இந்த உணவுகளை ஒன்னா சாப்பிடாதீங்க... இல்ல டர்ர்ர்.. டர்ர்ர்... பிரச்சனையால கஷ்டப்படுவீங்க...

Posted By:
Subscribe to Boldsky

நீங்கள் அன்றாடம் மேற்கொள்ளும் டயட் சரியானதாக உள்ளதா? சரியான உணவுக் கலவைகளைத் தேர்ந்தெடுத்து தான் சாப்பிடுகிறீர்களா? டயட் என்று வந்தால், அதில் எந்த உணவை எந்த உணவுடன் சேர்த்து சாப்பிடுகிறோம் என்பதைக் கவனிக்க வேண்டியது மிகவும் முக்கியம். தவறான உணவுக் கலவைகளை உட்கொண்டால், அதனால் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

Food Combinations That Cause Gas

நிறைய பேர் எவ்வித நோய் தாக்குதலுமின்றி, பல உடல் உபாதைகளால் அவஸ்தைப்படுவார்கள். இதற்கு காரணம் என்னவென்று பார்த்தால் தவறான உணவுக் கலவைகளைத் தேர்ந்தெடுத்து உட்கொண்டதாக இருக்கும். நம்மில் பலருக்கும் எந்த உணவுடன் எதை சேர்த்து சாப்பிடலாம், எதை சேர்த்து சாப்பிடக்கூடாது என்று சரியாக தெரியாது. இப்படி தெரியாமல் கண்ட உணவுகளை கண்டதுடன் சேர்த்து சாப்பிட்டு, பின் பெரும் அவஸ்தைக்கு உள்ளாவோம்.

தவறான உணவுக் கலவையால் சந்திக்கும் முதன்மையான பிரச்சனையாக பலரும் கூறுவது வாய்வுத் தொல்லையாகத் தான் இருக்கும். இதனால் பல இடங்களில் பலர் தர்ம சங்கடத்தை எல்லாம் சந்தித்திருப்பார்கள். சரி, எந்த உணவுகளை எந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிட்டால் வாய்வுத் தொல்லை பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை இக்கட்டுரையில் இப்போது காண்போம். அதைப் படித்து அந்த உணவுக் கலவைகளைத் தவிர்த்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உணவுகளுக்குப் பின் பழங்கள்

உணவுகளுக்குப் பின் பழங்கள்

நம் அனைவருக்குமே பழங்களின் முக்கியத்துவம் தெரியும். ஆனால் பழங்களை தவறான உணவுகளுடன் உட்கொண்டால், அதனால் உடல் உபாதைகளால் அவஸ்தைப்படக்கூடும். முக்கியமாக ஒருவர் வயிறு நிறைய உணவு உட்கொண்ட பின் உடனே பழங்களை சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால், செரிமான செயல்பாடு தாமதமாக நடைபெறுவதோடு, சத்துக்களை உடல் உறிஞ்சுவதும் தாமதப்படுத்தப்படும். அதிலும் நார்ச்சத்துள்ள பழங்களை சாப்பிட்டால் தான், செரிமானம் தாமதப்படுத்தப்பட்டு, வாய்வுத் தொல்லை மற்றும் வயிறு உப்புச பிரச்சனைகளால் அவஸ்ப்படச் செய்யும்.

பால் பொருட்கள் மற்றும் ஸ்டார்ச்

பால் பொருட்கள் மற்றும் ஸ்டார்ச்

சாதாரணமாகவே பால் பொருட்கள் செரிமானமாவதற்கு தாமதம் ஆகும். இந்நிலையில் இதை ஸ்டார்ச் உடன் சேர்த்து உட்கொண்டால், அதனால் செரிமான நிகழ்வு இன்னும் தாமதமாக நடைபெறும். இந்நிலையில் கடுமையான வாய்வுத் தொல்லை மற்றும் வயிற்று உப்புசத்தை சந்திக்க நேரிடும். ஆகவே பிரட் மற்றும் பால் பொருட்களை ஒன்றாக சேர்த்து சாப்பிடாதீர்கள்.

அசிட்டிக் பழங்கள் மற்றும் ஸ்டார்ச்

அசிட்டிக் பழங்கள் மற்றும் ஸ்டார்ச்

அசிட்டிக் அமிலங்கள் நிறைந்த ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களை, ஸ்டார்ச் நிறைந்த உணவுப் பொருட்களுடன் சேர்த்து சாப்பிட்டால், உடல் உபாதைகளால் கஷ்டப்பட வேண்டியிருக்கும். ஒருவேளை சாப்பிட்டால், செரிமான செயல்முறையானது தாமதமாகவும், நீண்ட நேரமும் நடைபெற்று, வாய்வுத் தொல்லை மற்றும் அஜீரண பிரச்சனைகளால் அவஸ்தைப்பட நேரிடும்.

ஸ்டார்ச் மற்றும் சர்க்கரை

ஸ்டார்ச் மற்றும் சர்க்கரை

பெரும்பாலானோர் காலை உணவாக பிரட்டுடன் ஜாம், ஜெல்லி போன்றவற்றை சாப்பிடுவார்கள். ஆனால் ஸ்டார்ச் மற்றும் சர்க்கரை காம்பினேஷனை உட்கொண்டால், அது நொதித்தல் செயல்முறையை உடலினுள் ஏற்படுத்தி, கடுமையான வாய்வுத் தொல்லை மற்றும் வயிற்று உப்புசத்தால் கஷ்டப்பட செய்துவிடும். ஆகவே இந்த காம்பினேஷனை மட்டும் எப்போதும் சாப்பிடாதீர்கள்.

பீன்ஸ் மற்றும் சீஸ்

பீன்ஸ் மற்றும் சீஸ்

பீன்ஸ் மற்றும் பால் பொருளான சீஸை ஒன்றாக சேர்த்து சமைத்து சாப்பிடும் போது சுவையாக இருப்பது போன்று உங்களுக்கு இருக்கலாம். ஆனால் இந்த காம்பினேஷன் தேவையில்லாத வாய்வுத் தொல்லை, வயிற்று உப்புசம் மற்றும் அஜீரண கோளாறு போன்றவற்றை உண்டாக்கும். எனவே இந்த காம்பினேஷனில் சாப்பிட மட்டும் ஆசைப்பட்டு விடாதீர்கள்.

பழங்கள் மற்றும் காய்கறிகள்

பழங்கள் மற்றும் காய்கறிகள்

பழங்கள் மற்றும் காய்கறிகள் ஒவ்வொருவரின் டயட்டிலும் சேர்க்க வேண்டிய ஆரோக்கிய உணவுப் பொருட்கள் தான். ஆனால் பழங்களையும் காய்கறிகளையும் ஒன்றாக ஒரே சமயத்தில் சாப்பிடுவது சிறந்த ஐடியா அல்ல. அப்படியே சாப்பிட்டாலும், அது வாய்வுத் தொல்லை மற்றும் வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும்.

இறைச்சி மற்றும் உருளைக்கிழங்கு

இறைச்சி மற்றும் உருளைக்கிழங்கு

பலருக்கு இறைச்சியை சமைக்கும் போது, அத்துடன் உருளைக்கிழங்கை சேர்த்தால் ரொம்ப பிடிக்கும். ஆனால் இந்த காம்பினேஷன் நம் வயிற்றிற்கு சரிபட்டு வராது. எப்போதுமே புரோட்டீனும், கார்போஹைட்ரேட்டும் சிறந்த காம்பினேஷன் அல்ல. இப்படியொரு கலவையை யார் சாப்பிட்டாலும், அவர்கள் கடுமையான வாய்வுத் தொல்லையை சந்திப்பதோடு, இதர வயிற்று பிரச்சனைகளாலும் கஷ்டப்பட வேண்டியிருக்கும்.

பானங்களுக்கு பின் உணவு

பானங்களுக்கு பின் உணவு

தண்ணீர் அல்லது இதர பானங்களை அருந்திய பின் உணவு உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். பலரும் இப்படி செய்தால், அளவாக உணவை உட்கொள்ளலாம் என்று நினைப்பர். ஆனால் இப்படி செய்தால், உண்மையில் உடலினுள் நடப்பதே வேறு. ஒருவர் உணவு உண்பதற்கு முன் நீரையோ அல்லது வேறு ஏதேனும் பானங்களையோ பருகினால், அதனால் செரிமானத்திற்கு காரணமான நொதிகள் நீர்க்கப்பட்டு, செரிமானம் தாமதமாக நடைபெற்று, வாய்வுத் தொல்லையை சந்திக்க நேரிடும். ஆகவே உணவு உண்பதற்கும், நீர் அல்லது வேறு ஏதேனும் பானங்களை அருந்துவதற்கும் இடையே 30 நிமிட இடைவெளியைக் கொடுக்க வேண்டியது என்பது அவசியமான ஒன்று.

பழங்கள் மற்றும் பால் பொருட்கள்

பழங்கள் மற்றும் பால் பொருட்கள்

பலருக்கும் ஸ்மூத்திகள் மிகவும் விருப்பமான ஓர் பானமாக இருக்கலாம். ஆனால் இதில் உள்ள ஒரு பிரச்சனை என்னவென்றால், விலங்கு வகை புரோட்டீனான தயிரை, பழங்களுடன் சேர்த்து சாப்பிட்டால், அதனால் செரிமானம் சிறப்பாக நடைபெறாமல், அசிடிட்டி மற்றும் நொதித்தல் செயல்முறை நடைபெற்று, பெரும் வயிற்று பிரச்சனைகளால் அவஸ்தைப்பட வேண்டியிருக்கும் என்பதை மறவாதீர்கள்.

சீஸ் மற்றும் இறைச்சி ஆம்லெட்

சீஸ் மற்றும் இறைச்சி ஆம்லெட்

பொதுவாக புரோட்டீன் மற்றும் புரோட்டீன் நிறைந்த இரண்டு உணவுப் பொருட்களையும் சாப்பிடக்கூடாது. சாதாரணமாகவே புரோட்டீன் நிறைந்த ஒரு உணவுப் பொருளை உட்கொண்டாலே, அது செரிமானமாவதற்கு தாமதமாகும். அதில் இரு வேறு வகையான புரோட்டீன்களை உட்கொண்டால், அதை செரிமானம் செய்வதற்கு உடலுக்கு போதுமான ஆற்றல் கிடைக்காமல், அஜீரண கோளாறுகளான வயிற்று உப்புசம், வாய்வுத் தொல்லை போன்றவற்றால் கஷ்டப்படக்கூடும்.

வாழைப்பழம் மற்றும் பால்

வாழைப்பழம் மற்றும் பால்

வாழைப்பழத்துடன் பால் சேர்த்து சாப்பிட யாருக்கு தான் பிடிக்காது. ஆனால் ஆயுர்வேதத்தின் படி இப்படி சாப்பிட்டால், அது செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை கடுமையாக்கி, டாக்ஸின்களை உடலினுள் உருவாக்கிவிடுமாம். ஒருவேளை உங்களுக்கு வாழைப்பழ மில்க் ஷேக் குடிக்க வேண்டுமானால், அத்துடன் ஒரு சிட்டிகை ஏலக்காய் பொடி அல்லது ஜாதிக்காய் பொடியை தூவி, பின் குடியுங்கள். இதனால் செரிமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய அவசியம் இருக்காது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Food Combinations That Cause Gas

Choosing the right combination of food is as much important as choosing a right diet. Often, people wake up with a bloated tummy because of food combinations that cause gas. So, this list will help you steer clear of that.
Story first published: Tuesday, March 13, 2018, 15:01 [IST]