Latest Updates
-
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
தினமும் வீட்டில் கற்பூரத்துடன் பிரியாணி இலை சேர்த்து எரிங்க.. அப்புறம் நடக்குறத பாருங்க.. ஆச்சரியப்படுவீங்க.. -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த நெல்லை ஸ்டைல் கொத்சை ட்ரை பண்ணுங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசிகள் எல்லோரையும் அவங்க கட்டுப்பாட்டில் வைத்து ஆட்டி படைப்பவர்களாக இருப்பார்களாம் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பாரம்பரிய நெய் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
Angarak Yog 2024: வேத ஜோதிடத்தில் கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றும் போது, சில சமயங்களில் கிரகங்களின் சேர்க்கையால் சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகும். அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் ஏப்ரல் 23 ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்குள் நுழைந்தார். இந்த மீன ராசியில் ஏற்கனவே ராகு பயணித்து வருகிறார். இதனால் மீன ராசியில் செவ்வாய் மற்றும் ராகு சேர்க்கையால் மிகவும் மோசமான யோகமான அங்காரக யோகம் உருவாகியுள்ளது.

இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த யோகமானது கஷ்டங்களை அதிகரிக்கும். குறிப்பாக நிதி பிரச்சனைகள் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை அதிகம் சந்திக்க வைக்கும். இப்போது ராகு செவ்வாய் சேர்க்கையால் உருவான அங்காரக யோகத்தால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு அங்காரக யோகமானது குடும்பத்தில் பல பிரச்சனைகளை வரவழைக்கும். திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை படு மோசமாக இருக்கும். துணையுடன் நிறைய வாக்குவாதங்கள் மற்றும் சண்டைகளில் ஈடுபட நேரிடும். இந்த காலத்தில் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும். ஏதாவது முதலீடு செய்ய நினைத்தால், அதில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. முடிந்தவரை முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு அங்காரக யோகமானது ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகம் சந்திக்க வைக்கும். நீதிமன்ற வழக்குகளில் தோல்வியை சந்திக்க நேரிடும். உங்களின் மன உறுதி குறையக்கூடும். சிலர் பல புதிய சவால்களை எதிர்கொள்ள நேரிடும். முக்கியமாக முதுகு வலி, அல்சர் போன்ற பிரச்சனைகளால் அதிகம் அவதிப்பட வேண்டியிருக்கும். ரகசிய எதிரிகளிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு அங்காரக யோகமானது 8 ஆவது வீட்டில் உருவாகியிருப்பதால், இந்த ராசிக்காரங்கள் நோய்களால் அவதிப்படலாம். சிலருக்கு விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. மேலும் இக்காலத்தில் தேவையற்ற செலவுகளை சந்திக்கலாம். எந்த ஒரு புதிய வேலையை செய்வதாக இருந்தாலும், அதை இக்காலத்தில் முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. இல்லாவிட்டால், அந்த வேலை தோல்வியடையும் அல்லது நஷ்டத்தை ஏற்படுத்தும். முக்கியமாக யாருக்கும் கடன் கொடுத்துவிடாதீர்கள். இல்லாவிட்டால் அந்த பணம் திரும்ப கைக்கு வராது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications