For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் இந்த விதையை ஒரு கையளவு சாப்பிட்டா, உடல் எடை வேகமா குறைஞ்சிடும்...

இங்கு முலாம் பழ விதைகளை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

|

Recommended Video

உடல் எடையை விரைவில் குறைக்க வேண்டுமா?- வீடியோ

கோடைக்காலத்தில் அதிகம் விற்கப்படும் ஓர் பழம் தான் முலாம் பழம். இதில் தர்பூசணிப் பழத்திற்கு இணையான நீர்ச்சத்து நிரம்பியுள்ளது. வெயில் காலத்தில் முலாம் பழத்தைக் கொண்டு ஜூஸ் தயாரித்து குடித்து வந்தால், கடுமையான வெயிலால் உடல் வறட்சி அடையவதைத் தடுக்கலாம். சொல்லப்போனால் இந்த பழத்தை அப்படியே சாப்பிடுவதை விட ஜூஸ் போட்டு குடித்தால் தான் அற்புதமாகவும் ருசியாகவும் இருக்கும். மேலும் முலாம் பழத்தின் சுவை மட்டுமின்றி, அதன் மணமும் அற்புதமாக இருக்கும்.

பெரும்பாலும் முலாம் பழத்தை வாங்கினால், அதன் விதைகளைத் தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் இனிமேல் முலாம் பழ விதைகளைத் தூக்கி எறியாதீர்கள். ஏனெனில் முலாம் பழத்தைப் போலவே, அதன் விதைகளிலும் ஏராளமான அளவில் சத்துக்கள் நிறைந்துள்ளன.

உங்களுக்கு முலாம் பழத்தின் விதைகளை எப்படி சாப்பிடுவது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் முதலில் முலாம் பழத்தில் இருந்து விதைகளை பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள். பின் அதை நீரில் கழுவிக் கொள்ளுங்கள். பின்பு அதை வெயிலில் போட்டு நன்கு உலர்த்த வேண்டும்.

முலாம் பழ விதைகள் நன்கு வெயிலில் உலர்த்த பின், அதை அப்படியே நீங்கள் சாப்பிடலாம். குறிப்பாக இந்த விதைகள் ஸ்நாக்ஸாக பகல் நேரத்தில் சாப்பிட ஏற்றதாக இருக்கும். உங்களுக்கு முலாம் பழ விதைகளை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரிந்தால், இந்த விதைகளை தினமும் சாப்பிட நீங்கள் தவறமாட்டீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அதிக புரோட்டீன் நிறைந்தது

அதிக புரோட்டீன் நிறைந்தது

முலாம் பழ விதையில் புரோட்டீன்கள் ஏராளமான அளவில் உள்ளது. இதில் 3.6% புரோட்டீன் உள்ளது. அதாவது இதில் சோயா பொருட்களுக்கு இணையான அளவில் புரோட்டீன் நிறைந்துள்ளது. ஆகவே உங்களுக்கு புரோட்டீன் குறைபாடு ஏற்படாமல் இருக்க நினைத்தால், முலாம் பழ விதைகளை அடிக்கடி ஸ்நாக்ஸாக சாப்பிடுங்கள்.

ஏராளமான வைட்டமின்கள் அடங்கியது

ஏராளமான வைட்டமின்கள் அடங்கியது

முலாம் பழத்தில் வைட்டமின்களான வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ போன்றவை அதிக அளவில் நிறைந்துள்ளது. முலாம் பழ விதைகளை ஒருவர் அன்றாடம் உட்கொண்டு வந்தால், கண் பார்வை மேம்படும். ஏனெனில் இந்த வைட்டமின்கள் அனைத்தும் கண்களின் ஆரோக்கியத்திற்கு அவசியமானவைகள் ஆகும். எனவே உங்கள் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த நினைத்தால், முலாம் பழ விதைகளை சாப்பிடுங்கள்.

எலும்புகளை வலிமையாக்கும்

எலும்புகளை வலிமையாக்கும்

முலாம் பழ விதைகள் எலும்புகளின் அடர்த்தியை மேம்படுத்த உதவும். ஒருவரது வயது அதிகரிக்கும் போது எலும்புகளின் அடர்த்தி குறையும். அதனால் தான் வயதான காலத்தில் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. ஆகவே உங்கள் எலும்புகளின் அடர்த்தி குறையாமல் இருக்க வேண்டுமானால், சுவையான முலாம் பழ விதைகளை தினமும் ஒரு கையளவு சாப்பிடுங்கள். முக்கியமாக வளரும் குழந்தைகளுக்கு முலாம் பழ விதைகளைக் கொடுப்பது கிவும் நல்லது. இதனால் அவர்களது எலும்புகள் வலிமையாகும்.

சர்க்கரை நோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்

சர்க்கரை நோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்

இந்தியர்கள் ஏராளமானோர் சர்க்கரை நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். முலாம் பழ விதைகள் இந்த பிரச்சனையைத் தடுக்க உதவியாக இருக்கும். இந்தவிதைகள் சர்க்கரை நோயை எதிர்த்துப் போராடி பாதுகாப்பு அளிப்பதோடு, இன்சுலின் சுரப்பையும் சீராக்கும். ஆகவே முலாம் பழத்தை வாங்கினால், அதன் விதைகளைத் தூக்கி எறியாமல், நீரில் கழுவி உலர வைத்து, தினமும் சாப்பிடுங்கள். இதனால் சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்கலாம்.

இதய ஆரோக்கியம் மேம்படும்

இதய ஆரோக்கியம் மேம்படும்

முலாம் பழ விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது என்பது தெரியுமா? ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களானது, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த அவசியமான சத்தாகும். இந்த கொழுப்பு அமிலம் எப்படி மீனில் அதிகம் உள்ளதோ, அதே அளவில் முலாம் பழ விதைகளிலும் உள்ளது. எனவே உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முலாம் பழ விதைகளை தினமும் ஒரு கையளவு சாப்பிடுங்கள்.

சளியை வெளியேற்ற உதவும்

சளியை வெளியேற்ற உதவும்

முலாம் பழ விதைகள் சளி மற்றும் வைரல் தொற்றுகளில் இருந்து விடுவிக்க உதவும். இந்த விதைகள் உடலில் இருந்து அதிகப்படியாக தேங்கியுள்ள சளியை வெளியேற்ற உதவும். நெஞ்சு சளி இருப்பவர்கள், முலாம் பழ விதைகளை சாப்பிட நல்ல நிவாரணம் கிடைக்கும். மொத்தத்தில் முலாம் பழ விதைகள் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு வலிமை அளித்து, உடலைத் தாக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை எதிர்த்துப் போராட உதவும்.

வயிற்று புழுக்களை அழிக்கும்

வயிற்று புழுக்களை அழிக்கும்

முலாம் பழ விதைகளை உங்கள் குழந்தைகளுக்கு தினமும் சிறிது சாப்பிடக் கொடுங்கள். இதனால் அவர்களது வயிற்றில் உள்ள புழுக்கள் அழிக்கப்படும். மேலும் முலாம் பழ விதைகளை குழந்தைகள் சாப்பிட்டால், அது அவர்கள் அடிக்கடி சந்திக்கும் வயிற்று பிரச்சனைகளுக்கு குட்-பை சொல்ல வைத்து, செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

உடல் எடை குறைய உதவும்

உடல் எடை குறைய உதவும்

முலாம் பழ விதைகளில் நார்ச்சத்து நாம் நினைத்திராத அளவில் அடங்கியுள்ளது. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் முலாம் பழ விதைகளை அன்றாடம் ஒரு கையளவு சாப்பிட்டால், அது அடிக்கடி பசி ஏற்படும் உணர்வைத் தடுத்து, கண்ட உணவுகளின் மீதுள்ள நாட்டத்தைக் குறைத்து, உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கும். எனவே நீங்கள் டயட்டில் இருந்தால், அதில் முலாம் பழ விதைகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இது உங்களது உடல் எடையைக் குறைக்கும் நோக்கத்தை விரைவில் அடைய உதவிப் புரியும்.

குறிப்பு

குறிப்பு

முலாம் பழத்தை வாங்கினால், அதன் விதைகளைத் தூக்கி எறியும் பழக்கம் இருந்தால், இனிமேல் தூக்கிப் போடாதீர்கள். அதன் விதைகளையும் சாப்பிடுங்கள். அதுவும் இந்த விதைகளை உங்களது அன்றாட சாலட்டுடன் சேர்த்து சாப்பிடலாம் அல்லது சாண்விட்ச் மீது தூவி சாப்பிடுங்கள். இவ்வளவு நன்மைகளை வாரி வழங்கும் முலாம் பழ விதைகளை இனிமேல் உங்களுக்கு பிடித்தவாறு சாப்பிடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Must Know Muskmelon Seeds Benefits

Take a look at these mind blowing muskmelon seeds benefits and start eating them to improve your health.
Story first published: Friday, March 16, 2018, 19:52 [IST]
Desktop Bottom Promotion