய் உள்ளவர்கள் பொதுவாக திருமணம் செய்து கொள்வதற்குப் பயப்படுவார்கள். ஆனால் அதற்கெல்லாம் அவசியமே இல்லை. சாதாரணமாக எல்லோரையும் போல இவர்களும் தாராளமாகத் திருமணம் செய்து கொள்ளலாம். உடலுறுவு கொள்ளலாம். அதனால் துணைவிக்கோ உங்களுக்கோ எந்தவித பிரச்சினையும் உண்டாகாது.

உங்க இருமலை வெச்சே உடம்புல எந்த உறுப்புல பிரச்சினைனு கண்டுபிடிக்கலாம்? எப்படினு தெரியுமா?

பெண்களாக இருந்தால்

பெண்களாக இருந்தால்

இதுவே வலிப்பு நோய் வருவது பெண்களாக இருந்தால், குழந்தை பெற்றுக் கொள்ளலாம். பிரசவ கால சமயத்தில் மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகள் சாப்பிட்டால் மட்டும் போதும். பிரச்சினைகள் இருக்காது. தாய்ப்பாலும் கொடுக்கலாம்.

அன்றாட வாழ்க்கை

அன்றாட வாழ்க்கை

வலிப்பு நோய் உள்ளவர்கள் நல்ல உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, தியானம், யோகா, நல்ல நேர்மறை சிந்தனைகள் ஆகியவற்றை தினமும் உங்களுடைய வாழ்க்கையில் முறைப்படுத்தி வந்தால் போதும், மற்ற எல்லோரையும் போல சாதாரணமான வாழ்க்கையை வாழ முடியும்.

மருந்துகள்

மருந்துகள்

பொதுவாக வலிப்பு நோய் உள்ளவர்கள் கவனமாக இருப்பது மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவதில் கவனமாக இருக்க வேண்டும்.

மருத்துவர்களிடம் ஆலோசனைகளை மேற்கொள்ளாமல், சாப்பிடுகிற மருந்து மாத்திரைகளை எக்காரணத்தைக் கொண்டும் நிறுத்தக் கூடாது. அதேபால் பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைகளைத் தவிர மற்ற மருந்துகளை மாற்றி சாப்பிடக் கூடாது.

சரியான நேரத்துக்கு மாத்திரைகள் சாப்பிட வேண்டும்.

மன உளைச்சல்

மன உளைச்சல்

வலிப்பு நோய் உள்ளவர்கள் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் எப்போதும் நேர்மறையான எண்ணங்கள் கொண்டிருத்தல் வேண்டும். எதிர்மறை எண்ணங்களால் தேவையில்லாத மன உளைச்சல்கள் உண்டாகும். அதனால் வலிப்பு நோய் உள்ளவர்கள் மிக முக்கியமாக மன உளைச்சல்களைத் தவிர்ப்பது நல்லது.

மதுப்பழக்கம்

மதுப்பழக்கம்

வலிப்பு நோய் பிரச்சினை உள்ளவர்கள் மதுப்பழக்கம் இல்லாமல் இருப்பது மிக முக்கியம். அதேபோல் புகைப்பிடித்தல் மற்றும் மற்ற போதைப் பொருள்கள் பழக்கம் ஏதும் இல்லாமல் இருப்பது நல்லது.

கவனம்

கவனம்

மெஷின்கள், நகரும் பொருள்கள் ஆகியவை மற்றும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் மெஷின்களில் வேலை செய்கின்ற பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

International Epilepsy Day - Things You Should Know About Epilepsy

If you have been diagnosed with epilepsy, you will have many questions. One of the first will probably be, "How can my epilepsy be treated?" There is no single answer to this question. That is because doctors have identified hundreds of different epilepsy syndromes, which involve many different types of seizures.
Story first published: Monday, February 11, 2019, 13:31 [IST]
Desktop Bottom Promotion