ஒரு நாள் தூங்காமல் இருந்தால் கூட என்னாகும் தெரியுமா?

Posted By: R. SUGANTHI Rajalingam
Subscribe to Boldsky

உங்களுக்கு நாளைக்கு தேர்வு இருக்கிறதா அல்லது நாளைக்கு ஆபிஸில் முக்கியமான மீட்டிங் இருக்குதா இப்படி எதுவாயிருந்தாலும் என்னவோ அன்றைக்கு நமக்கு தூக்கம் வராது. இப்படி தூக்கம் இல்லாமல் இருப்பது கண்டிப்பாக நமது உடலில் பல விளைவுகளை ஏற்படுத்துகிறது. தூக்கயிழப்பின் அறிகுறிகள் உங்கள் உடலில் தென்பட ஆரம்பித்து விடும்.

ஒரு ஆரோக்கியமான உடல் நிலை வேண்டுமென்றால் ஊட்டச்சத்து உணவுகள், உடற்பயிற்சி மற்றும் சரியான அளவு தூக்கம் தேவை. தொடர்ச்சியான தூக்கமின்மை உங்கள் உடலில் டயாபெட்டீஸ், உடல் பருமன் மற்றும் இதய நோய்களை கொண்டு வந்து சேர்ந்திடும்.

This Is What Happens When You Don't Sleep For A Day

சரியான தூக்கமின்மை பிரச்சினையால் நமது உடலில் உள்ள கார்டிசோல் ஹார்மோன் அளவும் அதிகரிக்கிறது. இந்த ஹார்மோன் அதிகரிப்பால் மன அழுத்தமும் அதிகமாகிறது. இதனால் டைப் 2 டயாபெட்டீஸ் போன்ற பிரச்சினைகளையும் ஏற்படுத்தி விடுகிறது.

ஒரு நாள் தூக்கமின்மையால் ஏற்படும் பிரச்சினைகளை பற்றி தான் இக்கட்டுரையில் காண உள்ளோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நோய் வாய்ப்படுதல்

நோய் வாய்ப்படுதல்

சரியான தூக்கமின்மை பிரச்சினையால் உங்கள் உடலின் திறன் குறைந்து நோய்களை எதிர்த்து போராடுவது குறைகிறது. ஏனெனில் நமது தூக்கத்திற்கும் நோயெதிர்ப்பு சக்திக்கும் தொடர்பு உண்டு. உங்கள் நோயெதிர்ப்பு சக்தி குறைந்தால் எண்ணற்ற நோய்ககளும் உங்களை தாக்கும்.

இதயம் பாதிப்படைதல்

இதயம் பாதிப்படைதல்

குறைந்த ஐந்து மணி நேரம் தூக்கம் அல்லது அதிகமான ஒன்பது மணி நேரம் தூக்கம் உடல் பாதிப்புகளை உண்டு பண்ணுகிறது. இவை இதய நோய்கள் மற்றும் குறைந்த தூக்கத்தால் வலிப்பு நோய்கள் போன்றவை ஏற்பட காரணமாக அமைகிறது.

புற்றுநோய் அபாயம் அதிகரித்தல்

புற்றுநோய் அபாயம் அதிகரித்தல்

குறைந்த அளவு தூக்கத்தால் மார்பக புற்று நோய், குடல் புற்று நோய் மற்றும் புரோஸ்டேட் புற்று நோய் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. அதிக நேரம் தூங்காமல் பணி புரிபவர்கள் இது போன்ற புற்று நோயால் தாக்கப்படுகின்றனர்.

சிந்தித்தல் பிரச்சினை

சிந்தித்தல் பிரச்சினை

ஒரு நாள் சரியாக தூங்கவில்லை என்றாலும் சிந்தித்தல் பிரச்சினை உண்டாகிறது. குறைவான தூக்கம் உங்கள் மூளையின் செயல்திறனை பாதித்து சரியாக சிந்தனை செய்ய விடாமல் தடுக்கிறது. எனவே இந்த பிரச்சினையிலிருந்து விடுபட இரவில் சரியான அளவு தூங்க வேண்டும்.

மறத்தல்

மறத்தல்

ஒரு நாள் சரியாக தூங்கவில்லை என்றாலும் அந்த நாள் முழுவதும் அதிகமான மறதி ஏற்படும். இந்த தூக்கமின்மை உங்கள் நினைவாற்றல் திறனை பாதிக்கிறது. தூக்கமின்மை நமது மூளையின் செயல்திறனை குறைத்து விடுகிறது. எனவே போதுமான ஓய்வு எடுத்து மூளையின் நினைவாற்றல் மற்றும் செயல்திறனை அதிகரிக்க வேண்டும்.

உடலுறவு ஹார்மோன் குறைதல்

உடலுறவு ஹார்மோன் குறைதல்

சரியான தூக்கமில்லாமல் இருப்பது உங்கள் உடலுறவுக்கான ஆர்வத்தை குறைத்து விடும். ஒரு ஆண் ஒரு வாரத்திற்கு சரியான தூக்கமில்லாமல் இருந்தால் அவரின் டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் குறைந்து விடுகிறது. குறைந்த ஐந்து மணி நேரம் தூக்கம் கண்டிப்பாக உடலுறவுக்கான ஹார்மோனை 10-15 சதவீதம் குறைத்து விடுகிறது.

 உடல் எடை அதிகரித்தல்

உடல் எடை அதிகரித்தல்

சரியான தூக்கமின்மை நமது உடலில் அதிகமான கலோரிகளை தங்க வைத்து விடுகிறது. ஒரு நாளைக்கு ஐந்து மணி நேரம் தூக்கம் உங்கள் உடல் எடையை அதிகரித்து விடுகிறது. அதே நேரத்தில் ஒரு நாளைக்கு 7-8 மணி நேரம் தூக்கம் அவர்களை நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருக்க உதவுகிறது.

டயாபெட்டீஸ் வருவதற்கான அபாயம்

டயாபெட்டீஸ் வருவதற்கான அபாயம்

சரியான தூக்கமின்மை நமது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரித்து டயாபெட்டீஸ் நோய் ஏற்பட வைத்து விடுகிறது. இவை நமது உடலில் உள்ள இன்சுலின் அளவை அதிகரித்து விடுகிறது. ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் தூக்கம் டயாபெட்டீஸ் வருவதற்கான வாய்ப்பை குறைக்கிறது.

வயதான தோற்றம்

வயதான தோற்றம்

தூக்கமின்மை பிரச்சினை உங்கள் அழகையும் பாதிக்கிறது. சரியான அளவு தூங்காமல் இருப்பது வயதான தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

இந்த பிரச்சினையால் உங்கள் வயதை விட உங்கள் தோற்றம் அதிகரித்து காணப்படும் என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. சரும கோடுகள், சுருக்கங்கள், சமமற்ற சரும நிறம் மற்றும் சரும தொய்வு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.

உறவுகளில் பிரச்சினை

உறவுகளில் பிரச்சினை

போதிய அளவு தூக்கம் இல்லாமல் இருப்பது உங்கள் ஆற்றல் குறைவு , சோர்வு மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனால் உறவுகளுக்கிடையே பல சிக்கல்களை உண்டு பண்ணுகிறது.

இதனால் உங்கள் துணையிடம் மனநிலை மாற்றம், உணர்வுப் பூர்வமான உறவு இல்லாமல் இருப்பது இது போன்ற பிரச்சினையால் இருவருக்கிடையே மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சரியான தூக்கம் மேற்கொண்டு உறவை நிலைப்படுத்தலாம். இதனால் உங்கள் உறவும் மேம்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

This Is What Happens When You Don't Sleep For A Day

This Is What Happens When You Don't Sleep For A Day
Story first published: Sunday, January 7, 2018, 9:00 [IST]