Just In
- 6 hrs ago
எல்லோரும் விரும்பும் கூட்டாளராக நீங்க இருக்க என்ன பண்ணனும் தெரியுமா?
- 7 hrs ago
உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க இந்த கசப்பு உணவுகளை சாப்பிட்டாலே போதுமாம்..!
- 8 hrs ago
நாவூற வைக்கும்... பஞ்சாபி மட்டன் மசாலா
- 8 hrs ago
உங்க ராசிப்படி நீங்க எந்த வகையான நண்பர் தெரியுமா? நீங்க தேவாவா இல்ல சூர்யாவா? தெரிஞ்சிக்கோங்க...!
Don't Miss
- News
இந்தியா- சீனா ராணுவ தளபதிகள் இடையேயான 9-ம் கட்ட பேச்சுவார்த்தை- படைகுறைப்பு குறித்து முடிவு வருமா?
- Automobiles
350,000வது மான்ஸ்டர் பைக்கை டெலிவிரி செய்தது டுகாட்டி!! இந்தியாவில் விற்பனையில் இருக்கா?
- Sports
தம்பிகளா.. அப்படி ஓரமா போய் உட்காருங்க.. இளம் வீரர்களுக்கு நோ சான்ஸ்.. இந்திய அணி முடிவு!
- Finance
யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..!
- Movies
கொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உங்க கண் இப்படித்தான் மஞ்சளா இருக்கா?... அப்போ அதுவாதான் இருக்கும்...
சிலருக்கு நன்றாக இருந்த கண்கள் திடீரென சில நாட்களில் மஞ்சளாக மாறியிருக்கும். கிராமங்களில் கண் மஞ்சள் பூத்திருக்கிறது என்று சொல்வார்கள். ஆனால் அதை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. கண்கள் ஏன் மஞ்சளாக மாறுகிறது?... அதற்கு என்ன காரணம் என்று இந்த தொகுப்பில் காணலாம்.

முறையற்ற மல வெளியேற்றம்
உயிரைக் கொல்லக்கூடிய ஒரு ஆபத்தான நோய் தான் இந்த மஞ்சள் காமாலை நோய். இதனால் உங்கள் கண்கள் மஞ்சள் நிறத்தில் மாறிவிடும். இந்த மஞ்சள் காமாலை நோய் நமது இரத்தத்தில் உள்ள ஹூமோகுளோபின் பிலிரூபினாக உடைவதால் ஏற்படுகிறது. இதனால் பிலிரூபின் அளவு அதிகரித்து அவற்றை வெளியேற்ற முடியாமல் இந்த மஞ்சள் காமாலை நோய் வருகிறது. பிலிரூபின் முதலில் நமது கல்லீரலை அடைந்து அங்கிருந்து பித்த குழாய் வழியாக மலமாக வெளியேறுகிறது. ஆனால் இது சரிவர நடக்காதபட்சத்தில் இந்த பிலிரூபின் நமது சருமத்திலயே தங்கி விடும். இதனால் தான் நமது உடலும் மஞ்சள் நிறத்தில் மாற்றம் பெருகிறது. உங்கள் கண்கள் கூட மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
நமது கண்களில் உள்ள விழிவெண் படலமானது இயற்கையாக வெள்ளை நிறத்தில் இருக்கும். அதன் நிறம் மஞ்சள் நிறத்தில் மாறும் போது நமக்கு ஏற்பட்டுள்ள நோயின் அறிகுறியை அது காட்டுகிறது.

மஞ்சளாகக் காரணங்கள்
கீழே உள்ள உறுப்புகள் எல்லாம் சரியாக செயல்படாமல் இருந்தால் இந்த பாதிப்பு ஏற்படும்.
- கல்லீரல்
- பித்தப்பை
- கணையம்
- கல்லீரல் பாதிக்கப்பட்ட நிலை

கல்லீரல் பாதிப்பு
கல்லீரல் என்பது நமது உடலில் உள்ள முக்கியமான உறுப்பு. நமது இரத்தத்தில் உள்ள இரத்த சிவப்பணுக்களை சிதைவு செய்து உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் முக்கிய வேலைகளை செய்கிறது. எனவே இந்த வேலைகள் சரிவர செயல்படாத சமயத்தில் நமது கண்கள் மஞ்சள் நிறத்தில் மாற ஆரம்பித்து விடும். இதனால் கல்லீரலில் பாதிப்பு அல்லது ஈரல் நோய் ஏற்படுகிறது.
காரணம்
கல்லீரல் பாதிப்பு உண்டாகப் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் குறிப்பாக,
- மதுப்பழக்கம்
- கல்லீரல் புற்று நோய்
- கல்லீரல் தொற்று
பொதுவாக உடல் பருமனாவர்கள் கொழுப்பு கல்லீரல் நோயால் பாதிப்படைகின்றனர்.
ஹெபடைடிஸ் பி மற்றும் சி
ஹெபடைடிஸ் ஏ, டி மற்றும் ஈ போன்ற பாதிப்புகள் நமக்கு மஞ்சள் காமாலை நோயை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. ஆனால் பி மற்றும் சி யுடன் ஒப்பிடும் போது இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறைவு.

மரபணு நிலை
சில மருத்துவர்கள் என்ன கூறுகிறார்கள் என்றால் ஈரல் நோய் மரபணு சார்ந்த நோயும் கூட என்கின்றனர். அதாவது கல்லீரலில் இருக்கும் இரும்புச் சத்தை சேகரிப்பில் பாதிப்பு ஏற்படும். இதற்கு ஹீமோகுரோமடோடிஸ் என்று பெயர். மேலும் அதிகப்படியான தாமிரம் கல்லீரலில் தங்கி விடுவதால் வில்சன் நோய் ஏற்படுகிறது. போர்பைபியா என்பது மரபு வழி நோயாகும். இந்த நோய் அதிகப்படியான போர்பைரின் உருவாக்குவதால் நமது இரத்த சிவப்பணுக்கள் பாதிப்படைகிறது. எந்த மாதிரியான நிலைகள் கல்லீரலை பாதிப்படையச் செய்கின்றன.
அறிகுறிகள்
- பசியின்மை
- வாந்தி
- தீடீரென்று உடல் எடை குறைதல்
- அதிகப்படியான உடல் சோர்வு
- குளிர் நடுக்கம்
- காய்ச்சல்
- வயிற்று வலி
- தீடீரென்று உடல் எடை குறைதல்
- பித்த குழாய் நோய்
- பித்த நீர் கட்டிகள்
- ஹெபடைடிஸ்
- இதர கல்லீரல் பாதிப்பு

பித்தப்பை பாதிப்பு ஏற்படக் காரணங்கள்
கல்லீரலில் உள்ள பித்த பையில் பித்த நீர் சுரக்கப்பட்டு நமது சீரண வேலைகளை செய்கிறது. நமது பித்த பை அடைக்கப்படும் போது நமக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகிறது. பொதுவாக பித்தப்பையில் ஏற்படும் பித்தகற்களால் இந்த அடைப்பு ஏற்படுகிறது. இதைத் தவிர கட்டிகள், நீர்க்கட்டிகள் மற்றும் பித்தப்பை வீக்கம் போன்ற காரணங்களாலும் கல்லீரல் பாதிப்படைகிறது.
பித்தப்பை கீழே உள்ள காரணங்களாலும் பாதிப்படைகின்றன

கணையம் பாதிப்படைய காரணங்கள்
கணையக் குழாயும், பித்தப்பை குழாயும் சிறுகுடலுடன் இணைந்துள்ளது. எனவே கணையக் குழாய் பாதிப்படையும் போது பித்த குழாயும் பாதிப்படைந்து நமக்கு மஞ்சள் காமாலை நோயை ஏற்படுத்துகிறது. கணைய புற்று நோயும் இதற்கு ஒரு காரணம் ஆகும்.
இரத்தத்தில் பிலிரூமின் அளவு அதிகரிக்கும் போது கருப்பு நிறத்தில் சிறுநீர், லேசான நிறத்தில் மலம், சரும அரிப்பு போன்றவை ஏற்படும்.
போன்றவற்றால் மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்படுகிறது.

இரத்தக் கோளாறுகள்
இரத்த சிவப்பணுக்களின் சிதைவு சரியாக நடக்கவில்லை என்றாலும் பிலிரூமின் அளவு அதிகரித்து மஞ்சள் காமாலை நோய் ஏற்படும். இதனால் கண்கள் மஞ்சள் நிறத்தில் மாற ஆரம்பித்து விடும்.
மருந்துகளால் இம்பினியூ ஹீமோலிடிக் அனிமியா
பொருத்தமற்ற இரத்த மாற்றுதல்
செல் இரத்த சோகை
போன்றவைகளும் காரணமாக அமைகின்றன.

தவறான கருத்துக்கள்
விட்டமின் ஏ அல்லது பீட்டா கரோட்டீன் உள்ள உணவுகளான காரட், பழச்சாறு பானம், முலாம்பழங்கள் போன்றவற்றை அதிகமாக எடுக்கும் போது கண்கள் மஞ்சள் நிறமாகும் என்பது தவறான கருத்தாகும். இவை உங்கள் சருமத்தை மஞ்சள் நிறமாக்குமே தவிர கண்களை நிறம் மாற்றாது.