For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆயுளை அதிகரிக்க ஓலைச்சுவடியில் சித்தர்கள் கூறியள்ள குறிப்புகள் என்ன தெரியுமா?

|

அதிக காலம் உயிர் வாழ வேண்டும் என்கிற ஆசை யாருக்கு தான் இருக்காது. மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் சாகும் நேரத்தில் இன்னும் கொஞ்ச நாள் வாழ வேண்டும் என்கிற ஆசை இருக்கத்தான் செய்யும். என்ன தான் ஆசை இருந்தாலும் இதை நிறைவேற்றும்படி நாம் சிலவற்றை செய்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

மனித ஆயுளை அதிகரிக்க பல்வேறு ஆய்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. ஆயுளை கூட்டுவது என்பது நாம் நினைப்பது போல சாதாரணமான விஷயம் கிடையாது. ஆனால், இன்றைய அறிவியல் இதையும் சாத்தியப்படுத்தி காட்டியுள்ளது.

நீண்ட ஆயுளுடன் வாழ நாம் உண்ணும் உணவை சரிவிகிதமாகவும் சத்தான உணவாகவும் எடுத்து கொண்டால் நிச்சயம் இது சாத்தியமாகும் என அந்த காலத்திலே ஓலைச்சுவடி குறிப்புகள் உள்ளதாம். இனி இந்த பதிவில் எவ்வளவு உணவு சாப்பிட வேண்டும் என்பதையும், எந்தெந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதையும் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆராய்ச்சி!

ஆராய்ச்சி!

ஆயுட்காலத்தை நீடிக்க வைக்க பல்வேறு ஆய்வுகள் இன்றளவும் செய்யப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் மனித இனத்தின் மூலதனமாக உள்ளது.

சாப்பிடும் உணவு தான் ஆயுளை அதிகரிப்பதில் முக்கிய இடத்தில் இருப்பதாக இந்த ஆய்வுகள் சொல்கின்றன. கூடவே உணவின் அளவு மிக அவசியம் என்பதையும் குறிப்பிட்டுள்ளனர்.

குறைந்த கலோரிகள்

குறைந்த கலோரிகள்

காலை நேரத்தில் அதிக கலோரிகள் கொண்ட உணவுகளை சாப்பிடுவது நம் ஆயுளை முற்றிலுமாக பாதித்து விடும்.

குறைந்த கலோரிகள் கொண்ட உணவுகளை எப்போதுமே சேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும் என இந்த ஆய்வுகளின் முடிவு சொல்கிறது.

காரமான உணவுகள்

காரமான உணவுகள்

சாப்பிட கூடிய உணவில் காரத்தன்மை மிகவும் முக்கியமாகும். தினமும் குறைந்தபட்சம் ஒரு வேளையாவது காரமான உணவுகளை சாப்பிட வேண்டும். இது நம் முன்னோர்களே பல ஆயிரத்திற்கு முன் குறிப்பிட்டுள்ள தகவலாகும். இதை தான் இன்றைய ஆய்வுகள் கூறுகின்றன.

MOST READ: விஷ்ணு புராணத்தின் படி இதையெல்லாம் செய்தால் உங்களுக்கு இப்படிப்பட்ட கொடூர நோய்கள் ஏற்படுமாம்!

சீனர்கள்

சீனர்கள்

அதிக காலம் வாழும் மக்கள் சீனாவில் ரொம்பவே உள்ளனர். இவர்களின் உணவு பழக்கம் மற்றும் அன்றாட செயல்களை ஆய்வு செய்ததில் சில ஆச்சரியமான உண்மைகள் வெளிவந்தன.

அதாவது, இவர்கள் வாரத்திற்கு 7 நாட்களும் காரசார உணவுகளை சாப்பிடுவார்களாம். இது தான் அவர்களின் நீண்ட ஆயுளுக்கான இரகசியம் என குறிப்பிடுகின்றனர்.

மீன்

மீன்

கேரட்டினோய்ட்ஸ் அதிகம் மீன்களில் உள்ளதால் நோய்கள் இல்லாமல் நீண்ட ஆயுளுடன் உயிர் வாழ வைக்கும். குறிப்பாக சல்மான், டூனா முதலிய மீன்கள் இதில் முதல் இடத்தில் உள்ளதாம். வாரத்திற்கு 1 அல்லது 2 முறை மீனை உணவில் சேர்த்து கொண்டால் ஆயுள் அதிகரிக்கும்.

குறைந்த உணவு

குறைந்த உணவு

எப்போதுமே உணவை குறைவான அளவில் எடுத்து கொண்டால் உடலுக்கு நல்லது தான். உணவுகளை பற்றிய ஆய்வுகளும் இதை தான் சொல்கின்றன.

அதாவது சாப்பிட கூடிய உணவை குறைவான அளவில் எடுத்து கொண்டால் நோய்களுக்கான வாய்ப்பு மிக குறைவு,. இதுவே உங்களை நீண்ட ஆயுளுடன் வாழ வழி வகுக்கும்.

செல்களின் வளர்ச்சி

செல்களின் வளர்ச்சி

ஒவ்வொரு உயிரினமும் வளர்ச்சி அடைய மிக முக்கியமாக தேவைப்படுவது செல்கள் தான். செல்களின் வளர்ச்சி சரிவர இல்லையெனில் அவை மிக விரைவிலே சிதைவடைய தொடங்கும்.

இதே நிலை தொடர்ந்தால் எதிர்ப்பு சக்தி குறைபாடு உண்டாகி வியாதிகள் ஒன்றன் பின் ஒன்றானாக வர தொடங்கும்.

MOST READ: ஆண்கள் ஆண்குறியின் மேல் தோலை நீக்க வேண்டும்- பெண் எம்.பி பகிரங்க பேச்சு! வைரல் செய்தி!

பருப்பு வகைகள்

பருப்பு வகைகள்

தினமும் 3 பாதாம் பருப்பு சாப்பிட்டு வருவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். நீண்ட காலம் இளமையாக இருக்க இது போன்ற பருப்பு வகைகளில் ஏதேனும் ஒன்றை தினசரி சாப்பிட்டு வந்தாலே போதும். இவை இதய நோய், புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படாமல் இருக்க 20% வழி வகுக்குகிறது.

உறுப்புகள் செயலிழத்தல்

உறுப்புகள் செயலிழத்தல்

நமது உடல் தேவையையும், உறுப்புகளின் தேவையையும் நன்றாக அறிந்து உண்ண வேண்டும். அளவுக்கு அதிகமாக உண்பதால் உடல் எடை கூடுதல், கலோரிகள் அதிகரித்தல், சர்க்கரை நோய், இதய பாதிப்பு முதலிய பல்வேறு அபாயங்கள் ஏற்படுமாம். இதை தடக்க மேற்சொன்ன குறிப்புகளை கடைபிடித்து சாப்பிட்டு வந்தாலே நீண்ட ஆயுளுடன் வாழ்வீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Can we live longer by eating less?

This articles talks about can we live longer by eating less?