Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
தோசை மாவு இல்லாத சமயத்தில் 1 கப் அரிசி மாவு இருந்தா.. 10 நிமிடத்தில் மொறுமொறு-ன்னு தோசை சுடலாம்...
Crispy Instant Dosa Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் தோசை சுட மாவு இல்லையா? கவலை வேண்டாம். தோசை மாவு இல்லாமலேயே வீட்டில் உள்ள ஒருசில பொருட்களைக் கொண்டு அற்புதமான மற்றும் மொறுமொறுப்பான தோசை சுடலாம். இந்த இன்ஸ்டன்ட் தோசை சுட 10 நிமிடங்கள் போதுமானது.
இந்த தோசையானது ரவை தோசையைப் போன்றே நல்ல ருசியுடனும், மொறுமொறுவென்றும் இருக்கும். முக்கியமாக இந்த தோசைக்கு சைடு டிஷ் எதுவுமே தேவையில்லை. இருப்பினும், சட்னி ஏதாவது வேண்டுமென்று விரும்பினால், தக்காளி சட்னி, கார சட்னி, தேங்காய் சட்னி என்று அனைத்துமே நன்றாக இருக்கும்.

உங்களுக்கு இந்த இன்ஸ்டன்ட் தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இன்ஸ்டன்ட் தோசையின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* அரிசி மாவு - 1 கப்
* தண்ணீர் - 2 1/2 கப்
* இஞ்சி - 1 துண்டு (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (துருவியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சில்லி ப்ளேக்ஸ் - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் அரிசி மாவை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் 2 கப் நீரை ஊற்றி ஒரு முறை அரைத்து, ஒரு பாத்திரத்தில்
ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்துக்
கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் துருவிய கேரட், பொடியாக நறுக்கிய வெங்காயம்,
கொத்தமல்லி, மிளகுத் தூள், சில்லி ப்ளேக்ஸ் மற்றும் சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு நாண்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து, கல் சூடானதும்,
எண்ணெய் ஊற்றி, தயாரித்து வைத்துள்ள மாவை ஒருமுறை கலந்து அப்படியே
கரண்டியால் எடுத்து, சுற்றி தோசை போல் ஊற்ற வேண்டும்.
* பின் தோசையைச் சுற்றி எண்ணெய் ஊற்றி, 1 நிமிடம் வேக வைத்து
எடுத்தால், மொறுமொறுப்பான இன்ஸ்டன்ட் தோசை தயார்.
Image Courtesy: Akshaya Kitchen Recipes



Click it and Unblock the Notifications