பூமிக்கு மேல் விளையும் தொன்மையான காவளிக்கிழங்கு!

Posted By: Sadhishkumar T
Subscribe to Boldsky

திருமண விருந்துகளில் பரிமாறப்படும் உணவில் உருளைக்கிழங்கு இருந்தால்,

வாயுத்தொல்லை பயத்தால் பலர் அதை ஒதுக்கிவைத்துவிட்டு தான் சாப்பிடுவார்கள்.

சிலர் கடைகளில் காய்கறி வாங்கச் செல்லும்போது, உருளைக்கிழங்கை பார்த்தாலே,

அடச்சீ! என முகத்தை சுழிப்பார்கள். பிடிக்காத ஒன்றைப் பார்த்தால், அதற்கு

அருகிலேயேஎவ்வளவு பிடித்த விஷயம் இருந்தாலும் அதை நம்முடைய மனம் விரும்பாது.

Air potato health benefits

Image Courtesy

உருளைக்கிழங்கின் ருசி எல்லோருடைய நாவையும் என்னை சாப்பிட வா என

சுண்டியிழுக்கும். ஆனாலும் சாப்பிட முடியவில்லை. என்ன காரணம்?, ஏன்

உருளைக்கிழங்கை பலரும் புறக்கணிக்கின்றனர்?

இன்று உலகில் அதிகம் பேரை பாதிக்கும் ஒரு வியாதியாக, கார்டியாக் அரெஸ்ட்,

ஹார்ட் அட்டாக், பராலிக் அட்டாக் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் வாத

வியாதிகள் இருக்கிறது, அதற்கு முதல் காரணம் என்ன தெரியுமா?

வாயுத்தொல்லை. இந்த வாயுத் தொல்லைக்கு முதல் காரணம், உருளைக்கிழங்கு.

உருளைக் கிழங்கை உணவில் சேர்த்துக் கொள்ள, உடலில் வாயு அதிகரித்து, உடல் நலம் கெடுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடலை முடக்கும்:

உடலை முடக்கும்:

உடலில் சேரும் கெட்ட வாயு, வயிற்றை பாதித்து, செரிமானக்கோளாறு, உடல் சோர்வு, சுவாசக் கோளாறுகள் போன்றவைகள் உண்டாகக் காரணமாகிறது. உணவை கட்டுப்பாடு இல்லாமல் அள்ளி விழுங்குவதும், எப்போதும் ஏதேனும் நொறுக்குத் தீனிகள் கொரித்துக் கொண்டிருப்பதும், மலச்சிக்கலும், வயிற்றை பாதிக்கும் முக்கிய காரணங்கள். உணவில் உருளைக்கிழங்கை அதிகம் விரும்பி சாப்பிடுவதும், உருளை சிப்சை அடிக்கடி கொரிப்பதும், உடலில் வாயுவின் அளவை அதிகரித்து விடுகிறது.

தனிமைப்படுத்தும்:

தனிமைப்படுத்தும்:

அதிகரித்த இந்த வாயுத்தொல்லையால், சிலர் பேசும்போது அவர்கள் வாயில் இருந்து கடுமையான நாற்றம் வீசும். சிலருக்கு வாயு பிரியும்போது, ஏற்படும் துர்நாற்றத்தால், அருகில் இருப்பவர்கள் எழுந்து, வெகு தூரம் ஓடவேண்டிய நிலையும்முகம் சுழிக்கும் நிலையும் உண்டாகும்.

வாயுத்தொல்லையை எப்படி போக்குவது?

வாயுத்தொல்லையை எப்படி போக்குவது?

வாயுத்தொல்லையை போக்காவிட்டால், அதுவே வாத வியாதிகளுக்குக் காரணமாக அமைந்து, பக்க வாதம் உள்ளிட்ட கடும் உடல்நல பாதிப்புகளையும், சமயங்களில் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி விடும்.

வாயுத்தொல்லையைப் போக்க, உருளை, வாழை உள்ளிட்ட காய்களை கண்டிப்பாக உணவில் இருந்து நீக்க வேண்டும். வயிற்றுக் கழிவுகளை நீக்கும் இயற்கை சிகிச்சை மூலம், வயிற்றை சுத்தம் செய்து, அதன்பின் கீரைகள், நார்ச்சத்து மிக்க பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். இதன் மூலம், வயிற்றின் பாதிப்புகளை நீக்கி, உடல் நலத்தைப் பேண முடியும்.

உருளைக்கு மாற்று!

உருளைக்கு மாற்று!

அதேபோல உருளைக்கு மாற்றாக, காவளிக்கிழங்கை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். பூமிக்கு அடியில் விளையும் உருளையைப் போன்ற சுவை கொண்ட இந்த கிழங்கு, பூமிக்கு மேலே, அதன் கொடிகளில் காய்க்கிறது, உருளையில் என்ன செய்வோமோ அதையெல்லாம் இந்தக் கிழங்கிலும் செய்யலாம், வாயுத்தொல்லை வருமோ என்ற அச்சம் ஏதுமின்றி, இந்தக் கிழங்கில் செய்யப்பட்ட கறி வகைகளை, நன்றாக சுவைக்கலாம்.மக்களின் அன்றாட உணவில் இருந்த, உருளையைப் போன்ற சுவைமிக்க உடலுக்கு நன்மைகள் செய்யும் காவளிக்கிழங்குகள் போன்ற தொன்மையான காய்கறிகள், இங்கிலீஷ் காய்கறிகளின் வரவால், மக்கள் பயன்பாட்டில் இருந்து மறைந்து போய்விட்டது.

காவளி இருக்க உருளைக்கிழங்கா?

காவளி இருக்க உருளைக்கிழங்கா?

பூமிக்கு கீழே விளையும் கிழங்குகள், பெரும்பாலானவை, உடலுக்கு வாயுத் தொல்லை

தர வல்லவை, இயற்கையின் அதிசயமாக சிலவகைக் கிழங்குகள் பூமிக்கு மேலே

காய்க்கும், அப்படி ஒரு அதிசயக் கிழங்குதான், காவளி.

காவளிக் கிழங்கு, சமவெளிகளில், குறுகிய காலத்தில் அதிக அளவில் விளையும் ஒரு

அற்புத பணப்பயிரும் கூட. விதைகள் தேவையின்றி, கிழங்கையே பூமியில் புதைத்து,

பயிரிடலாம். வயல்வெளிகளில், தோட்டங்களில் பயிரிட ஏற்ற காவளிக் கிழங்கு,

கொடி போல படர்ந்து வளரும் இயல்புடையது. கொடிகளில் பூக்கள் காணப்படாமல்,

காய்களைக் காய்க்கும் தன்மையுடைய காவளிக் கொடியை, பூவரசு, அத்தி, நுணா

போன்ற மரங்களின் மேல் படர விடலாம். மரங்களின் இலைகளில் உண்டாகும் நிழலிலேயே

இந்த கிழங்கு வேகமாக வளருமு் தன்மை கொண்டது.

சுவையில் அசத்தும் காவளிக்கிழங்கு!

சுவையில் அசத்தும் காவளிக்கிழங்கு!

உடலுக்கு வாயு, கொழுப்பு மற்றும் சர்க்கரை பாதிப்புகளை ஏற்படுத்தாத,

தொன்மையான நமது பாரம்பரிய காய்கறிகளில் ஒன்றான காவளிக்கிழங்கில்,

பெருங்காவளி என்று ஒருவகையும் உண்டு, இதன் கிழங்கு, பூமிக்கு அடியில் ஐந்து

கிலோவுக்கும் மேற்பட்ட எடையில் விளையும், பூமிக்குக் கீழே விளைந்தாலும்,

இதுவும், காவளிக்கிழங்கைப் போல, உடலுக்கு எந்த பாதிப்பையும் தராது. இது

நீண்ட நாள் கெடாமல் இருப்பதால், இந்தப் பெரிய கிழங்கை சிலர், பல மாதங்கள்

வரை வைத்து பயன்படுத்தி வருவார்கள். சிலர் இந்த காவளிக்கிழங்கின் இலைகளை,

பொரியல் போல சமைத்து சாப்பிடுவார்கள்.

காவளிக்கிழங்கின் நன்மைகள்!

காவளிக்கிழங்கின் நன்மைகள்!

உடலுக்கு நன்மைகள் தரும் தாதுக்களான, பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம்,

சோடியம், அயன், ஜிங்க், வைட்டமின்கள் மற்றும் புரதச்சத்துக்கள் நிறைந்த,

காவளிக்கிழங்கு, உடலின் வியாதி எதிர்ப்புத்தன்மையை அதிகரிக்கும் ஆற்றல் மிக்கது.

உடல் உறுப்புகளின் சூட்டைத் தணித்து, உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் வாதம்,

பித்தம் மற்றும் கபம் எனும் முக்குற்றங்களின் கோளாறுகளை நீக்கி, உடலை

வலுப்படுத்தும், தன்மை கொண்டது.

தொன்மைச் சிறப்புமிக்க காவளிக்கிழங்கு, பசியை அறவே போக்கி, உடலில் உள்ள

அதீத கொழுப்புகளைக் கரைத்து, உடலை சிக்கென வைத்திருக்கும்.

காவளிக்கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்து வர, அதிக இரத்தப்போக்கு, வயிற்று

வலி போன்ற பெண்களின் கடுமையான மாதாந்திர பாதிப்புகளை நீக்கி, அவர்களின்

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

நவீன மேலை மருத்துவத்தில், காவளிக்கிழங்கு, உடலுக்கு ஊக்கமளிக்கும் Steroid

மருந்துகள் தயாரிப்பிலும், கருத்தடை மாத்திரைகள் தயாரிப்பிலும், அதிகம்

பயன்படுத்தப்படுகிறது.

உடல் நலம் காக்கும் காவளிக்கிழங்கு!

உடல் நலம் காக்கும் காவளிக்கிழங்கு!

உடலுக்கு வாயு பாதிப்பை அளித்து, வாத வியாதிகளை ஏற்படுத்தும் உருளைக்

கிழங்குக்கு மாற்றாக, தொன்மையான பாரம்பரியமிக்க காவளிக்கிழங்கை,

தற்காலத்தில் அதிகம் பேர் உணவில் சேர்த்து, வருகின்றனர்.

உருளைக்கிழங்கில் செய்வது போன்று, காவளிக்கிழங்கில், பொரியல், மசியல்,

காரக்கறி போன்றவை செய்யலாம். கிழங்கை மெலிதாக நறுக்கி, சிப்ஸ் போன்று

எண்ணையில் வறுத்தும் பயன்படுத்தலாம்.

உடலுக்கு பல்வேறு நன்மைகள் தரும் உணவாக காவளிக் கிழங்கு இருந்தாலும்,

காவளிக்கிழங்கை, அளவோடு பயன்படுத்த வேண்டும். எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் நஞ்சு தானே!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health Benefits of Air Potato Aka Kaavalikkilangu

Health Benefits of Air Potato Aka Kaavalikkilangu
Story first published: Tuesday, March 6, 2018, 14:00 [IST]