Latest Updates
-
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா?
இரத்த வெள்ளையணுக்களை அதிகரிக்க உதவும் டாப் 10 இயற்கை வழிகள்!
ஒருவர் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு ஏற்ற உணவுகளை உட்கொள்வதால், உடலில் நோய்க்கிருமிகளை எதிர்க்கும் திறனும் மேம்படுகிறது. நோயெதிர்ப்பு மண்டலம் மற்றும் இரத்த வெள்ளையணுக்கள் இரண்டும் ஒன்றாக செயல்பட்டு தான் உடலைத் தாக்கும் நோய்க்கிருமிகளை எதிர்க்கிறது. இரத்த வெள்ளையணுக்களானது நமது எலும்பு மஜ்ஜையில் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஒரு மைக்ரோலிட்டர் இரத்தத்தில் 3,500 முதல் 10,000 இரத்த வெள்ளையணுக்கள் இருக்க வேண்டும். ஆனால் 3,500-க்கும் குறைவாக ஒருவருக்கு இரத்த வெள்ளையணுக்கள் இருந்தால், அது நியூட்ரோபீனியா என்று அழைக்கப்படும். ஒருவேளை 1000-க்கும் குறைவாக வெள்ளையணுக்கள் இருந்தால், அது மிகவும் அபாயகரமாக கருதப்படுகிறது. இந்நிலையைக் கொண்டவர்கள் அடிக்கடி ஏதேனும் ஒரு உடல்நல கோளாறால் அவஸ்தைப்படுவார்கள்.

ஒருவரது இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்களின் அளவை இயற்கையாகவே அதிகரிக்க முடியும். அதுவும் குறிப்பிட்ட சில உணவுகளில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் இரத்த வெள்ளையணுக்களை போதுமான அளவில் அதிகரிக்கும். இந்த கட்டுரையில் ஒருவரது இரத்த வெள்ளையணுக்களின் அளவை மேம்படுத்தும் டாப் 10 இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

லாவெண்டர் நறுமண எண்ணெய்
ஒரு சிறிய பௌலில் 20 துளிகள் லாவெண்டர் ஆயில் மற்றும் 60 மிலி தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயிலை ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். பின் அந்த எண்ணெயால் தினமும் தவறாமல் ஒருமுறை மசாஜ் செய்யுங்கள். மசாஜ் செய்தால் எப்படி இரத்த வெள்ளையணுக்கள் அதிகரிக்கும் என்று நீங்கள் கேட்கலாம். லாவெண்டர் எண்ணெய் மன அழுத்தம், பதற்றம் போன்றவற்றை சரிசெய்து, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவும். மன அழுத்தம் நீங்கினாலே, ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

பூண்டு
பூண்டில் உள்ள அல்லிசின், பல்வேறு இரத்த வெள்ளையணுக்களான லிம்போசைட்டுகள், இயோசினோபில்கள் மற்றும் மாக்ரோபேஜ்களின் உற்பத்தியை தூண்டி நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும். ஆகவே தினமும் சாப்பிடும் உணவுகளில் பூண்டு பற்களை பொடியாக நறுக்கி சேர்த்து உட்கொண்டு வாருங்கள். இல்லாவிட்டால், தினமும் ஒரு பல் பூண்டை பச்சையாக சாப்பிட்டு வாருங்கள்.

வைட்டமின் ஏ, சி, ஈ மற்றும் பி9
வைட்டமின்களான ஏ, சி, ஈ மற்றும் பி9 போன்றவை இரத்த வெள்ளையணுக்களின் அளவை மேம்படுத்துவதில் முக்கிய பங்கை வகிக்கின்றன. ஒருவரது உடலில் இந்த வைட்டமின்கள் போதுமான அளவில் இருந்தால், அவர்களது நோயெதிர்ப்பு மண்டலம் சிறப்பாக இருக்கும். ஏனெனில் இந்த வைட்டமின்கள் நோய்க்கிருமிகளை அழிக்கும் செல்களின் உற்பத்திக்கு மிகவும் அவசியமானதாகும். எனவே நீங்கள் அடிக்கடி நோய்வாய்ப்பட்டு வந்தால், வைட்டமின் ஏ, சி, ஈ மற்றும் பி9 நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வாருங்கள்.
இந்த அனைத்து வைட்டமின்களும் கேரட், சீஸ், இறைச்சி, முட்டை, மீன், சர்க்கரை வள்ளிக் கிழங்கு மற்றும் சிட்ரஸ் பழங்களில் ஏராளமாக நிறைந்துள்ளது. இல்லாவிட்டால், மருத்துவரின் பரிந்துரையின் பேரில் இந்த வைட்டமின் சப்ளிமெண்ட்டுக்களை எடுக்கலாம்.

பசலைக்கீரை
நீங்கள் அடிக்கடி ஏதேனும் ஒரு உடல்நல பிரச்சனையால் கஷ்டப்படுகிறீர்களா? அப்படியானால் உங்கள் உடலில் இரத்த வெள்ளையணுக்களின் அளவு குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. இத்தகையவர்கள் பசலைக்கீரையை அடிக்கடி சமைத்து உட்கொண்டு வர, இரத்த வெள்ளையணுக்களின் அளவு அதிகரிக்கும். ஏனெனில் பசலைக்கீரையில் வைட்டமின்களான ஏ, சி, ஈ போன்ற இரத்த வெள்ளையணுக்களை அதிகரிக்கும் உட்பொருட்கள் ஏராளமாக நிறைந்துள்ளது.

பப்பாளி இலை
ஒரு கட்டு பப்பாளி இலையை நீரில் நன்கு கழுவி, மிக்ஸியில் போட்டு தேவையான அளவு நீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை வடிகட்டி, அதன் சாற்றினை ஒரு டேபிள் ஸ்பூன் சாப்பிடவும். வேண்டுமானால் சுவைக்கு அத்துடன் தேனை சேர்த்துக் கொள்ளலாம். இப்படி தினமும் 1-2 முறை செய்து வந்தால், இரத்த வெள்ளையணுக்கள் அதிகரித்து, நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து இருப்பதைக் காணலாம். உண்மையில் சொல்ல வேண்டுமானால், மிகவும் கொடிய டெங்கு காய்ச்சலுக்கு பப்பாளி இலை சிறந்த தீர்வை அளிக்கிறது என்றால், இதன் மகிமை என்னவென்று பாருங்கள்.

தயிர்
இரத்த வெள்ளையணுக்கள் குறைவாக இருப்பவர்கள், தினமும் ஒரு பௌல் தயிரை உட்கொண்டு வர, அதில் உள்ள புரோபயோடிக்குகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும். மேலும் தயிரில் இரத்த வெள்ளையணுக்களை அதிகரிக்க உதவும் பண்புகளும் அடங்கியுள்ளன.

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்
இரத்த வெள்ளையணுக்களின் அளவை அதிகரிக்க வேண்டுமானால், 1000 மிகி ஒமேகா-3 சப்ளிமெண்ட்டுகளை உட்கொள்ளுங்கள். இல்லாவிட்டால், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன்களான கானாங்கெளுத்தி, சால்மன் மற்றும் இதர உணவுகளான வால்நட்ஸ், அவகேடோ போன்றவற்றை உட்கொள்ளலாம்.

ஜிங்க்
ஜிங்க் இரத்த வெள்ளையணுக்களின் சாதாரண இயக்கத்தை தக்க வைக்க உதவி, நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும். ஆகவே 8-11 மிகி ஜிங்க் சப்ளிமெண்ட்டுக்களை உட்கொள்ளலாம். இல்லாவிட்டால் ஜிங்க் நிறைந்த கடல் சிப்பி, மாட்டிறைச்சி, பீன்ஸ் மற்றும் நட்ஸ் போன்றவற்றை சாப்பிடலாம். ஆனால் தினமும் தவறாமல் உட்கொள்வதன் மூலமே, இரத்த வெள்ளையணுக்கள் அதிகரிப்பதைக் காண முடியும்.

ப்ராக்கோலி
காலிப்ளவர் போன்று காணப்படும் ப்ராக்கோலியில் உள்ள சல்போராஃபேன் என்னும் கெமிக்கல் இரத்த வெள்ளையணுக்களின் எண்ணிக்கையை சீராக்க உதவி, நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும். எனவே உங்கள் இரத்த வெள்ளையணுக்களை அதிகரிக்க நினைத்தால், தினமும் ஒரு கப் வேக வைத்த ப்ராக்கோலியை உட்கொள்ளுங்கள். வேண்டுமானால், சுவைக்கு அதன் மேல் சிறிது உப்பைத் தூவிக் கொள்ளலாம்.

கிவி
கிவிப் பழத்தில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வளமான அளவில் பொட்டாசியம், வைட்டமின் ஏ மற்றும் சி போன்றவை நிறைந்துள்ளது. இந்த அனைத்து சத்துக்களுமே இரத்த வெள்ளையணுக்களை அதிகரித்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கை வகிக்கிறது. ஆகவே தினமும் 1-2 கிவிப் பழத்தை தவறாமல் சாப்பிடுங்கள். இதனால் இன்னும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications
