அதிகாலையில் வெறும் வயிற்றில் 3 துளசி இலைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

நம் உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக் கொள்வதற்கு இயற்கை நமக்கு பல மூலிகைகளைக் கொடுத்துள்ளது. ஒவ்வொரு மூலிகைகளும் பல்வேறு உடல்நல பிரச்சனைகளைப் போக்க வல்லது. அதில் அனைவரும் தங்களது வீட்டில் வளர்த்துக் கொண்டிருக்கும் ஓர் மூலிகை தான் துளசி. இந்த துளசி இலைகளில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. இதன் மருத்துவ குணத்தால், உடலில் இருக்கும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்.

Health Benefits of Eating Tulsi Leaves On An Empty Stomach

முக்கியமாக துளசி இலைகள் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, உடலைத் தாக்கும் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடும். மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள், ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுவதோடு, செல்கள் பாதிப்படைவதையும் தடுக்கும். இவ்வளவு சத்துக்களைக் கொண்ட துளசியை ஒருவர் தினமும் சாப்பிட்டு வந்தாலே, நோய்த் தாக்குதல்களின்றி ஆரோக்கியமாக வாழலாம்.

அதிலும் துளசி இலைகளை ஒருவர் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், நாம் நினைத்துப் பார்த்திரா அளவில் நன்மைகளைப் பெற முடியும். சரி, இப்போது துளசி இலைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து விரிவாக காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சர்க்கரை நோய்

சர்க்கரை நோய்

துளசி இலைகளில் உள்ள உட்பொருட்கள் கணைய பீட்டா செல்களின் செயல்பாட்டிற்கு உறுதுணையாக இருக்கும். பொதுவாக கணைய பீட்டா செல்கள் தான் இன்சுலினை வெளியிடும். இப்படி இன்சுலின் சரியான அளவில் வெளியிடும் போது, இரத்த சர்க்கரை அளவு குறைந்து, சர்க்கரை நோய் கட்டுப்படுத்தப்படும். எனவே சர்க்கரை நோயாளிகள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சிறிது துளசி இலைகளை சாப்பிடுவது மிகவும் நல்லது.

இதய ஆரோக்கியம்

இதய ஆரோக்கியம்

துளசி இலைகளில் உள்ள யூஜெனோல் இதயத்திற்கு பாதுகாப்பளிக்கும். முக்கியமாக இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதோடு, கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கும். அதிலும் துளசி இலைகளை ஒருவர் வெறும் வயிற்றில் காலையில் எழுந்ததும் தொடர்ந்து சாப்பிட்டால், இதய பிரச்சனைகள் தடுக்கப்பட்டு, இதய நோய் தாக்குதல்களின் அபாயமும் குறையும்.

மன அழுத்தம்

மன அழுத்தம்

லக்னோவில் உள்ள ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், துளசியில் உள்ள பண்புகள் மன அழுத்த ஹார்மோனான கார்டிசோல் அளவைக் கட்டுப்படுத்தி, சரியான அளவில் பராமரிக்க உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு காரம் துளசியில் உள்ள அடாப்டோஜென் என்னும் மன அழுத்தத்தை எதிர்க்கும் சக்தி வாய்ந்த பண்புகள் தான் காரணம். இவை நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, உடலில் இரத்த ஓட்டத்தை சீராகவும் வைத்துக் கொள்ளும். எனவே மன அழுத்தத்தில் இருந்து விடுபட நினைத்தால், தினமும் சிறிது துளசி இலைகளை சாப்பிடுங்கள்.

புற்றுநோய்

புற்றுநோய்

துளசி இலைகளில் உள்ள அதிகளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி-கார்சினோஜெனிக் பண்புகள், மார்பக புற்றுநோய் மற்றும் வாய் புற்றுநோயின் அபாயத்தைத் தடுக்க உதவும். எனவே புற்றுநோயின் தாக்கத்தைத் தடுக்க நினைத்தால், தினமும் வெறும் வயிற்றில் துளசி இலைகளை சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

சிறுநீரக கற்கள்

சிறுநீரக கற்கள்

தினமும் காலையில் துளசி சாற்றில் தேன் கலந்து குடித்து வந்தால், சிறுநீரக கற்கள் சிறுநீரக பாதைகளின் வழியே எளிதில் நகர்ந்து சென்று வெளியேறிவிடும். ஒருவர் தொடர்ந்து 6 மாத காலம் துளசி பானத்தைக் குடித்து வந்தால், சிறுநீரகங்களில் கால்சியம் ஆக்ஸலேட் உருவாக்கத்தை தடுக்கலாம். சிறுநீரக கற்களானது யூரிக் அமிலம் மற்றும் கால்சியம் ஆக்ஸலேட்டுகளால் உருவாகுபவை. மேலும் துளசி இலைகளை தினமும் சாப்பிட்டால், சிறுநீரக கற்களால் ஏற்படும் கடுமையான வலியும் குறையும்.

வயிற்று பிரச்சனைகள்

வயிற்று பிரச்சனைகள்

வயிற்றுப் பிரச்சனைகளான அசிடிட்டி, வயிற்று உப்புசம், வாய்வுத் தொல்லை, மலச்சிக்கல் போன்றவற்றிற்கு துளசி தீர்வு அளிக்கும். அதற்கு அதிகாலையில் வெறும் வயிற்றில் சிறிது துளசி இலைகளை சாப்பிட வேண்டும். ஒருவேளை வயிற்று பிரச்சனைகள் தீவிரமாக இருந்தால், துளசி சாற்றில் இஞ்சி சாற்றினை சேர்த்து, அத்துடன் சிறிது தேன் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து, தொடர்ந்து 2 வாரம் குடித்து வர வயிற்று பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும்.

வாய் துர்நாற்றம்

வாய் துர்நாற்றம்

தூங்கி எழும் போது உங்கள் வாய் கடுமையான துர்நாற்றத்தை உண்டாக்குகிறதா? அப்படியானால் துளசி இலைகளை அரைத்து, கடுகு எண்ணெய் சேர்த்து கலந்து, ஈறு பகுதிகளில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் வாயை குளிர்ந்த நீரால் கொப்பளிக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு காலை மற்றும் இரவு நேரத்தில் செய்து வந்தால், வாய் துர்நாற்றத்தைத் தடுக்கலாம்.

தலைவலி

தலைவலி

சைனஸ் பிரச்சனை, அலர்ஜி, ஒற்றைத் தலைவலி மற்றும் சளி போன்றவை இருந்தால், துளசி இலைகள் உடனடி நிவாரணம் அளிக்கும். அதிலும் கடுமையான தலைவலியைக் கொண்டவர்கள், கொதிக்கும் நீரில் சிறிது துளசி இலைகளைப் போட்டு நன்கு கொதித்ததும் இறக்கி, வெதுவெதுப்பான நிலையில் ஒரு துணியை அந்நீரில் நனைத்து பிழிந்து, நெற்றியில் துணியை வைக்க வேண்டும். இப்படி செய்வதல் தலைவலியில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.

கண் புண்

கண் புண்

கண்களில் வரும் புண் கடுமையான வலியை உண்டாக்கும். இந்த கண் புண்ணை துளசி இலைகள் கொண்டு சரிசெய்ய முடியும். அதுவும் கருப்பு துளசி இலைகளின் சாற்றினை கண்களில் விட்டால், கண்களில் உள்ள புண் விரைவில் குணமாகிவிடும்.

காய்ச்சல்

காய்ச்சல்

துளசி இலைகள் காய்ச்சலுக்கு நல்ல தீர்வளிக்கும். எனவே காய்ச்சலால் கஷ்டப்படுபவர்கள், தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் துளசி இலைகளை சாப்பிடுங்கள். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை துளசி இலைகளை சாப்பிட்டு வந்தால், காய்ச்சல் விரைவில் குணமாகும்.

சளி

சளி

சளித் தொல்லை தாங்க முடியலையா? அப்படியானல் அதற்கு துளசியைக் கொண்டு எளிதில் தீர்வு காணலாம். அதுவும் துளசி இலைகளை அரைத்து சாறு எடுத்து. அதில் சிறிது கற்பூரத்தைப் போட்டு கலந்து, நெஞ்சுப் பகுதியில் தடவ வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், நெஞ்சில் உள்ள சளி கரைவதோடு, சுவாசிப்பதில் உள்ள இடையூறில் இருந்து விடுதலை கிடைக்கும்,

சரும பிரச்சனைகள்

சரும பிரச்சனைகள்

சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம். இல்லாவிட்டால் பல்வேறு சரும பிரச்சனைகளால் அவஸ்தைப்படக்கூடும். சிலருக்கு சருத பிரச்சனைகளான லியூகோடெர்மா என்னும் வெண் நோய் இருக்கும். துளசி இலைகளை அரைத்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவுவதன் மூலம், சரும பிரச்சனைகள் அகலும்.

தொண்டைப் புண்

தொண்டைப் புண்

தொண்டைப் புண்ணாக உள்ளதா? அப்படியானால் நீரில் சிறிது துளசி இலைகளைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும். பின் வெதுவெதுப்பான நிலையில் அந்த நீரைக் கொண்டு வாயைக் கொப்பளிப்பதோடு, குடிக்கவும் வேண்டும். இதனால் தொண்டைப் புண் விரைவில் குணமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health Benefits of Eating Tulsi Leaves On An Empty Stomach

Here are some health benefits of eating tulsi leaves on an empty stomach. Read on to know more....
Story first published: Saturday, January 27, 2018, 11:32 [IST]
Subscribe Newsletter