Latest Updates
-
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை! -
லட்சுமி நாராயண ராஜயோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும்
சீத்தாபழ இலைகளுக்குள் ஒளிந்திருக்கும் நீரிழிவு நோயிற்கான விடை பற்றி தெரியுமா..?
சர்க்கரை அளவை சீராக வைக்க உதவும் சீத்தாப்பழ இலைகளின் மகத்துவமும் அதன் மருத்துவ குணங்களுக்கும்.
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல். -குறள்
இந்த திருக்குறளின் அர்த்தமே ஒரு மனிதனின் அனைத்து நோய்களுக்கும் பெரும் தீர்வாக உள்ளது. அதாவது, ஒரு மனிதன் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அதனை இன்னது என ஆராய்ந்து, அதை குணப்படுத்தும் வழி முறைகள் என்ன என்பதை அறிந்து, பின் உடலுக்கு ஏற்ற சிகிச்சையை தருவதே ஒரு நோய்க்கான நல்ல தீர்வாக இருக்க முடியும். இதைதான் பல ஆரய்ச்சியாளர்களும் இன்றளவும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதை போன்ற ஆராய்ச்சிகளில் கண்டறிந்த ஒரு புதுமையான கண்டுபிடிப்பு, நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் சக்தி சீத்தாப்பழ இலைகளுக்கு இருப்பது என்பது...! இத்தனை நாள் நாம் சீத்தாப்பழங்களை மட்டுமே சாப்பிட்டு வந்தோம். ஆனால் அதன் இலைகள் கூட இத்தனை அற்புத மருத்துவ குணங்கள் கொண்டதாக இருக்கிறதா..? என்பது மிகவும் ஆச்சரியமான தகவலாக இருக்கிறது. இந்த பதிவில் சீத்தாப்பழ இலைகளின் அற்புத மகத்துவத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.

சீத்தாப்பழம் :-
பழங்களில் அதிகம் நாம் சாப்பிடாமல் இருக்க கூடிய ஒரு பழ வகை இது. ஆனால் இந்த பழத்தின் மகிமையை பற்றி நீங்கள் அறிந்தது மிக குறைவே. சீத்தாப்பழத்தில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது. அதை விட மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், சீத்தாப்பழ இலைகள் கூட நீரிழிவு நோயை கட்டுப்படுத்துமாம். இந்த இலைகளில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், பொட்டாசியம், தாதுக்கள், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இத்தகைய மகத்துவமான இலையின் பல நன்மைகளை இனி அறிவோம்.

சீரான சர்க்கரை அளவு..!
சீத்தாப்பழ இலைகள் உடலில் உள்ள சர்க்கரையை கரைத்து, சீரான அளவில் இதனை வைக்கும். நார்சத்துக்களை சரியாக செரிமானம் அடைய செய்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இந்த இலைகளை நீரில் போட்டு 5 நிமிடம் கொதிக்க விட்டு அதன் பிறகு வடிகட்டி, தினமும் காலையில் குடிக்க வேண்டும். இவ்வாறு குடித்து வந்தால் சர்க்கரை நோயின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

புற்றுநோய்க்கும் தீர்வா..!
இந்த இலைகள் புற்றுநோய்க்கு ஒரு அருமையான தீர்வை தருகின்றது என்றால் மிகவும் வியப்பாகத்தான் இருக்கும். இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உடலில் உள்ள வெள்ளை ரத்த அணுக்களை அதிகரித்து புற்றுநோய் செல்களுடன் போராடும் சக்தியை தருகிறது. எனவே சீத்தப்பழ இலைகள் ஒருவரின் உடலில் புற்றுநோய் செல்கள் உருவாவதை பெரிதும் தடுக்கிறது.

இதய நோயாளிகளுக்கு...
இன்று அதிக பேர் இடர்படும் ஒரு முக்கிய நோய் இதய நோயே...! தேவையற்ற உணவு பழக்கத்தாலும், உளவியல் ரீதியான அழுத்தத்தாலும் இதயம் மிகவும் பலவீனம் அடைகிறது. இதனாலே பலர் சிறிய வயதிலே தங்கள் உயிரை
இழக்க நேரிடுகிறது. இதனை சீத்தா இலைகள் சரி செய்கிறது. இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் இதய தசைகளை செம்மை படுத்தி இதயம் சார்ந்த பல நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.

என்றும் பதினாறு..!
சீத்தாப்பழத்தை போன்றே அதன் இலைகளிலும் அதிக ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளது. இதனால் உங்கள் சருமத்தை பாதுகாத்து நீண்ட நாட்கள் இளமையாக வைக்க உதவுகிறது. சருமத்தின் அனைத்து வகையான பிரச்சினைகளுக்கும் இந்த சீத்தாப்பழ இலை டீ ஒரு நல்ல மருந்து. அத்துடன் உடலில் இறந்த செல்களை அகற்றி, புதிய செல்களை உற்பத்தி செய்கிறது.

வீக்கத்தை குணப்படுத்த...
அடிக்கடி உடலில் வீக்கம் ஏற்பட்டால் அதனை சரி செய்ய அற்புத வழி இருக்கிறது. சீத்தாப்பழ இலைகளை வீக்கம் ஏற்பட்டுள்ள இடத்தில், இதன் சாற்றை பிழிந்து தேய்த்தால் வீக்கம் குறையும். மேலும் குடலில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் சீத்தாப்பழ இலை டீயை கொண்டு அதனை சரி செய்யலாம்.

காய்ச்சல் சரியாக...
பல நாட்கள் காய்ச்சல் இருந்தால் அவர்களுக்கு ஒரு நல்ல தீர்வு இந்த இலைகள். இவை உடலின் தட்பவெப்பத்தை சமமாக வைக்க உதவுகிறது. மேலும் உடலில் உள்ள அதிக சூட்டை தணித்து காய்ச்சலை குணமாக்குகிறது.
சீத்தாப்பழ இலைகளை உலர வைத்து அதில் டீ போட்டு குடித்தால் காய்ச்சல் சரியாகும்.

மூட்டுகள் வலு பெற...
பலருக்கு சிறு வயதிலேயே மூட்டு வலிகள் ஏற்படும். இந்த பிரச்சினைக்கு சரியான தீர்வை சீத்தாப்பழ இலைகள் தருகிறது. இதில் உள்ள கால்சியம் கைகளின் மூட்டு பகுதிகளையும், கால்களின் மூட்டையும் அதிகம் வலுப்பெற செய்யும். அத்துடன் இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். இதனால் நீங்கள் நீண்ட நாட்களுக்கு நோய்கள் இன்றி வாழலாம்.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.



Click it and Unblock the Notifications