For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தூக்கத்தை கெடுக்கக்கூடிய உணவுகள்

|

தூக்கம் என்பது மனிதர்களுக்கு மிகவும் அவசியமான ஒன்று. ஒருநாளின் வெற்றி என்பது அதற்கு முந்தைய இரவில் நாம் எவ்வளவு நேரம் தூங்கினோம் என்பதை பொருத்தே அமைகிறது. இரவு சரியாக தூங்கவில்லையெனில் அடுத்தநாள் முழுவதும் பதட்டத்துடனும், கோபத்துடனும் பெரும்பாலானவர்களுக்கு செல்கிறது. அன்றைய நாளின் சோர்வுக்கு மருந்தாகவும், அடுத்த நாள் வேலைக்கு விதையாகவும் இருப்பது நிம்மதியான தூக்கம்தான்.

Health

நிம்மதியான தூக்கத்தை பெற பலரும் பல வழிகளில் முயற்சிக்கின்றனர். பலருக்கு மாத்திரை போடவிட்டால் தூக்கமே வராது என்ற நிலைமை உருவாகிவிட்டது. நமது தூக்கம் கெட பல காரணங்கள் உள்ளது. அதில் முக்கியமான ஒன்று உணவுமுறை. வயிறுநிறைய சாப்பிட்டுவிட்டு படுத்தால் நன்றாக தூக்கம் வரும் என்பது தவறான நம்பிக்கையாகும். நாம் சாப்பிடும் சில உணவுகளே நமது தூக்கத்தை கெடுக்கும். அப்படி எந்த உணவுகள் நம் தூக்கத்தை கெடுக்கிறது என்பதை இங்கே பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சர்க்கரை உணவுகள்

சர்க்கரை உணவுகள்

சர்க்கரை பற்றி நீங்கள் நன்கு அறிவீர்கள். குறைந்தளவு க்ளெசமிக் கொண்ட இது எளிதில் செரிமானம் அடையக்கூடியது, உங்கள் உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கக்கூடியது. இது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை உடனடியாக உயர்த்த கூடியது. ஆனால் இதனை இரவு தூங்குவதற்கு முன் நீங்கள் சாப்பிட நினைத்தால் அது தவறான முடிவாகும். ஏனெனில் இது சீக்கிரம் செரிமானம் அடைந்து விடுவதால் சீக்கிரமே உங்களுக்கு பசியெடுக்க தொடங்கிவிடும். இதனால் உங்கள் தூக்கம் பாதியில் கெடக்கூடும். உதாரணத்திற்கு இனிப்பூட்டப்பட்ட குளிர்பானங்கள், பிஸ்கட், சாக்லேட், கேக், இனிப்புகள் போன்றவற்றை இரவில் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

கொழுப்பு உணவுகள்

கொழுப்பு உணவுகள்

இவை உங்களை நாள் முழுவதும் அரை தூக்கத்துடனும், இரவில் விழிப்புடனும் இருக்க செய்யும். கொழுப்பு உணவுகள் எவ்வாறு தூக்கத்தை கெடுக்கிறது என்பது ஆராய்ச்சியாளர்களை இன்றும் குழப்பும் ஒரு விஷயமாகும். கொழுப்பு நிறைந்த உணவுகள் உங்கள் உடலில் நரம்பும் மண்டலம், வளர்சிதை மாற்றம், ஹார்மோன் மாற்றம் என பலவற்றை ஏற்ப்படுத்தக்கூடியது. இது தூக்கத்தில் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துகிறது? அதிக கொழுப்பு உள்ள உணவுகள் மந்த தன்மையையும், கவனசிதறலையும் ஏற்படுத்தும். தொடர்ந்து கொழுப்பு உணவுகள் சாப்பிடுவது உடலில் க்ரெலினின் அளவை குறைத்தும் லெப்டினின் அளவை அதிகரிக்கவும் செய்யும். இவைதான் நம் உடலில் பசியை ஏற்படுத்தக்கூடிய மற்றும் கட்டுப்படுத்தக்கூடிய ஹார்மோனாகும். இதனால் உங்களுக்கு பசி ஏற்படும் நேரத்தில் மற்றம் ஏற்படுவதால் அதிக நேரம் விழித்திருக்க நேரும். எனவே கொழுப்பு உணவுகள் அதிகம் சேர்த்துக்கொள்வதை தவிர்க்கவும்.

கார உணவுகள்

கார உணவுகள்

காரமான உணவுகள் உங்களின் சுவைமொட்டுக்களை தூண்டிவிடலாம் ஆனால் அவை உங்கள் இரவு நேர தூக்கத்தை கெடுத்துவிடும். ஒருவேளை அஜீரணம் ஏற்பட்டுவிட்டால் பின்னர் இரவு தூக்கத்தை மறந்துவிட வேண்டியதுதான். அசிடிட்டி பிரச்சினை உள்ளவர்களுக்கு இது மேலும் பிரச்சினைகளை அதிகரிக்கும். கார உணவுகளை சாப்பிட்டவுடன் நெஞ்செரிச்சல் ஏற்படவில்லையென்றால் உங்கள் தூக்கம் கெடாது என்று அர்த்தம்.

காஃபைன்

காஃபைன்

இது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். மாணவர்கள் பலரும் இரவு தூங்காமல் இருப்பதற்காக காபி, டீ குடித்துவிட்டு படிப்பதை நாம் நிறைய பார்த்திருக்கிறோம். நீங்கள் தூங்காமல் இருக்க விரும்பினால் தாரளமாக காபி, டீ அருந்திவிட்டு படுக்கைக்கு செல்லுங்கள். மருத்துவரீதியாக தூங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பே காபி குடித்துவிட வேண்டும். இல்லையெனில் அது நிச்சயம் உங்கள் தூக்கத்தை பாதிக்கும். ஆய்வுகளின்படி 400 மிகி காஃபைன் சேர்த்துக்கொள்வது உங்கள் தூக்கத்தை பலவழிகளில் கெடுக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. எனவே தூங்கசெல்லும்முன் காபி, டீ, ஹாட் சாக்லேட், எனர்ஜி பானங்கள் போன்றவற்றை குடிப்பதை தவிர்க்கவும்.

அதிக பைபர் உள்ள உணவுகள்

அதிக பைபர் உள்ள உணவுகள்

பைபர் உணவுகள் நமக்கு பல நன்மைகளை வழங்கக்கூடியது குறிப்பாக இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது. ஆனால் இரவு உணவாகவோ அல்லது இரவு உணவிற்கு பிறகு பைபர் நிறைந்த உணவுகள் எடுத்துக்கொள்வது நல்லதல்ல. ஏனெனில் இது செரிமானம் அடைய அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால் உங்கள் தூக்கம் பாதிப்படையும். உங்கள் செரிமான மண்டலம் தொடர்ந்து வேலை செய்துகொண்டிருக்கும்போது உங்களால் நிம்மதியாக தூங்க இயலாது. அதுமட்டுமின்றி அதிக பைபர் உள்ள உணவுகள் உங்கள் பெருங்குடலை அடையும்போது வாயுப்பிரச்சினையை உண்டாக்கும்.

ஆல்கஹால்

ஆல்கஹால்

மதுஅருந்துவது நிம்மதியான தூக்கத்தை அளிக்கிறது என்ற மூடநம்பிக்கை பரவலாக நிலவி வருகிறது. ஆனால் உண்மையில் மதுருந்துவது உங்கள் தூக்கத்தை கெடுக்கத்தான் செய்கிறது. ஆல்கஹால் அருந்துவது சிறிது நேரத்திற்கு வேண்டுமானால் உங்கள் தசைகளை தளர்த்தி உங்களை நிம்மதியாக உணர செய்யலாம். ஆனால் அது தாற்காலிகமானதுதான். மது அருந்துவது இரவின் முற்பாதியில் உங்களுக்கு நல்ல தூக்கத்தை வழங்கினாலும் இரவின் பிற்பாதி தூக்கத்தை கடுமையாக பாதிக்கும். எனவே அதிகாலையில் எழுவதுடன் அடுத்த நாள்முழுவதும் சோர்வாகவே கடக்கும்.

தண்ணீர்

தண்ணீர்

நாள் முழுவதும் உடலில் அதிக நீர்ச்சத்துடன் இருப்பது மிகவும் நல்லது. ஆனால் இரவு நேரத்தில் அதிக நீர் அருந்துவது உங்கள் தூக்கத்தை கெடுக்க கூடியது. தாகத்தால் தூக்கம் கெடாமலிருக்க தூங்குவதற்கு முன்னரே போதுமான அளவு தண்ணீர் குடித்துவிட வேண்டும். அதேநேரம் இரவில் உடலில் அதிகமாக சேர்ந்துள்ள சிறுநீரை வெளியேற்ற நீங்கள் எழ வேண்டியிருக்கும். எப்படி பார்த்தாலும் உங்கள் தூக்கம் கெடும். அதற்கு மாற்றுவழியாக நாள் முழுவதும் அதிகளவு நீர் அருந்துங்கள் ஆனால் தூங்க செல்லும் சில மணி நேரங்களுக்கு முன் நீர் குடிக்கும் அளவை பாதியாக குறைத்து விடுங்கள். இதன்மூலம் உங்களுக்கு போதுமான நீர்ச்சத்தும் கிடைக்கும் இரவில் சிறுநீர் கழிக்க வேண்டிய அவசியமும் இருக்காது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

List of foods which affects sleep

Sleep is the important thing for all. Many things are there which affects our sleep. Food is one of the main reasons, among them.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more