For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ப்ரோட்டீன் உணவுகள் அதிகம் சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்பது உண்மையா?

ப்ரோட்டீன் உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வது உடல் எடையை குறைக்க உண்மையிலேயே உதவுகிறதா அல்லது அது ஒரு மாயையா என்பதை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

|

உடல் எடையை குறைக்க வேண்டும்... அந்த முயற்சியில் இறங்கியிருக்கிறேன் என்று சொன்னால் போதும் ஆளாளுக்கு வரிசையாக வந்து உங்களுக்கு அறிவுரை சொல்ல ஆரம்பித்துவிடுவர். இதைத் தவிர நாமும் பொழுது போகாமல் இணையத்தில் தேட ஆரம்பிக்க... அவ்வளவு தான் சங்கதி முடிந்தது.

யார் சொல்வதைக் கேட்பது, எதை பின்பற்றுவது என்று தெரியாமல் குழம்பிக் கிடப்போம். அதோடு நமக்கு எதுவாக இருந்தாலும் சீக்கிரமாக நடக்க வேண்டும். இன்ஸ்டண்ட் என்று சொன்னால் அடித்துப் பிடித்து அங்கே சென்றுவிடுவோம். ஒரு வாரம் முயற்சி செய்து பார்த்துவிட்டு குறைந்து விட்டதா? குறைந்து விட்டத என்று அளந்து பார்ப்பதால் எதுவும் நிகழ்ந்திருக்காது.... உடனே சரி, இது நமக்கு செட் ஆகவில்லை அடுத்த டயட் என்று மாறிக் கொண்டேயிருந்தால் ஒரு ஆண்டில் அல்ல எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உடல் எடை குறையவே குறையாது.

உடல் எடை குறைப்பது தொடர்பான தவறான வதந்திகளும் பரவி வருகிறது. அது குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் இந்தக் கட்டுரை.உடல் எடை குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டிருப்பவர்கள் மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துபவர்கள் கூட இதைத் தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ப்ரோட்டீன் :

ப்ரோட்டீன் :

வழக்கமாக சொல்கிற ஜங்க் ஃபுட், சர்க்கரை உணவுகளை தவிர்க்க வேண்டும் ஆகியவற்றை தவிர்த்து இன்னொரு முக்கியமான விஷயம் அடிக்கடி சொல்லப்படுவது என்ன தெரியுமா? ப்ரோட்டீன் உணவுகள்.

ப்ரோட்டீன் நிறைந்த உணவுகளை உங்களுடைய டயட்டில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் உடல் எடை குறையும் என்பது. ப்ரோட்டீன் உணவுகள் செரிமானம் ஆவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். அதனால் அதிக நேரம் உங்களுக்கு பசியெடுக்காது, கலோரியை எரிக்க உதவிடும், தசைகளை குறைக்க உதவிடும், மேலும் நாக்கில் உள்ள சுவை நரம்புகளை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவிடும்.

அதனால் உடல் எடையை குறைக்க விரும்புவோர் அதிகமான ப்ரோட்டீன் உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள்.

இது உண்மை தானா?

இது உண்மை தானா?

உண்மையில் இந்த விஷயங்கள் நடக்கிறது என்றாலும், அவை உங்களுடைய உடல் எடையை குறைப்பதில் எந்த அளவிற்கு பங்கு வகிக்கிறது.... ப்ரோட்டீன் உணவுகள் என்றால் என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்வது,அதனை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாமா?? இப்படியான பல கேள்விகள் உங்கள் மனதில் எழுகின்றனவா? அப்படியென்றால் நீங்கள் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை தொகுப்பு இது.

இந்த எல்லா கேள்விகளுக்கும் அடுத்தடுத்து பதில்கள் வருகிறது.

உடல் எடை :

உடல் எடை :

உடல் எடை என்பது பல்வேறு விஷயங்களை தொடர்பு கொண்டது ஆகும். உங்களுடைய வயது, மரபணு, வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், மருத்துவ காரணிகள், ஸ்ட்ரஸ்,தனிப்பட்ட குணம் ஆகியவற்றை சார்ந்தது இந்த உடல் எடை.

இவற்றில் எதையும் மாற்றாமல் வெறும் ப்ரோட்டீன் உணவுகளை மட்டும் சேர்த்துக் கொள்வேன். உடனே உடல் எடை குறைந்து விட வேண்டும் என்று சொன்னால் அது நிச்சயம் நடக்காது.

கொழுப்பும் எடையும் :

கொழுப்பும் எடையும் :

முதல் ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். கொழுப்பும் உடல் எடையும் வேறு வேறு. நீங்கள் உடலில் இருக்கிற கொழுப்பினை கரைக்க வேண்டுமா? அல்லது உடல் எடையை குறைக்க வேண்டுமா என்பதை முதலில் முடிவு செய்திடுங்கள். கொழுப்பினைத் குறைத்தால் உடல் எடை தானாக குறைந்திடும்.

நீங்கள் குறைக்க வேண்டியது கொழுப்பினைத் தான்.

ஒரு நாளைக்கு :

ஒரு நாளைக்கு :

உங்களுடைய உடல் எடையைப் பொருத்து ஒரு நாளைக்கு 0.5 கிராம் முதல் 1 கிராம் வரையில் ப்ரோட்டீன் எடுத்துக் கொள்ளலாம். தற்போது உங்களுடைய எடை 120 பவுண்ட் என்று வைத்துக் கொள்ளுங்கள், அப்படியென்றால் நீங்கள் 60 முதல் 120 கிராம் வரையிலான ப்ரோட்டீன் எடுத்துக் கொள்ளலாம்.

இது தொடர்ந்து உடல் உழைப்பு செய்கிறவர்களுக்கு, உடல் உழைப்பு அதிகமாக செய்யாதவர்கள் என்றால் 60 முதல் 80 கிராம் ப்ரோட்டீன் வரை எடுத்துக் கொண்டால் போதுமானது.

இரண்டு மாதங்கள் :

இரண்டு மாதங்கள் :

ப்ரோட்டீன் உணவுகள் கொண்ட டயட்டினை கடைபிடிப்பவர்கள் இரண்டு மாதங்கள் அல்லது மூன்று மாதம் வரை மட்டுமே அந்த டயட் இருக்க வேண்டும். தொடர்ந்து அதே டயட் முறையை பின்பற்றினால் உங்களுக்கு ஆர்த்ரைட்டீஸ் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

சுறுசுசுறுப்பு :

சுறுசுசுறுப்பு :

என்ன தான் டயட் முறையை நீங்கள் பின்பற்றினாலும் உடல் உழைப்பு என்பது மிகவும் அவசியமான ஒன்று, டயட் மட்டும் இருந்துவிட்டு உடல் உழைப்பு சுத்தமாக இல்லை என்று சொன்னால் அது எந்த வித பலனையும் கொடுக்காது.

ப்ரோட்டீன் டயட் இருப்பவர்கள் இதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ப்ரோட்டீன் எடுத்துக் கொண்டு அதனை எரிக்க நீங்கள் கட்டாயமாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். இல்லையென்றால் ப்ரோட்டீன் குளுக்கோஸாக மாறிடும். அந்த குளுக்கோஸ் நாளடைவில் கொழுப்பாக சேரும். உடல் எடை குறைக்க வேண்டும் என்ற நிலைமை மாறி உடல் எடை அதிகரிக்க துவங்கிடும்.

பசி :

பசி :

ப்ரோட்டீன் உணவுகள் எடுத்துக் கொள்ளுவதால் cholecystokinin என்ற ஹார்மோன் தூண்டப்பெறும். இது ப்ரோட்டீனையும் கொழுப்பையும் ஜீரணிக்க உதவிடுகிறது. அது மட்டுமின்றி இந்த ஹார்மோன் அதிகம் சுரந்தால் அடிக்கடி பசியுணர்வு ஏற்பட்டு கண்ட உணவுகளையும் சாப்பிடுவதை தவிர்க்கலாம்.

தொடர்ந்து அதிக கலோரிகள் எடுப்பது குறைவது, அதே நேரத்தில் உடலில் இருக்கிற கொழுப்பும் கரைவதினால் உடல் எடை கணிசமாக குறையும்.

மெட்டபாலிசம் :

மெட்டபாலிசம் :

நீங்கள் உடல் எடையை குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டிருக்கும் போது, உடலிலிருந்து கொழுப்பு மட்டுமல்ல தசைகளும் குறையத் துவங்கும், இதனால் உடலின் மெட்டபாலிசம் குறைந்திடும்.

தசைகள் ப்ரோட்டீனால் ஆனது, ப்ரோட்டீன் அதிகமிருக்கும் உணவுகளை எடுத்துக் கொள்வதினால் தசைகளுக்கு வலுவூட்டுவதுடன் உடல் எடையை குறைக்கவும் உதவிடுகிறது.

கலோரி :

கலோரி :

நீங்கள் ஒரு உணவினை எடுத்துக் கொள்கிறீர்கள் என்றால் அந்த உணவு ஜீரணிக்க வேண்டும், அதிலிருந்து சத்துக்கள் உடலுக்கு சென்று சேர வேண்டும், மிக முக்கியமாக அந்த உணவிலிருந்து நமக்கு எனர்ஜி கிடைக்க வேண்டும். அந்த எனர்ஜியினால் தான் நாம் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறோம். இதனைத் தான் உணவின் தெர்மிக் எஃபக்ட் என்பார்கள்.

ப்ரோட்டீனில் அதிக தெர்மிக் எஃபக்ட் இருக்கிறது. கொழுப்பு உணவுகள்,கார்போஹைட்ரேட் உணவுகள் ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் ப்ரோட்டீனில் அதிகப்படியான தெர்மிக் எஃபக்ட் இருக்கிறது.

டயட் :

டயட் :

உதாரணத்திற்கு நீங்கள் தற்போது பத்து கலோரி அளவுள்ள ப்ரோட்டீன் எடுத்துக் கொள்கிறீர்கள் என்றால் மூன்று கலோரி செரிமானத்திற்கு, உடலின் மெட்டபாலிசத்திற்கு சென்றுவிடும். மீதமிருக்கும் ஏழு கலோரி வரை எனர்ஜியாக பயன்படுத்தப்படும். அதோடு இந்த தெர்மிக் எஃபக்ட் அதிகமிருக்கும் உணவுகளை எடுத்துக் கொள்வது உடலில் பிற உணவுகளிலிருந்து சேர்கிற அதிகப்படியான கலோரியை குறைக்க உதவிடுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is Protein Diet Really Helps To Loose Weight?

Is Protein Diet Really Helps To Loose Weight?
Story first published: Saturday, May 12, 2018, 10:34 [IST]
Desktop Bottom Promotion