Latest Updates
-
அடுப்பில்லாம செய்யக்கூடிய அவல் பாயாசம் - செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க..
ஆண்களே, இந்த 15 தினசரி செயல்கள்தான் உங்களின் விந்தணுக்களை குறைத்து, பாதிக்க செய்கிறது..!
குறிப்பாக ஆண்கள் செய்யும் சில அன்றாட செயல்கள்தான் அவர்களின் அடுத்த தலைமுறையை உருவாக்குமா... இல்லையா... என்பதை நிர்ணயிக்கும்.
நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கு பின், கட்டாயம் ஒரு அர்த்தமும் அதற்கேற்ற விளைவும் இருக்கதான் செய்யும். நியூட்டனின் மூன்றாம் விதியின் படி ஒவ்வொரு விசைக்கும் கட்டாயம் அதற்கான சமமான அல்லது எதிரான விசை இருக்கும். அந்த வகையில் நாம் செய்யும் அன்றாட பழக்க வழக்கங்களே நமது உடல் ஆரோக்கியத்திற்கு எதிரானதாக இருக்கின்றது என்றால் அது கட்டாயம் சிந்திக்க வேண்டிய ஒன்றாகும். அது நாம் சாப்பிடும் உணவாக இருக்கலாம், நாம் விளையாடும் விளையாட்டாக இருக்கலாம், அல்லது நாம் நினைக்கும் சிறு விஷயமாக கூட இருக்கலாம்.

குறிப்பாக ஆண்கள் செய்யும் சில அன்றாட செயல்கள்தான் அவர்களின் அடுத்த தலைமுறையை உருவாக்குமா... இல்லையா... என்பதை நிர்ணயிக்கும். இந்த பதிவில் ஆண்கள் செய்யும் எந்தெந்த செயல்கள் விந்தணு குறைபாட்டை ஏற்படுத்துகின்றது என்பதை விவரமாக அறியலாம்.

விந்தணு குறைபாடு...
குழந்தை பேறு என்பது மிகவும் அற்புதமான ஒரு நிகழ்வு. ஆனால், இன்று பல ஆண்களாலும் பெண்களாலும் குழந்தை பேறு பெற முடிவதில்லை. இதற்கு பல்வேறு காரணிகளை மருத்துவர்கள் முன் வைக்கின்றனர். சீரற்ற உணவு முறை, ஜீன் பிரச்சினைகள், தினசரி செயல்கள், இல்லற வாழ்க்கை முறை போன்றவையே பெரிதும் காரணமாக இருக்கின்றன. குறிப்பாக ஆண்களின் விந்தணுவை இவை பெரிதும் பாதிக்கின்றன.

ஆணுறை பயன்பாடு...
பொதுவாக இந்த விந்தணு குறைபாடு ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது பாலியல் தொடர்பான தொற்று நோய்களே. நீங்கள் உங்கள் இணையுடன் உறவு கொள்ளும் போது இந்த வகையான நோய்கள் வரலாம். இதனை தடுக்க ஆணுறை அல்லது பெண்ணுறைகளை பயன்படுத்தலாம். இல்லையேல் இது கிருமிகளை பிறப்புறுப்புகளில் ஏற்படுத்தி விந்தணுவின் ஆரோக்கியத்தை குறைத்து விடும்.

ஒரே இடத்தில வேலையா..?
நவீன உலகின் தாக்கம் பல நோய்களுக்கு நம்மை ஆளாக்கி கொண்டிருக்கின்றது. அவற்றில் ஒன்றுதான் இந்த விந்தணு குறைபாடும். ஆண்கள் ஒரு இடத்தில உட்கார்ந்து வேலை செய்வதால் உடலுக்கு அதிக வெப்பத்தை தந்து விந்துக்களை சிதைவடைய செய்து விடும். எனவே 1 மணி நேரத்திற்கு ஒரு முறை சாதாரணமாக நடந்து வாருங்கள் நண்பர்களே.

உடற்பயிற்சி மருந்துகள்...
ஆண்களின் உடல் கட்டுமஸ்தாக இருக்க வேண்டும் என்பதற்காக எண்ணற்ற ஜிம்களை தேடி செல்கின்றனர். அத்துடன் உடல் 6 ஃபேக் உடன் இருக்க வேண்டும் என்ற ஆசையில் மிக மோசமான விளைவை தரும் ப்ரோட்டீன் மருந்துகள், பவ்டர்களை சாப்பிட்டு வருகின்றனர். இது அவர்களின் விந்தணுவின் நலனை முற்றிலுமாக குறைத்து மலட்டு தன்மையை ஏற்படுத்துமாம்.

போதுமான அளவா..?
நீங்கள் உங்கள் இணையுடன் போதுமான அளவு தாம்பத்திய உறவு வைத்து கொள்ளவில்லை என்றால் அது உங்கள் விந்தணுவின் ஆரோக்கியத்தை கெடுத்து விடும் என சில ஆராய்ச்சிகளின் முடிவுகள் சொல்கின்றது. விந்தணுவை அடிக்கடி வெளியேற்றினால்தான் அவற்றின் தன்மை சீராக இருக்குமாம்.

பதப்படுத்தப்படாத உணவுகள்...
இன்று பலரும் உணவு விஷயத்தில் கவனமே இல்லாமல் உள்ளே அனுப்பி கொண்டிருக்கின்றார்கள். குறிப்பாக பதப்படுத்தப்படாத இறைச்சிகள், காய்கறிகள் இவற்றை சாப்பிடுவதால் விந்துகளின் எண்ணிக்கை குறைந்து விடுகிறது. எனவே இது குழந்தையின்மையை ஏற்படுத்துகிறது.

மது விந்துக்கும் கேடுதான்..!
மது எந்த அளவிற்கு உடல் ஆரோக்கியத்தை கெடுத்து விடுமோ, அதே அளவிற்கு அது விந்தணுவின் நலனையும் கெடுக்குமாம். அதிகமாக மது அருந்துபவர்களின் விந்துகள் மோசமான நிலையை அடைய கூடுமாம். அத்துடன் இது விந்தணுவின் உற்பத்தியை முற்றிலுமாக பாதித்து விடும்.

டெஸ்டோஸ்டெரோன் மருந்துகள்...
ஆண்களின் ஹார்மோனாக கருதப்படுவது இந்த டெஸ்டோஸ்டெரோன் தான். இவை உடலில் இயல்பாக சுரந்தால் அது மிக நன்மையே. ஆனால், இவற்றின் சுரத்தல் குறைவாக இருக்கிறது என்பதால், டெஸ்டோஸ்டெரோன் மருந்துகளை உட்கொண்டால் அது கட்டாயம் ஆபத்தையே ஏற்படுத்தும். இதற்கு பதிலாக நிறைய சத்தான உணவுகளை சாப்பிட்டாலே போதும்.

லேப்டாப்பும் விந்துவும்..!
இன்று அதிக அளவில் ஆண்கள் செய்யும் மிக பெரிய தவறு இதுதான். லேப்டாப்பை அவர்களின் மடியில் வைத்து பயன்படுத்துவதே. இது விந்தணுவில் வெப்பத்தை ஏற்படுத்தி அவற்றை அழிக்க கூடியதாம். ஆண்களுக்கு பொதுவாக உடலில் உஷ்ணம் அதிகமாக இருந்தால் அவர்களின் விந்தணுவை பெரிதும் பாதிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

போதுமான வைட்டமின் சி இல்லையா..?
வைட்டமின் சி மிகவும் முக்கியமான ஒன்றாகும். விந்தணுவின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் இதன் பங்கு அவசியமானது. ஆண்களின் உடலில் போதுமான அளவு வைட்டமின் சி இல்லையென்றால், அது கட்டாயம் விந்துகளின் உற்பத்தியை பாதிக்க செய்யும். எனவே வைட்டமின் சி அதிகமுள்ள உணவுகளை சாப்பிடுங்கள்.

மன அழுத்தம் எப்படி..?
மன அழுத்தம் என்பது உடலின் முழு செயல்பாட்டையும் முற்றிலுமாக கெடுக்க கூடிய ஒன்றாக கருதப்படுகிறது. மன அழுத்தமானது cortisol என்ற ஹார்மோனை வெளியிடும். இது ஆண்களின் விந்துவின் ஆரோக்கியத்தை அதிகம் பாதிக்கும். அத்துடன் இதய நோய்களையும் சேர்த்தே ஏற்படுத்தும்.

இறுக்கமான உடைகள்...
இன்றைய நவ நாகரிக உலகத்தில் நாம் செய்யும் பல செயல்கள் நமது நலனை அதிகம் பாதிக்கின்றது. அந்த வகையில் இந்த உடைகளும் அடங்கும். ஆண்கள் இறுக்கமான பாண்ட்களை அணிந்தால் விந்தணு உற்பத்தி பாதிக்க செய்யும். எனவே, இறுக்கமான உடைகள் அணிவதை தவிர்த்து விடுங்கள் நண்பர்களே.

போதை மாத்திரைகளே காரணம்..!
இன்று பல ஆண்கள் அடிமையாகி கொண்டு இருக்கின்ற ஒரு பழக்கம் இந்த போதை மாத்திரைகள்தான். இப்போதெல்லாம் 15 வயது நிரம்பி சிறுவர்கள் முதல் இதனை அசாதாரணமாக பயன்படுத்துவதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றது. போதை மாத்திரைகளை சாப்பிட்டால் இது கட்டாயம் உங்கள் விந்தணுவின் சிதைவிற்கு மூல காரணமாக இருக்கும்.

செல்போனும் விந்துவும்...
பலர் செல்போனை தங்களது பாக்கெட்களில் வைப்பது வழக்கம். அனால். இவற்றில் இருந்து வெளியேறும் கதிர் வீச்சுகள் பிறப்புறுப்புக்ளை பாதித்திப்பதோடு விந்துணவை சிதைக்கவும் செய்யும். அத்துடன் சிலர் செல்போனை அருகில் வைத்து கொண்டு உறங்கவும் செய்வர். இதுவும் முற்றிலும் தவறான விஷயமே.

உடல் பருமன்...
ஒருவர் அதிக உடல் எடை உள்ளவராக இருந்தால் அவரின் ஹார்மோனில் மாற்றங்களை ஏற்படுத்தும். இது சில சமயங்களில் விந்துவின் உற்பத்திக்கும் தடை செய்ய வாய்ப்புகள் உள்ளது என ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆய்வுகள் சொல்கின்றது.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.



Click it and Unblock the Notifications











