Latest Updates
-
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
இந்த 10 அறிகுறிகள் உடலில் இருந்தால், உங்களின் உடல் அதிக பாதிப்பில் உள்ளது என அர்த்தமாம்...!
மன திருப்திக்காக வேலை செய்யும் செய்கின்ற காலம் எப்போதோ மலை ஏறி போய்விட்டது. மாறாக பணம்...பணம்..! என்ற பணபேயிற்க்காக நாம் உழைத்து தேய்கிறோம். எவ்வளவோ சம்பாதித்தாலும் கடைசியில் போகும் போது எதையும் நாம் கொண்டு செல்ல முடியாது என்பதே நிதர்சனம். இன்று பலர் இந்த நிதர்சனத்தை ஏற்க மறுக்கின்றனர்.

ஆனால், இந்த நிலை தொடர்ந்தால் பல வித பாதிப்புகள் நமது உடலுக்கு வர தொடங்கும். அப்படி வருகின்ற பாதிப்புகள் நம்மை அதிக அழுத்தம் கொண்டவராக மாற்றி விடும். எந்தெந்த அறிகுறிகள் இருந்தால் நீங்கள் அதிக மன அழுத்தத்துடன் இருக்கிறீர்கள் என உணர்த்தும், என்பதை இந்த பதிவில் அறிவோம்.

ஏன் இந்த நிலை..?
நாம் வாழ்கின்ற இந்த ஒரு வாழ்வை மிகவும் மகிழ்வுடன் வாழ வேண்டும். மாறாக, மிகவும் கடினத்துடன் நாட்களை கடத்த கூடாது. குறிப்பாக இன்றைய இளைஞர்கள் இந்த நிலையில் தான் இருக்கின்றனர். எதற்கெடுத்தாலும் மன அழுத்தத்துடனே இருக்கின்றனர். ஒரு கட்டத்தில் மரணம் கூட ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என ஆய்வுகள் சொல்கிறது.

தோல் நோய்கள்
திடீரென்று உடலில் சொறிகளோ, முகப்பருக்களோ, தோல் சார்ந்த நோய்கள் வந்தால் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நீங்கள் அதிக அழுத்தத்துடன் இருக்கின்றீர்கள் என்பதை இந்த அறிகுறிகள் உணர்த்துமாம். உடலில் ஏற்படுகின்ற அழுத்த நிலை தோல் நோயாக வெளிப்படுமாம்.

இரைப்பை கோளாறுகள்
இன்று பலருக்கு இந்த பிரச்சினை உள்ளது என்றே ஆய்வறிக்கைகள் சொல்கிறது. எதை சாப்பிட்டாலும் ஜீரணம் ஆகாதது போன்றும், மலச்சிக்கல் ஏற்படுவதும், வயிற்று வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் உங்கள் உடல் அதிக அழுத்தத்துடன் உள்ளது என்று அர்த்தமாம். இது போன்று இருந்தால், உடனே மருத்துவரை ஆலோசனை செய்யுங்கள்.

தாம்பத்தியத்தில் நாட்டம் இல்லையா..?
இது சற்றே மோசமான பிரச்சினைதான். தனது இணையுடன் உடலிறவு வைத்து கொள்வதில் திடீரென்று விருப்பம் இல்லை என்பவர்களுக்கு இந்த பிரச்சினை உள்ளது. இந்த நிலை நீண்ட நாட்களாக நீடித்தால் மிக மோசமான எதிர் வினைகளை சந்திக்க நேரிடும். நீங்கள் அதிக அழுத்தத்தில் உள்ளீர்கள் என்பதை குறிப்பாக உணர்த்துகிறது.

உடல் எடை
இத்தனை நாள் இல்லாமல் உங்களின் உடல் எடை அதிகரித்துள்ளதா..? இதற்கு காரணம் கார்டிசோல் என்கிற மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஹார்மோன் தான். அத்துடன் இந்த ஹார்மோன் சர்க்கரை அளவையும் சமநிலையில் வைக்க உதவுகிறது. இந்த அளவில் சீர்கேடு ஏற்பட்டால் உடல் எடை கூடும்.

முடி கொட்டுதல்
ஆரோக்கியமாக இருந்த நீங்கள் இப்போது ஆரோக்கிமற்று இருப்பதை எளிதில் உணர்த்தும் ஒரு அறிகுறி தான் முடி கொட்டுதல். நீங்கள் அதிக அழுத்தத்தில் இருந்தால் உங்களின் தலை முடி கொட்ட தொடங்கும். முன்பை விட இப்போது அதிக முடி கொட்டுகிறதென்றால் அதற்கு மன அழுத்தம் தான் காரணம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கவனமின்மை
எந்த ஒரு செயலிலும் உங்களின் கவனத்தை செலுத்த இயலவில்லை என்றால் நிச்சயம் கவனத்தில் இதை எடுத்து கொள்ள வேண்டும். ஒரு வேலையை எடுத்து கொண்டால் நீண்ட நேரமாக செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் கவனமின்மைதான் காரணம். நீங்கள் அதிக அழுத்தத்துடன் இருப்பதை இது குறிக்கிறது.

இதய நோய்கள்
நமது இதயம் தான் நமது உடலில் முழு ஆரோக்கியத்தையும் நிர்ணயிக்கிறது. இதயம் சார்ந்த ஏதாவது பிரச்சினைகள் உங்களுக்கு ஏற்பட்டால் அதற்கு காரணாம் நீங்கள் அழுத்துடன் பல நாட்கள் உள்ளீர்கள் என்பதை உணர்த்துகிறது. மன அழுத்தம் வந்தால் படிப்படியாக பல பிரச்சினைகள் வர தொடங்கும்.

தூக்கமின்மை
ஒரு மனிதனுக்கு 7 மணி நேர தூக்கம் நிச்சயம் அவசியம். ஆனால், நீங்கள் மன அழுத்தத்துடன் இருந்தால் தூக்கம் வராத பிரச்சினை கட்டாயம் இருக்கும். நிம்மதியான தூக்கம் இல்லையென்றால் ஒரு மனிதனால் மகிழ்வுடன் இருக்க இயலாது. மன அழுத்தம் உயர்ந்து கொண்டே போனால் இந்த நிலை உண்டாகும்.

தலைவலி
அதிக அழுத்தம் உங்கள் உடலுக்கும் மனதுக்கும் தந்தால் தலைவலி அடிக்கடி ஏற்பட கூடும். அதிக வேலை பளுவால், அதிக அழுத்தம் ஏற்பட்டாலும் இது போன்று நடக்கும். இதற்காக வெறும் மாத்திரையை மட்டும் எடுத்து கொண்டால் சரி ஆகி விடாது நண்பர்களே.

பெரிய பிரச்சினை
இந்தியாவில் மன அழுத்தம் கொண்டவர்கள் மிக குறைவான வயதுடைய இளைஞர்கள் என்ற அதிர்ச்சி தகவலை ஆய்வறிக்கைகள் வெளியிட்டுள்ளது. குடும்ப சூழல், உளவியல் சார்ந்த கல்வியில் அறியாமை, ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் போன்ற பல காரணிகள் இதற்கு மூல கூறாக உள்ளது.



Click it and Unblock the Notifications
