தினம் ஒரு கிவி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

சிட்ரஸ் வகை பழங்களுள் கிவி பழம் மிகவும் சுவையானதாக இல்லாவிட்டாலும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது. கிவிப் பழம் இனிப்பு மற்றும் புளிப்புச் சுவை கலந்தது. இதனால் தான் இது பல்வேறு கேக்குகளில் டாப்பிங்காக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பலருக்கு இந்த கிவி பழத்தை கடைகளில் பார்த்தும் வாங்காமல் இருப்பர். இதற்கு அந்த பழத்தின் மகிமை தெரியாதது தான்.

கிவி பழம் பார்ப்பதற்கு சாப்பிட தோன்றாது. அதேப் போல் இது அனைவருக்குமே பிடிக்கும் பழமாகவும் இருக்காது. ஆனால் இந்த பழத்தை சாப்பிட்டால் நாம் நினைத்திராத அளவில் நன்மைகளைப் பெறலாம். உங்களுக்கு கிவி பழத்தை சாப்பிட்டால் என்ன நன்மை கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கனிமச்சத்துக்கள்

கனிமச்சத்துக்கள்

கிவி பழத்தில் முக்கிய கனிமச்சத்துக்களான போரான், குளோரைடு, காப்பர், குரோமியம், ஃப்ளூரைடு, அயோடின், இரும்புச்சத்து, மக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், செலினியம், சோடியம், ஜிங்க் போன்றவை அடங்கியுள்ளது. இந்த அனைத்து சத்துக்களும் உடலின் மென்மையான செயல்பாட்டிற்கு அவசியமானவைகளாகும்.

கால்சியம்

கால்சியம்

கிவி பழத்தில் எலும்புகளின் வளர்ச்சிக்கும், பற்களின் ஆரோக்கியத்திற்கும் தேவையான கால்சியம் வளமான அளவில் நிறைந்துள்ளது. அதுவும் 69 கிராம் எடை கொண்ட ஒரு கிவி பழத்தில் சுமார் 23.46 மிகி கால்சியம் நிறைந்துள்ளது.

செரடோனின்

செரடோனின்

கிவி பழத்தில் செரடோனின் அதிக அளவில் உள்ளது. இது செரிமானம் மற்றும் இதயத்தின் செயல்பாட்டிற்கு அவசியமானவைகளாகும். கிவி பழத்தை ஒருவர் சாப்பிட்டால், அது இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்திற்கு உதவுவதோடு, புத்துணர்ச்சியுடனும் இருக்கச் செய்யும். இவை அனைத்திற்கும் இதில் உள்ள செரடோனின் தான் காரணம்.

 வைட்டமின்கள்

வைட்டமின்கள்

கிவி பழத்தில் காம்ப்ளக்ஸ் வைட்டமின்களான நீரில் கரையக்கூடிய மற்றும் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் உள்ளன. மேலும் கிவியில் அனைத்து வகையான வைட்டமின்களும் உள்ளன. அதில் வைட்டமின் ஏ, பி, சி, டி, ஈ மற்றும் கே போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஆய்வு ஒன்றில் ஒரு கிவி பழத்தில் ஒரு ஆரஞ்சு பழத்தில் இருக்கும் அளவில் வைட்டமின் சி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கொழுப்பு அமிலங்கள்

கொழுப்பு அமிலங்கள்

கொழுப்பு அமிலங்கள் பல்வேறு செயல்பாடுகளுக்கு அவசியமானவை. கிவி பழத்தில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள், மோனோஅன் சாச்சுரேட்டட் கொழுப்புகள், பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் மற்றும் சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் போன்றவை உள்ளது. இந்த அனைத்து கொழுப்பு அமிலங்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்று செயல்படும்.

அமினோ அமிலங்கள்

அமினோ அமிலங்கள்

அமினோ அமிலங்கள் என்பது புரோட்டீன்களாகும். இவை செல்களின் வடிவத்தைப் பராமரிப்பதற்கு அத்தியாவசியமானவைகளாகும். மேலும் இது உடலின் நீர்ச்சத்து மற்றும் pH அளவை கட்டுப்படுத்தவும் செய்யும். அதோடு உடலின் நரம்பு செல்கள் மூளையுடன் தொடர்பு கொள்ளும் திறனை அமினோ அமிலங்கள் மேம்படுத்தும். இது உடலுக்கு ஆற்றலை வழங்கும். உடலால் போதிய அளவில் அத்தியாவசிய அமினோ அமிலங்களை உற்பத்தி செய்ய முடியாது. எனவே போதிய அளவு அமினோ அமிலங்கள் கிடைக்க அதற்கான உணவுகளை உண்ண வேண்டும்.

புற்றுநோய்

புற்றுநோய்

கிவி பழத்தில் உள்ள வைட்டமின் சி ஒரு நல்ல ஆன்டி-ஆக்ஸிடன்ட். இது ப்ரீ-ராடிக்கல்களால் செல்கள் பாதிக்கப்படுவதைத் தடுத்து, புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும். போதிய அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளை எடுக்கும் போது, குடல் புற்றுநோய், இதய நோய், ஆஸ்டியோஆர்த்ரிடிஸ், பக்கவாதம் போன்றவற்றைத் தடுக்கும். இதில் உள்ள ப்ளேவோனாய்டு சருமத்திற்கு நல்ல பாதுகாப்பை வழங்கும்.

இரத்த சர்க்கரை

இரத்த சர்க்கரை

கிவிப் பழத்தில் டயட்டரி நார்ச்சத்துக்கள் வளமான அளவில் உள்ளது. இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவி, இதய நோயின் அபாயத்தைத் தடுக்கும் மற்றும் இரத்த சர்க்கரை அளவில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தைத் தடுக்கும்.

ஆஸ்துமா

ஆஸ்துமா

கிவி பழம் ஆஸ்துமாவை சரிசெய்யும் திறன் கொண்டது. இதற்கு இதில் உள்ள வைட்டமின் சி தான் காரணம். ஆய்வுகளில் கிவி பழத்தை வாரத்திற்கு 1-2 சாப்பிடுவதன் மூலம், சுவாச நோய்களுக்கு எதிரான பாதுகாப்பு கிடைக்கும் என தெரிய வந்துள்ளது.

கிவி பழத்தை ஒருவர் தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால், மூச்சு இறைப்பு பிரச்சனை வரும் அபாயம் குறையும். இந்த பழம் மூச்சு விடுவதில் ஏற்படும் சிரமம், இரவில் வரும் வறட்டு இருமல் போன்றவற்றை சரிசெய்து, நுரையீரலின் செயல்பாட்டிற்கு உதவும். முக்கியமாக ஆஸ்துமா நோயாளிகளுக்கு கிவி பழம் மிகவும் நல்லது.

கண்களுக்கு நல்லது

கண்களுக்கு நல்லது

கிவி பழத்தில் வைட்டமின் ஏ, சி, ஈ போன்ற, கண்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் உள்ளது. கிவி பழம் மாகுலர் திசு சிதைவைத் தடுத்து, முதுமை காலத்தில் பார்வை இழப்பு ஏற்படும் அபாயத்தைத் தடுக்கும். எனவே கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் இருக்க, கிவி பழத்தை தினமும் ஒன்று சாப்பிட்டு வாருங்கள்.

நல்ல தூக்கம்

நல்ல தூக்கம்

கிவிப் பழத்தில் உள்ள செரடோனின் தூக்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுப்பதோடு, புத்துணர்ச்சியுடன் இருக்க உதவி புரியும். எனவே தூக்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சந்திப்பவர்கள், தினமும் ஒரு கிவி பழத்தை சாப்பிட நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

மலச்சிக்கல்

மலச்சிக்கல்

கிவி பழத்தில் உள்ள டயட்டரி நார்ச்சத்துக்கள், முறையான குடலியக்கத்தைப் பராமரிக்க உதவும். ஒருவர் தினமும் கிவி பழத்தை சாப்பிட்டு வந்தால், மல உற்பத்தி மற்றும் அதை வெளியேற்றுவதில் உள்ள பிரச்சனை நீங்கும். எனவே மலச்சிக்கலால் அதிகம் அவஸ்தைப்படுபவர்கள், தினமும் கிவி பழத்தை சாப்பிட்டு வர, மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைத்து, குடலியக்கமும் சிறப்பாக இருக்கும்.

இரத்த அழுத்தம்

இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்கள் சோடியத்தை குறைத்து, பொட்டாசியம் நிறைந்த உணவை அதிகம் உட்கொள்ள வேண்டும். எனவே உங்களுக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருந்தால், இந்த புளிப்புச் சுவையுடைய பழத்தை தினமும் ருசிப்பது மிகவும் நல்லது.

கர்ப்பிணிகளுக்கு நல்லது

கர்ப்பிணிகளுக்கு நல்லது

கர்ப்ப காலத்தில் பெண்கள் கிவி பழத்தை சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இதில் ஃபோலிக் அமிலம் அதிகம் உள்ளது. போலிக் அமிலம் கருவின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான சத்தாகும். மேலும் இச்சத்து பிறப்பு குறைபாட்டைத் தடுக்கும். இதனால் தான் கர்ப்பிணிகளுக்கு போலிக் அமில மாத்திரைகளை கர்ப்ப காலத்தில் மருத்துவர்கள் கொடுக்கிறார்கள்.

நோயெதிர்ப்பு சக்தி

நோயெதிர்ப்பு சக்தி

கிவி பழத்தை ஒருவர் தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள வைட்டமின் சி நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும் என சில ஆய்வுகள் கூறுகின்றன. ஏனெனில் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் செல்கள் முக்கியமாக டி.என்.ஏ பாதிப்படைவதைத் தடுத்து பாதுகாப்பை வழங்கும்.

இதயத்திற்கு நல்லது

இதயத்திற்கு நல்லது

கிவி பழத்தை ஒருவர் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அது இரத்தத்தில் உள்ள கொழுப்புக்களைக் குறைத்து, இரத்தம் உறையும் வாய்ப்பைக் குறைத்து, மாரடைப்பு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும். சிலர் இரத்தம் உறைவதைத் தடுக்க மருந்து மாத்திரைகளை எடுப்பார்கள். ஆனால் கிவி பழத்தை சாப்பிட்டால், இயற்கையாகவே இரத்தம் உறைவதைத் தடுக்கும்.

இரத்தத்திற்கு நல்லது

இரத்தத்திற்கு நல்லது

கிவி பழம் இரத்தத்தை மெலிதாக்கி, உடல் முழுவதும் சிறப்பாக ஓடச் செய்யும். மேலும் கிவி பழத்தை சாப்பிட்டால், உடலால் இரும்புச்சத்தை உறிஞ்சும் திறன் அதிகரித்து, இரத்த சோகை வரும் அபாயம் தடுக்கப்படும். ஏனெனில் இரும்புச்சத்து தான் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு மிகவும் முக்கியமான சத்தாகும்.

எடை குறைவு

எடை குறைவு

உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு கிவி மிகச்சிறப்பான பழம். ஏனெனில் இதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவு. மேலும் இது மற்ற பழங்களைப் போல் உடலில் இன்சுவின் உற்பத்தியை அதிகரிக்காது. மேலும் இதில் உள்ள அதிகளவிலான டயட்டரி நார்ச்சத்து, உடல் எடையைக் குறைக்க உதவும். முக்கியமாக இப்பழத்தில் கலோரிகள் மிகவும் குறைவு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health Benefits Of Eating Kiwi Fruit

Here is the list of best health benefits of kiwi fruit. Read on to know more...
Subscribe Newsletter