Latest Updates
-
அக்டோபர் 11-ல் உருவாகும் வைதிருதி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம் -
கொங்கு ஸ்பெஷல் பழ கச்சாயம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாப்பிட புசுபுசுனு அருமையா இருக்கும் -
லன்ச் பாக்ஸ்-க்கு ஒருடைம் இந்த கோவக்காய் சாதம் செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று முன்னோர்களின் ஆசியை பெற என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. மற்றவர்களிடம் மறைக்கும் உங்களின் நச்சு குணம் பத்தி சொல்றோம்.. -
தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் எது தெரியுமா? எதுன்னு தெரிஞ்சா நீங்க நம்பவே மாட்டிங்க... -
சிக்கன் வாங்குனா எப்பவும் குழம்பு செய்யாம, ஒருவாட்டி ரசம் செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி கார குழம்பு வைச்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்தியாவின் 'காபி தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா? நம்ம பக்கத்துக்கு ஊர்தானா? -
அக்டோபர் 09-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
எச்சரிக்கை! எக்காரணம் கொண்டும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க.. ரொம்ப அவதிப்படுவீங்க..
Calcium Deficiency Symptoms In Tamil: உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், அதற்கு ஒருசில சத்துக்கள் மிகவும் இன்றியமையாதது. அதில் ஒன்று தான் கால்சியம். உடலில் கால்சியம் போதுமான அளவில் இருந்தால் தான் எலும்புகள் மற்றும் பற்கள் நன்கு வலிமையாக இருக்கும். அதுவும் ஆண்களை விட பெண்கள் அதிகளவில் கால்சியத்தை எடுக்க வேண்டும்.
ஏனெனில் பெண்கள் இறுதி மாதவிடாயை நெருங்கும் போது, அவர்களின் உடலில் கால்சியத்தின் அளவு அதிகம் தேவைப்படும். இந்த கால்சியம் உடலில் குறைவாக இருந்தால், அது ஆஸ்டியோபோரோசிஸ், ஹைபோகால்சீமியா போன்றவற்றின் அபாயம் அதிகரித்துவிடும். எனவே ஒரு குறிப்பிட்ட வயதை எட்டிய பின், பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

உடலில் கால்சியம் குறைவாக இருந்தால், அது ஒருசில அறிகுறிகளை நமக்கு தெரியப்படுத்தும். அந்த அறிகுறிகளை கவனித்து, அந்த சத்து நிறைந்த உணவுகளை உட்கொண்டு வந்தால், நிலைமை தீவிரமாவதைத் தடுக்கலாம். சரி, கால்சியம் குறைபாட்டின் அறிகுறிகள் எப்படி இருக்கும் என்று கேட்கலாம். கீழே கால்சியம் குறைவாக இருந்தால் எந்த மாதிரியான அறிகுறிகள் தெரியும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.
1. நகம் உடைவது
உங்கள் நகங்கள் அதிகம் உடைகிறதா அல்லது உரிகிறதா? இது பல பிரச்சனைகளின் அறிகுறி. முக்கியமாக கால்சியம் உடலில் குறைவாக இருந்தால், இம்மாதிரியான அறிகுறியை அதிகம் சந்திக்க நேரிடும். ஏனெனில் கால்சியமானது நகங்களின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. இதன் அளவு குறையும் போது நகங்கள் பலவீனமாகி, நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
2. தசை பிடிப்புகள்
கால்சியமானது தசைகளின் இயக்கத்திற்கு மிகவும் இன்றியமையாதது. இந்த கால்சியம் ஒருவரது உடலில் போதுமான அளவில் இல்லாவிட்டால், அதன் விளைவாக தசை பிடிப்புகள், தசை வலி போன்ற தசை தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆகவே காரணமின்றி அடிக்கடி தசைகளில் பிரச்சனைகளை சந்தித்தால், கால்சியம் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும் என்று அர்த்தம்.
3. பல் வலி
நமது உடலில் 99% கால்சியம் உள்ளது. அதுவும் இது பற்கள் மற்றும் எலும்புகளில் தான் சேமிக்கப்பட்டுள்ளது. இந்த கால்சியம் உடலில் குறைவாக இருந்தால், அதன் விளைவாக பல் வலி, பல் சொத்தை போன்ற பற்கள் தொடர்பான பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். சில சமயங்களில் கால்சியம் குறைபாடு தீவிரமானால், ஈறு நோய்களின் அபாயம் அதிகரிக்கிறது.
4. மாதவிடாய்க்கு முந்தைய வயிற்று வலி
பெண்களின் உடலில் கால்சியம் குறைவாக இருந்தால், அந்த பெண்கள் மாதவிடாய் காலத்தில் அதிகளவு வயிற்று வலியை சந்திக்க நேரிடும். ஆய்வுகளின் படி, ஹைப்போகால்சீமியாவானது மாதவிடாய் காலத்தில் தீவிரமான அறிகுறிகளை உண்டாக்குவதாக தெரிய வந்துள்ளது. எனவே இம்மாதிரியான வயிற்று வலியை சந்திக்கும் பெண்கள், கால்சியம் உணவுகளை அதிகம் உட்கொண்டு வருவதன் கட்டுப்படுத்தலாம்.
5. உடல் சோர்வு
ஒருவர் நல்ல ஓய்விற்கு பின்னரும், மிகுந்த உடல் சோர்வு மற்றும் பலவீனத்தை உணர்ந்தால், அந்நபருக்கு கால்சியம் குறைபாடு இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. கால்சியமானது ஆற்றல் வளர்சிதை மாற்றத்தில் ஈடுபடுகிறது. இந்த கால்சியம் குறைவாக இருக்கும் போது, உடலின் ஆற்றல் அளவு குறைந்து, மிகுந்த உடல் சோர்வை உணர வைக்கும்.
கால்சியம் குறைபாடு நீங்க என்ன சாப்பிட வேண்டும்?
கால்சியம் குறைபாடு உள்ளவர்கள், அதிலிருந்து விடுபட மாட்டு பால், தயிர், முருங்கைக்கீரை, நல்லெண்ணெய், ராகி, கொள்ளு, சோயா பீன்ஸ், நண்டு, எள்ளு விதைகள், டோஃபு, ப்ராக்கோலி, பாதாம், ஆரஞ்சு ஜூஸ் போன்றவற்றை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும். தீவிர நிலையில், மருத்துவரை அணுகி மருத்துவர் பரிந்துரைக்கும் சப்ளிமெண்ட்டுகளை உட்கொள்ள வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
