For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிட்ரஸ் பழங்களில் இருக்கும் இந்த பொருள் உங்கள் உடல் வலிகளை நொடியில் குணப்படுத்தும் தெரியுமா?

இரத்த நாளங்களில் ஏற்படும் பிரச்சினைகள் உங்கள் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடும். இரத்த நாள பிரச்சினைகளுக்கு இயற்கையாக இருக்கும் நிவாரணம் டியோஸ்மின் என்பதாகும்.

|

இன்று தினந்தோறும் ஒரு புதிய நோய் உருவாகிக்கொண்டே இருக்கிறது. நமது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு மட்டுமின்றி இயங்குவதற்கு கூட இரத்தம் மிகவும் அவசியமானதாகும். அனைத்து உறுப்புகளுக்கும் இரத்தத்தை கொண்டு செல்வதற்கு இரத்த நாளங்கள் மிகவும் அவசியமானதாகும்.

Diosmin Uses And Side Effects

இரத்த நாளங்களில் ஏற்படும் பிரச்சினைகள் உங்கள் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடும். இரத்த நாள பிரச்சினைகளுக்கு இயற்கையாக இருக்கும் நிவாரணம் டியோஸ்மின் என்பதாகும். இந்த டியோஸ்மின் எந்தெந்த பழங்களில் உள்ளது அதன் பலன்கள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டியோஸ்மின் என்றால் என்ன?

டியோஸ்மின் என்றால் என்ன?

டியோஸ்மின் ஒரு ஃபிளவொனாய்ட் என வகைப்படுத்தப்படுகிறது, இதுதான் பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருக்கும் அவற்றின் பசியை தூண்டும் நிறத்திற்கான காரணம் ஆகும். இந்த பொருள் பெரும்பாலான சிட்ரஸ் பழங்களில் உள்ளது. இந்த பழங்களில் இருந்து பிரித்து எடுக்கப்படும் இது பல அழற்சி பண்புகள் மற்றும் வீக்கத்தை குணப்படுத்தும் மருந்துகளை தயாரிக்க பயன்படுகிறது.

எவற்றையெல்லாம் குணப்படுத்தும்?

எவற்றையெல்லாம் குணப்படுத்தும்?

டியோஸ்மின் இன்னொரு பொருளான ஹெஸ்பெரிடினுடன் சேர்ந்து பயன்படுத்தும் போது அது பல குறைபாடுகளை குணப்படுத்தக்கூடும். இது வீக்கங்களை குணப்படுத்த கூடியது மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

கால் வலி

கால் வலி

கால் நரம்புகளில் வீக்கமும், வலியும் ஏற்படும்போது மருத்துவர்களால் முதலில் பரிந்துரைக்கப்படுவது சிட்ரஸ் ஃபிளவொனாய்டுகள்தான். வீக்கத்தை குறைப்பதன் மூலம் நரம்புகள் விரைவில் குணமடையக்கூடும். இதன் மூலம் காலில் அதிக நீரிழப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது. டியோஸ்மின், ஹெஸ்பெரினுடன் சேர்ந்து கால் வலியை விரைவில் குணப்படுத்தும், மேலும் பலருக்கும் காலில் ஏற்படும் அசௌகரியங்களை குணப்படுத்த இது பயன்படுகிறது.

MOST READ: இந்த ராசிகளில் பிறந்தவர்களை வாக்குவாதத்தில் வெல்வது என்பது எவராலும் முடியாத காரியமாகும்...!

மூல நோய்

மூல நோய்

டியோஸ்மின் மற்றும் ஹெஸ்பெரினில் இருக்கும் அற்புத எதிர் அழற்சி பண்புகள் இரத்தநாளங்களின் தரத்தை அதிகரிப்பதன் மூலம் மூலநோய்க்கு ஒரு மிகசிறந்த மருந்ததாக இருக்கிறது. இந்த பிரச்சினையால் பாதிக்கப்படுபவர்கள் இந்த பொருளை எடுத்துக்கொண்ட பிறகு அவர்களின் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதை உணர்வதாக கூறுகிறார்கள்.

மற்ற நோய்கள்

மற்ற நோய்கள்

டியோஸ்மின் இது மட்டுமின்றி கல்லீரல் சேதம், வெரிக்கோஸ் வெயின், கீழ் முதுகு வலி போன்ற பல குறைபாடுகளை குணப்படுத்த பயன்படுகிறது. மேலும் இது ஈறுகளில் ஏற்படும் இரத்தக்கசிவு மற்றும் கண்வீக்கம் போன்றவற்றையும் இது குணப்படுத்தும்.

எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்?

எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்?

இந்த ஃபிளவொனாய்டின் சிறப்பம்சம் என்னவெனில் இது மருத்துவர்களால் பிரிந்துரைக்கப்பட்ட மருத்துவ பொருளாக மாத்திரை வடிவில் கிடைக்கிறது. இதனை பல மருந்து கடைகளில் எளிதில் நீங்கள் பெறலாம். ஆனால் இதனை எடுத்துக்கொள்ளும் முன் உங்கள் மருத்துவர்களிடம் ஆலோசித்து விட்டு எடுத்துக்கொள்வது நல்லது.

MOST READ: உங்க விரலோட நீளமே நீங்க எப்படிப்பட்டவங்கனு தெளிவா சொல்லிரும் தெரியுமா?

பக்க விளைவுகள்

பக்க விளைவுகள்

டியோஸ்மின் சிலருக்கு சில பக்க விளைவுகளை உண்டாக்கும். சிலர்க்கு அடிவயிற்றில் வலி, வயிறு உபாதைகள், சரும அலர்ஜிகள் போன்றவை ஏற்படலாம். ஆரோக்கியமானவர்கள் இதை தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை பேரில் எடுத்து கொள்ளலாம். இரத்தம் அல்லது இதயம் தொடர்பான பிரச்சினை உள்ளவர்களுக்கு இது இதயத்துடிப்பை அதிகரிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Diosmin Uses And Side Effects

Diosmin is commonly turned to by people suffering from vascular problems, as they have often found relief from this natural remedy.
Story first published: Monday, May 20, 2019, 14:41 [IST]
Desktop Bottom Promotion