Latest Updates
-
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா?
சித்ரா பெளர்ணமியில் கண்டிப்பாக இதை செய்யுங்கள்... செல்வம் சேரும்..!
பெளர்ணமி என்பது முழு நிலவு வானில் பிரகாசமாகத் தோன்றும் அற்புதமான நாள். இந்தநாளில், நல்ல அதிர்வலைகள் ஏற்படும். அப்பேர்ப்பட்ட சக்தி மிகுந்த நாளில், தேவி வழிபாடு செய்வது தீய சக்தியில் இருந்து நம்மைக் காக்கும். அம்மன் கோயிலுக்குச் சென்று பெளர்ணமி நன்னாளில் வழிபாடு செய்தால் வாழ்வில் இதுவரை பட்ட கஷ்டங்கள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை. அதில் மிகவும் சிறப்பு வாய்ந்தது சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பெளர்ணமிதான். அன்று உங்களால் முடிந்தவரை தானம் தர்மம் செய்யுங்கள்.. உங்களின் குடும்பத்திற்கே புண்ணியமும் செல்வமும் பெரும்...
சித்திரை பெளர்ணமியின் சிறப்புகள்
தமிழ் ஆண்டின் முதல் மாதமான சித்திரையில் வரும் பெளர்ணமி சித்ரா பௌர்ணமி. மனிதராக பிறந்த அனைவரின் செயல்களையும் சித்ர குப்தன்தான் கணக்கு வைத்துக் கொள்வார் என்பது நம்பிக்கை. சித்திரை மாதம் வரும் பெளர்ணமி சித்ரகுபத்தனை வணங்கும் நாள். மதுரையில் மிகவும் சிறப்பாக அனுசரிக்கப்படும். சித்ரா பௌர்ணமியன்று மதுரை கள்ளழகர் வைகையாற்றில் இறங்கி மண்டூக மகரிஷிக்கு அருள் புரியும் வைபவம் நடக்கிறது. அனுமன் ஜெயந்தியும் இந்த சித்திரை மாதத்தில் வரும் பெளர்ணமி தினத்தில்தான் கொண்டாடப்படுகிறது.

சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள், சித்ரா பெளர்ணமி அன்று சித்ரகுப்தனுக்கு பொங்கல் வைத்து வழிபடுவார்கள். மேலும் சித்ரா பௌர்ணமி அன்று அம்பாள் வழிபாடு செய்வதால் திருமண யோகம், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்துடன் கூடிய சித்ரா பௌர்ணமி வந்தால் மிகவும் விசேஷமானது.
சித்ரா பெளர்ணமியில் தானம் செய்யுங்கள்
இந்த தினத்தில் அனைத்து சிவாலயங்களிலும் மிகவும் விசேஷமான பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறும். அதே போன்று வைணவ கோயில்கள் மற்றும் இதர தெய்வங்களின் ஆலயங்களிலும் சிறப்பு பூஜைகள், விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.மற்ற எந்த பௌர்ணமி தினங்களை காட்டிலும் விசேஷ சிறப்புகள் வாய்ந்த இந்த சித்ரா பௌர்ணமி தினத்தன்று கிரிவலம் வந்து இறைவனை வழிபட்டு உங்களால் முடிந்த தானம், தர்மங்கள் செய்வதால் உங்களுக்கு அனைத்து வித நன்மைகளும், சுபிட்சங்களும் கிடைக்கும்.
இந்த சித்ரா பௌர்ணமி தினத்தன்று சித்திரகுப்தனை வழிபடுவதால் நீண்ட ஆயுளும், நோய்நொடி இல்லாத வாழ்வும் பக்தர்கள் கிடைக்கப்பெறுவார்கள். இந்த சித்ரா பவுர்ணமி தினத்தன்று தயிர்சாதம், எலுமிச்சை சாதம், நீர் மோர் போன்றவற்றை பக்தர்களுக்கு தானமாக வழங்குவது உங்களுக்கு மிகுந்த புண்ணியத்தை பெற்றுத்தரும். எனவே இன்று உங்களால் முடிந்த அளவுக்கு 4 பேருக்கு உணவு வழங்கினால் நல்லது. உங்கள் குலமே உணவுக்கு பஞ்சம் இன்றி வாழும் என்பது நம்பிக்கை.
பெளர்ணமி அன்று சொல்ல வேண்டிய ஸ்லோகம்
ஓம் கமலவர்ணனே போற்றி
ஓம் சித்திரை உருவே போற்றி
ஓம் பயம் போக்குபவனே போற்றி
ஓம் கால உருவே போற்றி
ஓம் அந்தக நண்பனே போற்றி
ஓம் ஞான உருவே போற்றி
ஓம் கருணாகரனே போற்றி
ஓம் கணக்கனே போற்றி
ஓம் தர்மராஜனே போற்றி
ஓம் தேவலோக வாசனே போற்றி
ஓம் ஆயுள் காரணனே போற்றி
ஓம் மேன்மை தருபவனே போற்றி
ஓம் குழந்தை வடிவினனே போற்றி
ஓம் குளிகன் உருவினனே போற்றி
ஓம் புண்ணிய தோற்றமுடையாய் போற்றி
ஓம் சித்திரகுப்தனே போற்றி
ஸ்லோகம் சொல்லும் முறை
பௌர்ணமி தினத்தன்று அதிகாலை முதல் நள்ளிரவு வரையான காலத்தில் மேற்கூறிய இந்த ஸ்லோகத்தை எத்தனை முறை துதித்து வந்தாலும் துதிப்பவர்களுக்கு நீண்ட ஆயுள், அன்பான வாழ்க்கை துணை, நன்மக்கள் செல்வம், மிகுந்த செல்வம், எதிரிகள் இல்லாத நிலை, மரண பயமின்மை, தெய்வங்களின் அருள் போன்ற பேறுகள் கிடைத்து இறுதியில் மோட்ச நிலையை அடைவார்கள். இந்த நன்னாளில் தெய்வங்களுக்கான விரதங்கள் இருப்பதும் இறைவழிபாடு மற்றும் தான தர்மங்கள் செய்வதும் சாலச் சிறந்ததாகும். இந்த பௌர்ணமி தினத்தன்று மேற்கூறிய ஸ்லோகத்தை துதித்து வழிபடுவதாலேயே ஒருவர் அனைத்து நன்மைகளையும் பெற முடியும்.
பலன்கள்
பொதுவாகவே பௌர்ணமி தினத்தன்று பெண்கள் வீட்டில் விளக்கேற்றி நெய்வேத்தியம் படைத்து குங்குமம் அல்லது மஞ்சள் கொண்டு தெய்வ மந்திரங்களை 108 முறை சொல்லி அர்ச்சித்து வழிபாடு செய்வதன் மூலம் மாங்கல்ய பலம் கிட்டும். அத்துடன் நீடித்த ஆயுள் கிடைக்கும். மரண பயம் நீங்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். தனலாபம் பெருகும் , குழந்தைகள் கல்வியில் வளர்ச்சி அடைவார்கள்...



Click it and Unblock the Notifications