Latest Updates
-
சன்டே ஸ்பெஷல் - சிக்கன் வாங்குனா இந்த மாதிரி குழிப் பணியாரம் செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
பாகிஸ்தானில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்ளோ தெரியுமா? இந்திய ரூபாய் பாகிஸ்தானை விட வலிமையாக இருக்க காரணம் என்ன? -
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 09 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க அதிர்ஷ்ட படிக்கட்டில் வேகமாக ஏறப் போறாங்களாம் -
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்..
உங்க வீட்டுல மீன் தொட்டி வச்சா எப்படிப்பட்ட அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு கிடைக்கும்னு தெரியுமா..?
"ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும்" என்கிற கனவு பலருக்கும் இருக்கும். அந்த சொந்த வீட்டில் என்னவெல்லாம் வைக்க வேண்டும் என்கிற பட்டியலையும் கூடவே நாம் வைத்திருப்போம். சிலர் இந்த வருஷத்துக்குள் வீடு வாங்க வேண்டும் என்கிற கனவுடனும் இருப்பார்கள். வீடு வாங்கினால் மட்டும் போதுமா..?! அதற்கான சில முக்கிய பொருளையும் நாம் வீட்டில் வைத்திருக்க வேண்டும். அந்த வகையில் மீன் தொட்டியும் அடங்கும்.

மீன் தொட்டியை வீட்டில் வைப்பதால் உங்களுக்கு கிடைக்க போகும் நன்மைகள் ஏராளம். சாதாரண மீன் தொட்டியினால் அப்படி என்ன நன்மை நமக்கு வந்து விட போகுதுனு நினைக்குறவங்களுக்கு தான் இந்த பதிவு. மீன் தொட்டியை பற்றிய ஆராய்ச்சியில், இதனால் ஏற்படுகின்ற பலன்கள் என்னவென்று தெரிய வந்துள்ளது. சரி வாங்க, உங்க வீட்டு மீன் தொட்டி உங்களுக்கு தர போகுற அதிர்ஷ்டத்தை தெரிந்து கொள்வோம்.

ஆராய்ச்சியின் முடிவு..!
நமது வீட்டில் இருக்க கூடிய ஒவ்வொரு பொருளுக்கும் சில விஞ்ஞான பூர்வமான அர்த்தம் இருக்கின்றன. அவற்றில் பல நமக்கே தெரிவதில்லை. அந்த வகையில் மீன் தொட்டியும் அடங்கும்.
மீன் தொட்டியை வீட்டில் வைத்திருப்பதால் இத்தனை நாட்களாக உங்களுக்கு இருந்த உடல்நல கோளாறுகள், கெட்ட சக்தியின் சீண்டல்கள் அனைத்துமே விலகி விடும் என ஆய்வுகள் சொல்கின்றன.

மாரடைப்பு
மீன் தொட்டியை பற்றிய இந்த மருத்துவத்தை மீன் தொட்டி தெரபி என்றே அழைக்கின்றனர். இதனை கூர்ந்து சில நிமிடங்கள் பார்த்தாலே இதயத்தின் செயல்பாடு சீராக இருக்குமாம். வீட்டில் மீன் தொட்டி வைத்திருப்பவர்களுக்கு பெரும்பாலும் மாரடைப்பு வருவது குறையுமாம்.

ஞபாக மறதிக்குமா..?
இன்று பலர் ஞாபக மறதி நோயால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை சரி செய்ய மிக எளிமையான வழி மீன் தொட்டி தெரபிய தான்.
மீன் தொட்டியை வீடுகளில் வைத்து கொண்டு சிறிது நேரம் அதனை உற்று நோக்கினால் எளிதாக இந்த பிரச்சினைக்கு தீர்வை தரும்.

கெட்ட சக்தியை வெளியேற்ற
நமது வீடுகளில் மீன் தொட்டி ஒன்று வாங்கி வைத்தால் எளிதாக நல்ல சக்தியை பெற்று விட முடியும்.
அத்துடன் வீட்டின் ஈரப்பதத்தையும் இது சீரான அளவில் வைத்து கொள்ளும். மீன் தொட்டி வைத்திருப்பதால் உங்களுக்கு நன்மையே கிட்டும்.

தூக்கமின்மையா..?
இன்று பலருக்கு இருக்க கூடிய பிரச்சினை இந்த தூக்கமின்மை தான். இரவு நேரத்தில் தூக்கமே வரவில்லை என புலம்பும் பலருக்கு தீர்வை தருகின்றது இந்த மீன் தொட்டி வைத்தியம்.
தூங்க போகும் முன் மீன் தொட்டியை சிறிது நிமிடம் பார்த்துவிட்டு சென்றால் ஆழ்ந்த தூக்கம் வருமாம்.

வலி நிவாரணி
மனதளவில் இருக்க கூடிய வலிகளையும், உடல் அளவில் இருக்க கூடிய வலிகளையும் இந்த மீன் தொட்டி தெரபி தீர்த்து விடும் ஆற்றல் பெற்றது. உங்களின் வலிகளை லேசானதாக மாற்ற கூடிய ஆற்றல் இந்த தெரபிக்கு உள்ளது. நோய்வாய்பட்டு வீட்டில் இருப்பவர்களுக்கு இது சிறந்த ஆறுதலாக இருக்குமாம்.

உயர் ரத்த அழுத்தத்திற்கு
ரத்தம் சீராக இல்லையென்றால் பலவித பாதிப்புகள் வரும். அதில் முக்கியமானது உயர் ரத்த அழுத்தம். தினமும் சிறிது நேரம் மீன் தொட்டியின் முன் உங்கள் நேரத்தை செலவிட்டால் நல்ல பலன் இதற்கு கிடைக்கும்.

குழந்தைகளின் பாதிப்பு..!
பெரும்பாலும் குழந்தைகளுக்கு ஏற்படுகின்ற பாதிப்பை இந்த மீன் தொட்டியை வைத்தே நம்மால் சரி செய்ய இயலும் என ஆய்வுகள் சொல்கின்றன.
மந்த புத்தி உள்ள குழந்தைகள் மீன் தொட்டியை அதிக நேரம் பார்த்தால் மூளை சுறுசுறுப்பு அடையுமாம். மேலும் உற்சாகத்துடன் இருப்பார்கள்.

வாழ்வை இனிமையாக்கும்..!
மீன் தொட்டி இருக்கும் வீடுகளில் சண்டை, சச்சரவு குறைவாக அதிக வாய்ப்புகள் உள்ளது. மேலும், வயதானவர்களுக்கு வாழ்வின் அர்த்தத்தை மென்மையாக புரிய வைக்கிறதாம். அத்துடன் எப்போதும் மகிழ்வான மனநிலையை இது தருகின்றது.

படைப்பாற்றலை அதிகரிக்க
வண்ண வண்ண மீன்களை பார்க்கும் பொது, நமது மூளையின் படைப்பாற்றல் பன்மடங்காகும். மேலும், இவை மனதில் சாந்தமான சூழலை ஏற்படுத்தி நிம்மதியை தரும்.
எனவே, உங்கள் வீட்டிலும் ஒரு மீன் தொட்டியை வாங்கி வையுங்கள் நண்பர்களே.



Click it and Unblock the Notifications