For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் நடுராத்திரியில் ஒரே நேரத்தில் நீங்கள் எழுந்துக்கொள்ள பல திடுக்கிடும் காரணங்கள் உள்ளது..!

|

பகல் முழுவதும் உழைத்து ஓய்ந்த மனிதன் இரவில் இனிமையாக உறக்கம் கொள்கிறான். ஒரு மனிதனுக்கு மற்ற எல்லாவற்றையும் காட்டிலும் உறக்கம் மிக முக்கியமான ஒன்றாகும். உடல் அலுப்பை போக்கி கொள்ளவும், நிம்மதியாக சிறிது நேரம் இருக்கவும் ஒவ்வொருவருக்கும் தூக்கம் இன்றியமையாததாகும்.

தினமும் நடுராத்திரியில் ஒரே நேரத்தில் நீங்கள் எழுந்துக்கொள்ள ஒரு திடுக்கிடும் காரணம் உள்ளது..!

ஆனால், பலருக்கு இந்த தூக்கத்தில் தான் பல்வேறு பிரச்சினைகள் வருகிறது. குறிப்பாக தினமும் நடு இரவில் ஒரே நேரத்தில் நாம் எழுந்து கொள்வோம். இதற்கு காரணம் என்ன என்பது நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், இதற்கு பின் இவ்வளவு பெரிய திடுக்கிடும் விஷயம் இருக்கும் என்பதை இனி நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உங்களுக்கு நடந்ததுண்டா..?

உங்களுக்கு நடந்ததுண்டா..?

நம்மில் பலருக்கு தூங்கும் நேரத்தில் எண்ணற்ற புது வித விஷயங்கள் நடக்க கூடும். ஒரு சிலர் தூக்கத்தில் நடப்பார்கள், ஒரு சிலர் புலம்புவார்கள், வேறு சிலர் தூக்கத்தில் அழுவார்கள், மேலும் சிலர் தினமும் ஒரே நேரத்தில் நடு ராத்திரியில் கண் விழித்து கொள்வர். நீங்கள் இது வரை இது ஏன் நடக்கிறது என்று யோசித்ததுண்டா..?

சீனர்களின் முறைப்படி...

சீனர்களின் முறைப்படி...

இது போன்ற தூக்கத்தில் ஒரே நேரத்தில் எழுந்து கொள்ள சில முக்கிய காரணிகள் இருக்கின்றன. இதனை சீனர்கள் அவர்களின் பாரம்பரிய மருத்துவத்தில் குறிப்பிட்டுள்ளனர். இப்படி எழுந்து கொள்வதற்கு நமது உடல் உறுப்புகள் தான் முக்கிய காரணமாம். இதற்கும் ஒரு அட்டவணையும் வைத்துள்ளனர்.

12 வித்தியாசமான நேரங்கள்..!

12 வித்தியாசமான நேரங்கள்..!

அதாவது, நாம் கண் விழித்து கொள்ளும் நேரத்தை பொறுத்து, எந்த உறுப்பு மோசமான நிலையில் உள்ளது அல்லது ஆரோக்கியமாக உள்ளது என்பதை அறிய முடியுமாம். இதனை 12 வகையான நேரங்களில் 12 உறுப்புகளாக பிரித்து வைத்துள்ளனர். இதே தான் அடுத்த 12 மணி நேரத்திற்கும் நிகழும்.

இரவு 9-11 மணி...

இரவு 9-11 மணி...

உங்களுக்கு இரவு 9-11 மணியில் தூங்குவது சீரமமான விஷயமாக இருந்தால், அதற்கு காரணம் உங்களின் எதிர்ப்பு சக்தி மண்டலமும், தைராய்டு சுரப்பியும் பிரச்சினையில் உள்ளது என்பது தான். இந்த நேரத்தில் உங்களால் தூங்க முடியவில்லை என்றால், உங்களுக்கு அதிக மன அழுத்தம், கவலைகள் இருக்கின்றது என அர்த்தம்.

MOST READ: உடல் எடையை 2 வாரத்திலேயே குறைக்க, ஒரு துண்டு இஞ்சியை இப்படி பயன்படுத்துங்க...!

இரவு 11-1 மணி...

இரவு 11-1 மணி...

இந்த நேரத்தில் நீங்கள் தூக்கம் வரமல் அவதிப்படுகின்றீர்கள் என்றால் அதற்கு காரணம் உங்களின் பித்தப்பை கோளாறாக உள்ளது என்பதுதான். இதனால் உங்களுக்கு செரிமான பிரச்சினை, மன கசப்பு, கொழுப்புகள் கூடுதல், பிதைப்பையில் கற்கள் உருவாதல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட கூடும்.

நடுநிசி 1-3 மணி...

நடுநிசி 1-3 மணி...

பொதுவாக இந்த நேரத்தில் தான் கல்லீரல் தனது முக்கியமான வெளியை செய்கிறது. அதாவது, அழுக்குகளை ரத்தத்தில் இருந்து இது சுத்திகரிக்கிறது. இந்த நேரத்தில் நீங்கள் உறங்கவில்லையென்றால், உங்களின் கல்லீரல் மோசமான நிலைக்கு தள்ளப்பட உள்ளது என அர்த்தம். எனவே, இந்த நேரத்தில் அன்றாடம் நீங்கள் எழுந்து கொண்டால் கோபம், மன குழப்பம், எதிர்மறை எண்ணங்கள் ஏற்படும்.

விடியற்காலை 3-5 மணி...

விடியற்காலை 3-5 மணி...

நுரையீரலானது இந்த நேரத்தில் தான் ஆக்சிஜனை எல்லா உறுப்புகளுக்கும் செலுத்த அந்த புது நாளில் தனது வேலையை ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் தூக்கம் வரமால் நீங்கள் எழுந்து கொண்டால் சளி பிரச்சினை, சுவாச கோளாறுகள், பசியின்மை ஏற்பட கூடும்.

காலை 5-7 மணி

காலை 5-7 மணி

பெருங்குடல் இந்த நேரத்தில் தான் நமது உடலிலிருந்து அழுக்குகளை வெளியேற்ற தொடங்கும். இந்த நேரத்தில் நீங்கள் எழுத்து கொள்ளவில்லையென்றால் உங்களுக்கு மலசிக்கல், உடல் எடை கூடுதல், விரைவில் வயதாகுதல் போன்ற பிரச்சினைகள் வர தொடங்கும்.

MOST READ: முதுகெலும்பின் பலத்தை இரட்டிப்பாக மாற்றும் உணவுகள்..! எவ்வளவு சாப்பிடணும்...?

உங்களுக்கு எந்த நேரம்..?

உங்களுக்கு எந்த நேரம்..?

மேற்சொன்ன நேரங்களில் நீங்கள் எந்த நேரத்தில் கண் விழித்து கொள்கிறீர்களோ, அந்த நேரம் தான் உங்களின் உடல் நலத்தை குறிக்கிறது. இந்த முறையை தான் விஞ்ஞானிகளும் பின்பற்றி வருகின்றனர். உங்களுக்கு தினமும் ஒரே நேரத்தில் தூக்கம் களைந்தால் எந்த உறுப்பு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை இதை வைத்தே உணர்ந்து கொள்ளலாம்.

நிம்மதியான உறக்கம்...

நிம்மதியான உறக்கம்...

நாம் எந்த நேரத்தில் எழுந்து கொள்கிறோம் என்பதை பொறுத்தே நமது உடல் ஆரோக்கியம் நிர்மயிக்கப்படுகிறது. மேலும், அதிக நேர தூக்கமும், குறைந்த நேர தூக்கமும் நமது உடலுக்கு பாதிப்பை நிச்சயம் தரும். எனவே, அளவாக உறங்கி நிம்மதியான வாழ்வை மேற்கொள்ளுங்கள்.

இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். மேலும், இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Do You Waking Up at the Same Time Every Night?

There are some vital health factors that why we're waking up at the same time every night.
Desktop Bottom Promotion