Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
ஆண்களே! தொப்பையை சீக்கிரம் குறைங்க... இல்லன்னா இந்த நோய் வந்துடும்...
இங்கு ஏன் ஆண்கள் கட்டாயம் உடல் பருமனைக் குறைக்க வேண்டும் என்பதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆண்களுக்கு தொப்பை வருவதற்கு, அவர்கள் குடிக்கும் பீர் ஒரு காரணமாக இருந்தாலும், உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம், ஹார்மோன் பிரச்சனைகள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகள் போன்றவைகளும் முக்கிய காரணங்களாகும். இருப்பினும், தற்போதைய அவசர உலகில் உட்கார்ந்தவாறே வேலை செய்வதாலும், அலுவலக வேலைப்பளுவினால், எந்நேரமும் உடல் மற்றும் மனம் அழுத்தத்துடன் இருக்க வேண்டியுள்ளது.
வேலைப்பளுவால் பலருக்கு உடற்பயிற்சி செய்யவே நேரம் இருப்பதில்லை. இதன் விளைவாக ஆண்கள் தனது கஷ்டத்தைக் குறைப்பதற்கு சிகரெட், மது போன்ற பழக்கங்களைக் கொண்டிருக்கின்றனர். இதனால் மிகவும் மோசமான தொப்பை என்னும் உடல் பருமனை அடைய நேரிடுகிறது. தொப்பை வந்துவிட்டால், அது அழைப்பில்லா விருந்தாளி போன்று பல நோய்களை வரவழைத்து அவஸ்தைப்படச் செய்யும்.

பெண்கள் குண்டாவதில்லையா என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் பெண்களை விட ஆண்கள் தான் உடல் பருமனால் பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். பெண்கள் தினமும் வீட்டு வேலைகளைச் செய்து, உடலுக்கு சிறுசிறு வேலைகளைக் கொடுக்கின்றனர். ஆனால் ஆண்களோ அப்படி இல்லை. உட்கார்ந்து செய்யும் அலுவலக வேலை மட்டும் தான்.
எனவே தான் குண்டான பெண்களை விட குண்டான ஆண்களுக்கு நோய்த் தாக்கம் அதிகம் உள்ளது. இப்போது ஆண்கள் தங்கள் தொப்பையைக் குறைக்காவிட்டால் சந்திக்கும் பிரச்சனைகள் என்னவென்று காண்போம்.

இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால்
பெரும்பாலான ஆண்கள் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சனைகளை சந்திப்பதற்கு, தொப்பை தான் முக்கிய காரணம். தொப்பையைக் குறைக்க ஆரம்பித்துவிட்டால், தானாக இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்றவை கட்டுப்பாட்டுடன் இருக்கும். ஒருவேளை தவிர்த்தால், நிலைமை மோசமாகி உயிரை இழக்க வேண்டிவரும்.

இதய பிரச்சனை
பெண்களை விட ஆண்களுக்கு மாரடைப்பால் உயிரை இழப்பதற்கு முக்கிய காரணம் அவர்கள் குண்டாக இருப்பது தான். ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையுடன், மன அழுத்தத்துடன் ஒரு ஆண் இருந்தால், அவருக்கு மாரடைப்பு வருதற்கான அபாயம் அதிகம் உள்ளது. எனவே தான் ஆண்கள் தொப்பையைக் குறைக்க வேண்டியது அவசியம் என்கிறார்கள்.

புற்றுநோய்
ஆண்கள் தொப்பையைக் கொண்டிருந்தால், புரோஸ்டேட் மற்றும் குடல் புற்றுநோய் வரும் அபாயம் அதிகரிக்கும். எப்படியெனில் கொழுப்புக்கள் உடலில் அதிகரிக்கும் போது, அதனால் ஹார்மோன்களின் உற்பத்தி மற்றும் வளர்ச்சி காரணிகள் செல்களின் பணியைப் பாதித்து, புற்றுநோய் செல்களின் அபாயத்தை அதிகரிக்கும்.

சர்க்கரை நோய்
குண்டாக இருப்பவர்களுக்கு அதிகமாக இனிப்புக்களை சாப்பிடும் பழக்கம் இருக்கும். இதனால் அவர்களின் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து, சர்க்கரை நோய் வருவதற்கான அபாயம் அதிகம் இருக்கும்.

கல்லீரல் பிரச்சனைகள்
ஆண்கள் தொப்பையைக் குறைக்காமல் அப்படியே விட்டுவிட்டால், அதன் விளைவாக கல்லீரல் பிரச்சனைகளான கொழுப்பு கல்லீரல் அல்லது கல்லீரல் வீக்கம் போன்ற பிரச்சனைகளால் அதிகம் அவஸ்தைப்பட நேரிடும். எனவே உடனே தொப்பையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள்.

ஆர்த்ரிடிஸ்
உடல் பருமன் கொண்ட ஆண்கள் தசை மற்றும் மூட்டு பிரச்சனைகளால் அதிகம் கஷ்டப்படுவார்கள். குறிப்பாக குண்டாக இருக்கும் ஆண்கள் கால் மூட்டு வலியால் அவஸ்தைப்படுவார்கள். மூட்டு பிரச்சனைகள் பல நாட்களாக நீடித்தால், அது அப்படியே ஆர்த்ரிடிஸ் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனைக்கு உள்ளாக்கும்.

தூக்க பிரச்சனைகள்
குண்டாக அல்லது தொப்பை கொண்ட ஆண்கள் அதிகமாக குறட்டை விடுவார்கள். இதற்கு காரணம் அவர்களுக்கு தூங்கும் போது ஆக்ஸிஜன் குறைவாக கிடைப்பதே ஆகும். எனவே குறட்டைப் பிரச்சனையைத் தவிர்க்க தொப்பையைக் குறையுங்கள்.

பாலியல் பிரச்சனைகள்
தொப்பையைக் கொண்ட ஆண்களின் பாலியல் வாழ்க்கை திருப்திகரமாகவே இருக்காது. ஏனெனில் குண்டாக இருக்கும் ஆண்களால் உறவின் போது விறைப்புத்தன்மை பிரச்சனையை சந்திப்பார்கள். இதற்கு உடலில் கொழுப்புக்களின் தேக்கத்தால், ஆணுறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தின் அளவு குறைந்து, விறைப்புத்தன்மை குறைபாட்டை உண்டாக்குகிறது.



Click it and Unblock the Notifications