தினமும் ஒரு டம்ளர் மஞ்சப் பூசணி ஜூஸைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

பொதுவாக பூசணிக்காயை நாம் பொரியல் அல்லது சாம்பார் செய்து தான் உட்கொள்வோம். அதிலும் மஞ்சள் பூசணியை நம்மில் பலரும் அமாவாசை நாட்களில் தவறாமல் பொரியல் செய்து நம் முன்னோர்களுக்கு படைத்து சாப்பிடுவது வழக்கம். அத்தகைய மஞ்சள் பூசணியை ஜூஸ் வடிவில் எடுக்கலாம் என்பது தெரியுமா? மஞ்சள் பூசணியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. தற்போது தெருவோரங்களில் இந்த மஞ்சள் பூசணி ஜூஸ் விற்கப்பட்டு வருகிறது.

இதைப் பார்க்கும் போது, பலருக்கும் மஞ்சள் பூசணி ஜூஸ் குடிப்பதால் அப்படி என்ன நன்மை கிடைக்கும் என்ற கேள்வி மனதிற்குள் எழும். உங்களது இந்த கேள்விக்கான விடை இக்கட்டுரையில் கிடைக்கும். ஏனெனில் கீழே ஒருவர் மஞ்சள் பூசணி ஜூஸைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ன. மஞ்சள் பூசணி ஜூஸ் எனர்ஜி பானங்களுக்கு ஓர் சிறந்த மாற்றாக இருக்கும்.

மஞ்சள் பூசணியில் வைட்டமின்களான பி1, பி2, பி6, சி, டி, ஈ மற்றும் பீட்டாக கரோட்டீன் போன்றவைகளுடன், கனிமச்சத்துக்களான பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், காப்பர், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், சுக்ரோஸ் போன்றவைகளும் ஏராளமான அளவில் உள்ளது. அதோடு இதில் கார்போஹைட்ரேட்டுகளும், குறிப்பிட்ட புரோட்டீன்களும் உள்ளது. சரி, இப்போது மஞ்சள் பூசணி ஜூஸைக் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கல்லீரல் மற்றும் சிறுநீரகம்

கல்லீரல் மற்றும் சிறுநீரகம்

மஞ்சள் பூசணி கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களுக்கு மிகவும் நல்லது. சிறுநீரக கற்கள் மற்றும் பித்தப்பை பிரச்சனைகள் உள்ளவர்கள், 1/2 டம்ளர் பூசணிக்காய் ஜூஸை தினமும் மூன்று வேளை என 10 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், இப்பிரச்சனைகளில் இருந்து முற்றிலும் விடுபடலாம்.

ஆர்டிரியோஸ்கிளிரோஸிஸ்

ஆர்டிரியோஸ்கிளிரோஸிஸ்

இந்த ஆரஞ்சு நிற ஜூஸ், தமனிக் குழாய்களில் ஏற்கனவே தேங்கி, இதய நோய் மற்றும் பக்கவாதத்திற்கு வழிவகுக்கும் கழிவுப் பொருட்களை நீக்க உதவும். மஞ்சள் பூசணியில் உள்ள அதிகளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், தமனி தடிப்பால் ஏற்படும் ஆர்டிரியோஸ்கிளிரோஸிஸ் பிரச்சனையைத் தடுக்க உதவும்.

செரிமான பிரச்சனை

செரிமான பிரச்சனை

செரிமான பிரச்சனைகளால் அடிக்கடி அவஸ்தைப்படுகிறீர்களா? இந்த பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண நினைக்கிறீர்களா? அப்படியானால் தினமும் சிறிது மஞ்சள் பூசணி ஜூஸைக் குடித்து வாருங்கள். இதனால் செரிமானம் சிறப்பாக நடைபெறுவதோடு, செரிமான மண்டலத்தின் ஆரோக்கியமும் மேம்படும்.

மலச்சிக்கல்

மலச்சிக்கல்

உங்களுக்கு அடிக்கடி மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுகிறதா? என்ன செய்தாலும் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட முடியவில்லையா? அப்ப மஞ்சள் பூசணி ஜூஸை தினமும் குடியுங்கள். ஏனெனில் மஞ்சள் பூசணியில் உள்ள மலமிளக்கும் பண்புகள் மலச்சிக்கலைத் தடுப்பதோடு, வயிற்றுப் போக்கு பிரச்சனையில் இருந்தும் விடுவிக்கும்.

சிறுநீரக அமைப்பின் செயல்பாடு

சிறுநீரக அமைப்பின் செயல்பாடு

ஒருவரது உடலில் சிறுநீரகங்கள் சரியாக நடைபெற்றால் தான், உடலில் இருந்து கழிவுகள் முறையாக வெளியேற்றப்படும். இல்லாவிட்டால் கழிவுகள் உடலில் தேங்கி, அதுவே பல பிரச்சனைகளை உண்டாக்கும். எனவே உங்கள் சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்பட வேண்டுமானால், தினமும் ஒரு டம்ளர் மஞ்சள் பூசணி ஜூஸைக் குடியுங்கள்.

தூக்கமின்மை

தூக்கமின்மை

மஞ்சள் பூசணியில் மயக்கமூட்டும் பண்புகள் உள்ளது. எனவே இந்த ஜூஸைக் குடித்தால், தினமும் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம். அதிலும் தூக்கமின்மை பிரச்சனையால் கஷ்டப்படுபவர்கள், தினமும் மஞ்சள் பூசணி ஜூஸில் தேன் கலந்து குடித்து வாருங்கள். இதனால் உடனடி பலனைக் காணலாம்.

உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால்

உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால்

உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் மற்றும் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளதா? இதற்காக அன்றாடம் மாத்திரைகளை தவறாமல் எடுக்க வேண்டியுள்ளதா? உங்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், கொலஸ்ட்ராலைக் குறைக்கவும், மஞ்சள் பூசணி உதவும். இதற்கு அதில் உள்ள பெக்டின் என்னும் பொருள் தான் காரணம். எனவே மஞ்சள் பூசணி ஜூஸைக் குடித்து, உங்கள் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

உடல் சூடு

உடல் சூடு

மஞ்சள் பூசணியில் குளிர்ச்சிப் பண்புகள் அதிகம் உள்ளது. நீங்கள் வெயிலில் அதிகம் சுற்றுபவராக இருந்தால், உடல் சூடு அதிகரிக்காமல், உடலின் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்ள, தினமும் ஒரு டம்ளர் மஞ்சள் பூசணி ஜூஸைக் குடியுங்கள். உடல் சூடு அதிகரித்தாலும் மலச்சிக்கல் பிரச்சனை வரக்கூடும். எனவே உடலை அதிக சூடு அடையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஹைபடைடிஸ் ஏ

ஹைபடைடிஸ் ஏ

ஹைபடைடிஸ் ஏ பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள், அன்றாட டயட்டில் மஞ்சள் பூசணி ஜூஸை சேர்த்துக் கொள்வது நல்லது. இதில் உள்ள உட்பொருட்கள், பாதிக்கப்பட்ட கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்த உதவி, ஹைபடைடிஸ் ஏ பிரச்சனையில் இருந்து விரைவில் விடுவிக்கும்.

நோயெதிர்ப்பு சக்தி

நோயெதிர்ப்பு சக்தி

மஞ்சள் பூசணியில் வைட்டமின் சி மற்றும் இதர கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இவை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, உடலைத் தாக்கும் பல்வேறு நோய்களின் தாக்கத்தில் இருந்து, உடலைப் பாதுகாக்கும். ஆகவே உங்கள் நோயெதிர்ப்பு மண்டலததை வலிமைப்படுத்த நினைத்தால், மஞ்சள் பூசணி ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடியுங்கள்.

சரும ஆரோக்கியம்

சரும ஆரோக்கியம்

மஞ்சள் பூசணி ஜூஸைக் குடிப்பதால், உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு, சரும பிரச்சனைகள் நீங்கி, சரும ஆரோக்கியமும் மேம்படும். இதற்கு மஞ்சள் பூசணியில் உள்ள வைட்டமின் சி, ஈ மற்றும் பீட்டா கரோட்டீன் தான் முக்கிய காரணம். இவை அனைத்துமே ஆரோக்கியமான மற்றும் அழகான சருமத்திற்கு அவசியமானவை. எனவே அழகாக இருக்க நினைத்தால், மஞ்சள் பூசணி ஜூஸைக் குடியுங்கள்.

சரும சுருக்கம் நீங்கும்

சரும சுருக்கம் நீங்கும்

சருமத்தில் முதுமைத் தோற்றத்தைத் தரும் சுருக்கங்கள் காணப்படுகிறதா? இதற்காக ஆன்டி-ஏஜிங் க்ரீம்களைப் பயன்படுத்தி வருகிறீர்களா? ஆனால் எவ்வித பலனும் கிடைத்த பாடில்லையா? அப்படியானால் மஞ்சள் பூசணியை அரைத்து, அத்துடன் சிறிது தேன், தயிர், எலுமிச்சை சாறு மற்றும் வைட்டமின் ஈ ஆயில் சேர்த்து கலந்து, வாரத்திற்கு 2-3 முறை சருமத்திற்கு மாஸ்க் போடுங்கள்.

மஞ்சள் பூசணி ஜூஸ் தயாரிக்கும் முறை:

மஞ்சள் பூசணி ஜூஸ் தயாரிக்கும் முறை:

* மஞ்சள் பூசணியின் மேல் தோலை நீக்கிவிட்டு, விதைகளை அகற்றி, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

* பின் அதை மிக்ஸியில் போட்டு, அத்துடன் சுவைக்காக தேன் சேர்த்து நன்கு அரைத்தால், ஜூஸ் தயார்.

* ஜூஸை இன்னும் சுவையாக்க நினைத்தால், அத்துடன் சிறிது ஜாதிக்காய் பொடி அல்லது பட்டைத் தூள் அல்லது இஞ்சி தூள் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடிக்கலாம். ஆனால் இந்த பொருட்களை சேர்ப்பதாக இருந்தால், அளவாகத் தான் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Incredible Health Benefits Of Drinking Pumpkin Juice

The benefits of pumpkin juice are numerous. Here are the benefits of pumpkin juice for you health. Read on to know more...
Story first published: Thursday, February 15, 2018, 11:45 [IST]
Subscribe Newsletter